சரி விசயத்திற்கு வருவோம் ,
நாம் பக்திக்காக இரவு பகல் பாராது பக்தி ஊர்வலத்தில் கலந்து கொண்டு நடைபயணம் செல்வோம். அப்பயணத்தை இறைவன் நமக்கு அங்கீகரிப்பனா ? ஏற்றுகொள்வனா ? என்று ஒவ்வாரு பக்தர்களும் சிந்திக்க வேண்டும்.
ஏனென்றால், நாம் செல்லும் பக்தி ஊர்வலத்தில் பல பிரார்த்தனைகளை, இதன் மூலம் நமக்கு ஓர் நல்ல களம் பிறக்கும் என்ற நம்பிக்கையுடன் செல்வோம். ஆனால் ஊர்வலத்தில் வாசிக்கப்படும் மேல தாளங்கள் எதற்கு?
நான் இங்கு எந்த ஒரு மததையும் தவறாக சொல்லவில்லை.
பக்தி ஊர்வலத்தின் போது நல்ல சிந்தனையை மக்களுக்கு எடுத்துச்சொல்லலாம் . இல்லையென்றால் ஊர்வலத்தில் போகும் அவர்கள் இறைவனின் புகழை பாடலாம் . மக்கள் இதை கேட்டு பயனடைவார்கள் .
அதை விட்டுவிட்டு சினிமா அர்த்தமற்ற பாடல்களையும் , பட்டாசுகளையும் அரங்கேற்றினால் யாருக்கு என்ன பயன் ?
அதே போல் திருமண மணமக்கள் ஊர்வலத்தின் போதும் மணமக்களுக்கு வாழ்த்து (சினிமா அல்லது மத ) பாடல்கள் பாடாமல் சம்பந்தமே இல்லாத சினிமா பாடல்களை பாடி அந்த பாட்டிற்கு குடும்பமே ஆடிக்கொண்டு ஆடிகொன்டுபோவது நல்லதல்ல .
ஏதோ என் மனதிற்கு பட்டதை சொன்னேன்.
நிறை இருந்தால் மற்றவர்களிடம் சொல்லுங்கள் !
குறை இருந்தால் தங்கள் கருத்துக்களை அனுப்புங்கள் !!