V

SSLC MARK 2012- CHENNAI GRAPHIX

mba.basheer

Welcome to my website. join with us

quick search

Saturday, May 2, 2015

உங்களுக்குள் தாழ்வு மனப்பான்மையா? இத படிங்க முதல்ல,,,,

  அன்பான எனது இணைய வாசகர்களுக்கு சில நாட்களாக பதிவு செய்யாததற்கு முதலில் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன்,

சரி விசயத்திற்கு வருவோம்,,

நம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான தாழ்வு மனப்பான்மைகள் இருக்கலாம், அதாவது வசதி .  உடல்நலம்,, தொழில்,,, பேச்சு என கூறிக்கொண்டே போகலாம், 

ஒருவர் தொடக்கம்(பிள்ளைபருவம்) முதலே அனைத்தையும் கற்றுக்கொண்டுவருவதில்லை,, அவர் வளர்ச்சி,, படிப்பு, இளமைப்பருவம்,, பள்ளிப்பருவம்,, கல்லுரி காலம்,, வாலிப பருவம்,,   திருமண பருவம் என இதையெல்லாம் தாண்டி வரும்போது இந்த ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு அனுபவத்தையும்,,,  பாடத்தையும் கற்றுக்கொள்கிறான், ஆக அடிப்பட்டு அடிப்பட்டே ஒவ்வொன்றையும் கற்றுக்கொள்கிறேன், நாமும் அப்படியே என்று நமக்கு இன்னும் காலம்இருக்கிறது நம்மால் முடியும், நாம் எதை செய்யவேண்டும்,, எதிலிருந்து ஆரம்பிக்க வேண்டும், எதனால் இந்த காரியம் வெற்றி அடைந்தது, அல்லது எந்த படியில் இந்த காரியம் தோல்வி அடைந்தது,, என்று ஆராய்ந்தாலே நாம் எந்த ஒரு விசயத்தையும் வெற்றிகரமாகவும், அல்லது ஒருபாடமாகவும் இருக்கும்,  இதனையறியாமல் செயல்பட்டால் நம்மால் இது இயலவில்லையே, நமக்கு மட்டு்ம் ஏன் இப்படி - என்று கடவுள் மீது பழிப்போட்டு நம்மை தாழ்வுமனப்பான்மை கொண்டவராகவே செயல்படுவாேம்,,

எனவே இதை பாேக்க உங்களுக்குள் சில மாற்றங்கள் ஏற்படுத்த வேண்டும்,
அப்புறம் என்ன, வெற்றி,,,வெற்றி,,, வெற்றி
இத படிங்க முதல்ல 
1. நீங்கள் அழகு என்பதை முதலில் நீங்கள் நம்புங்கள். நிறத்திற்கும் அழகிற்கும் சம்பந்தமில்லை என்பதை ஏற்றுகொள்ளுங்கள். யாரும் சொன்னாலும் ரசித்தாலும் தான், நான் அழகு என்று நினைப்பதை நிறுத்துங்கள். உங்களை நீங்களே ரசியுங்கள்.
2. எந்த மொழி சரளமாக பேச முடியவில்லை என்றாலும் கவலை கொள்ளாதீர்கள். உங்களை நக்கல் செய்பவரிடம் துணிச்சலாய் எதிர்த்துத் சொல்லுங்கள் இங்கு பலருக்கு அவரவர் தாய் மொழியையே சரியாகப் பேசத் தெரியாதென்று.
3. உங்களால் எது முடியாது. உங்களுக்கு எது தெரியவில்லை என்று யாரேனும் சொன்னாலும், அதை விரைவில் கற்றுக் கொண்டு முடித்துக் காட்ட வெறித் தனமாய் முயற்சி செய்யுங்கள்.
4. என் வாழ்க்கை சோகம் நிறைந்தது என்று நினைக்காதீர்கள். எல்லாம் நிறைவாய் இருக்கும் வாழ்க்கை இங்கு யாருக்குமே அமைவதில்லை என்பதே உண்மை.
5. உங்களுக்கு எதுவும் தெரியாது. எதிரில் நிற்பவருக்கு எல்லாமே தெரியும் என்று ஒரு போதும் நினைக்காதீர்கள். இந்த எண்ணம் இருந்தால் நீங்கள் சொல்ல வந்ததை சரியாக தடுமாற்றம் இன்றி சொல்லி முடிக்க முடியாது.
6. கேள்வி கேட்பதற்கும் உங்களை முன் நிறுத்துவதற்கும் மொழி புலமை அவசியம் என்று நினைக்காதீர்கள். உலகில் சரியாக சிந்திக்க வைத்த கேள்விகளை கேட்ட நிறையப் பேர் மொழிப்புலமை இல்லாமல் தங்களுக்கு தெரிந்த வார்த்தைகளைக் கொண்டு தங்கள் கேள்விகளை சரியாக புரியவைத்தவர்கள்.
7. அழும் போது தனியாக அழுங்கள். நீங்கள் அழைத்தாலும் சேர்ந்து அழ இங்கு யாரும் வரப்போவதில்லை என்பதை ஏற்றுக் கொள்ளுங்கள். கண்ணீரில் துக்கத்தை கரைத்து தூர எறிந்து விட்டு முன் செல்லுங்கள்.
8. உங்கள் அன்பு எந்த இடத்தில் நிராகரிப்பட்டாலும் இழப்பு உங்களுக்கில்லை,நிராகரித்த்வருக்கே என்பதை புரிந்துக் கொள்ளுங்கள்

No comments:

Post a Comment

messages & practical website