V

SSLC MARK 2012- CHENNAI GRAPHIX

mba.basheer

Welcome to my website. join with us

quick search

Wednesday, September 26, 2012





நாம் தினமும் இணையத்தில் பல தளங்களை பார்க்கின்றோம் . சில பிடிக்கலாம் , சில பிடிக்காமல் போகலாம் . ஆனால் அவசர உதவிக்கு சில தளங்களை நாம் பார்க்க வேண்டி இருக்கும் . சரியான முகவரி தெரியாததால் தேடு பொறிகளில் தேடி எடுப்போம் . அப்படி அடிகடி தேவை படும் சில இணையதளங்கள் தொகுத்து அளிக்கின்றேன் ..
 
முதல்  பகுதிக்கு : 
 


விலங்குகள் வளர்ப்பு :



















ஆபரணங்கள் :




























தகவல் களஞ்சியம் :















வினாடி வினா :










இணையம் என்பது ஒரு கடல் அதில் சில துளிகளை மட்டுமே இங்கு பகிர்ந்துள்ளேன்

pesum kalai_jeyikkalam vanga நண்பர்களே..!
வாயுள்ள பிள்ளை பிழைக்கும்.. இது அடிக்கடி என்னுடைய பாட்டி எனக்குச் சொல்லிக்கொடுத்த மந்திர வார்த்தை..
நம் உள்ளத்தில் தோன்றும் எண்ணங்களை, நம் எதிரில் இருப்பவர்கள் தெளிவாக புரிந்தகொள்ளும்பொருட்டு வார்த்தைகளாக வெளிப்படுத்துவது என்பது ஒரு கலை. வாயிலிருந்து வெளிப்படும் வார்த்தைகளாக தெளிவாக இருக்குமானால், எதிரில் இருப்பவர்கள் நம்முடைய எண்ணங்களைப் புரிந்துகொள்வார்கள்.
அதுமட்டுமா? நம்முடைய எண்ணங்களை தெளிவான வார்த்தைகளில் கூறுவதன் மூலம் கேட்பவர் மனதிலும் அந்த வார்த்தைகள் அப்படியே பதிந்துவிடும். அந்த வார்த்தைகளை சொல்லக்கூடிய தருணம், முகபாவம் ஆகியவை முக்கியம்.
நம்மைவிட பெரியவர்களிடத்தில் எப்படி பேச வேண்டும். சக தோழர்களிடம் எப்படி பேச வேண்டும். சபையோர்களிடத்தில் எப்படி பேச வேண்டும் என ஒரு வரைமுறையே, வரையறையே இருக்கிறது.
பொதுவாக நம்முடைய கருத்தை ஒருவரிடத்தில் சொல்லும்போது தெளிவாக, புன்முறுவல் கலந்து, இயல்பான முகபாவனையுடன் சொல்வோமானால் நிச்சயம் அந்த கருத்தை அவர் ஏற்றுக்கொள்வார் என்பதில் சந்தேகமே இல்லை.
ஏளனத்துடன், கேலியும் கிண்டலும் கலந்து நீங்கள் உண்மையையே பேசினால் கூட அதை நம்ப மறுப்பார்கள். இந்த முறையாலும் நீங்கள் மற்றவர்களைக் கவர முடியாது என்பதோடு மட்டுமல்லாமல், எதிரில் இருப்பவர் தன்னை அவமானப் படுத்திவிட்டதாக எண்ணிவிடும் அபாயமும் உண்டு.
கடுகடு முகத்துடன், சிடு சிடு வெனப் பேசி, ஒரு கருத்தைச் மற்றவர்களிடம் சேர்க்க நினைக்கும்போது, அந்த கருத்தால் எதிரில் இருப்பவர் மனம் பாதிப்பதோடு, சொல்லுகிற கருத்தையும் ஏற்றுக்கொள்கிற மனநிலையை நாம் இழக்க வைத்துவிடுகிறோம். இதனால் மேலும் பிரச்னைகள் கூடுமே தவிர, குறையவே குறையாது. இவ்வாறு பேசுவதால் உங்களுடைய கருத்துகளையும் பிறர் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்பது மட்டுமல்ல.. உங்களுடைய கருத்திற்கு மதிப்பும் இருக்காது.
எனவே எளிமையாக, இனிமையாக, இயல்பாக மனதில் மகிழ்ச்சி பொங்க சொல்ல வந்த கருத்தை தெளிவாக கூறுங்கள்.
அவ்வாறு தெளிவாக வார்த்தைகளை உச்சரித்து பேசுவதால், கேட்பவர்களின்  மனதில் உங்களுடைய கருத்து ஆழ பதியும்.  இதற்கு எடுத்துக்காட்டாக நமது ஆன்மீக சொற்பொழிவாளர் திரு. சுகி சிவம் ஐயா அவர்களைக் கூறலாம். மேடையில் அவர் பேசும்போது உச்சரிக்கும் விதம், வெளிவரும் சொற்களில் ஓசைநயம், அழுத்தம் ஆகியற்றை உன்னிப்பாக கவனித்தால் இக்கலை உங்களுக்கும் கைகூடும்.
உரையாடல் தெளிவாக அமைந்துவிட்டால், அதன் மூலம் நாம் சொல்லக்கூடிய கருத்துகள் மற்றவர்களை அடைவதோடு மட்டுமல்லமால், நல்லதொரு நட்பையும் நாம் பெற்றுக்கொள்ள முடியும்.
வாயுள்ள பிள்ளை பிழைக்கும் என என் பாட்டி சொன்னதிற்கான சரியான அர்த்தம் இப்போதுதான் எனக்கு புரிபட ஆரம்பித்திருக்கிறது? ஆரம்ப கால  பள்ளி நாட்களில் "வாயுள்ள பிள்ளைப் பிழைக்கும் என்று சொல்கிறீர்களே... அது என்ன வாயு பாட்டி" என்று என் பாட்டியிடம் திருப்பிக் கேட்டிருக்கிறேன்.
"சுவாசத்திற்கு தேவையான வாயு ஆக்சிஜனா என்றெல்லாம் கேட்டு கேலியும் கிண்டலும் செய்திருக்கிறேன்." தற்போதுதான் அவர்கள் சொன்ன ஒவ்வொரு வார்த்தைகளுக்கும் ஒவ்வொரு அர்த்தம் இருக்கிறது என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.
வாயுள்ள பிள்ளை - நன்றாக பேசி, தெளிவான வார்த்தைகளை வெளிப்படுத்தி பிறர்மனதில் பதியவைப்பது என்பது தான்  இதனுடைய சரியான அர்த்தம் என்பது இப்போதுதான் என்னால் உணர முடிகிறது. புரிந்துகொள்ள முடிகிறது.
உங்களுடைய எண்ணங்களை எதிரில் இருப்பவரிடம் தெளிவான வார்த்தைகளால் வெளிப்படுத்தி, தான் சொல்ல வந்ததை சரியாக எடுத்துச்சொல்லி,  கருத்தைப் பதிந்தாலே போதும். நீங்களும் ஒரு வெற்றியாளர்தான். இதுதான் பேசும் கலை.. இதுவே ஜெயிக்கும் கலை..!
அலுவலகம் ஆனாலும் சரி, பொது இடமானாலும் சரி, வியாபாரத் தொடர்பான உரையாடல் ஆனாலும் சரி.. வேறு தொடர்பு உரையாடல்களானாலும் சரி...
இவ்வாறு தெளிவாக பேசக்கூடியவர்கள் என்றும் வெற்றிபெற்றவர்களாகவே, வெற்றியை எப்போதும் தன்னுடன் வைத்துக்கொண்டிருப்பவர்களாகவே வலம் வருகிறார்கள்.. உங்கள் கருத்துகளை சொல்வதில் நீங்கள் எப்படி ? நீங்களும் வாயுள்ள பிள்ளைதானே...???!!!

வாழ்க்கையை வெறுத்தவர்களுக்கான கதை

கதைக்குள் பயணிக்கும் முன்... 

(முன்னெச்சரிக்கை:)

னக்கு வாழ்க்கையே பிடிக்க வில்லை, என்னுடன் யாருமே சரியா பேசமாட்டேன்-கிறார்கள்,எனக்கு மட்டும் ஏன் இந்த மாதிரி எல்லாம் நடக்கிறது,எனக்கு ராசியே இல்லை,நான் துவங்கும் காரியங்கள் வெற்றி அடைவதே கிடையாது...பேசாமல் செத்து போய் விடலாம்... என்று
வார்த்தைகளை மனதிற்குள் கூறிய படியே ,புலம்பல்களுடன் நடந்து கொண்டிருந்தேன்.
   ப்படி சாகலாம் என்று யோசித்த எனக்கு தன்னை அறிமுகபடுத்திக்கொண்டது எங்கள் வீட்டிற்கு அருகே இருந்த அந்த பெரிய மலை .மலையின் மீது ஏறி அங்கிருந்து குதித்து செத்து விடலாம் என்று என் வாழ்க்கையிலேயே முதன்முறையாக நம்பிக்கையுடன் மலையின் மீது ஏற துவங்கினேன்....
   அது உயரமான மலை,மலை மீது ஏறும் போது தான் என் மனம் இப்படி சிந்திக்க துவங்கியது."சாவதற்கு எத்தனையோ எளிய வழிகள் இருக்கும் போது நான் ஏன் இதை தேர்வு செய்தேன்"(உங்கள் மனதில் "விண்ணை தாண்டி வருவாயா சிம்பு பேசும் வசனம் நினைவுக்கு வரலாம்).என்று நினைத்து கொண்டேன்.சாவிற்கு நான் எடுத்த முயற்சி கூட தோற்றுவிடுமோ என்கிற அச்சத்தில் "கடவுளே!" என்று அழுது புலம்பினேன்...
 இடி சத்தம்..... பயங்கர வெளிச்சம்......ஒரு சிறு நடுக்கம்.....நான் மலையிலிருந்து கீழே விழுந்து விட்டேன்.சில வினாடிகள் கடந்திருக்கும் புவி ஈர்ப்பின் வேகம் என்னை கீழே இழுத்த்து...நான் கீழே விழுந்து கொண்டிருந்தேன்... சாவை நெருங்கும் போது தான் சாவின் பயம் தெரிகிறது...
"நான் சாக விரும்ப வில்லை ,வாழ வேண்டும்...எனக்கு பயமா இருக்கு கடவுளே என்னை காப்பாத்து..."
கீழே விழுந்து விட்டேன்..

"மலையிலிருந்து கீழே விழுந்தும் நான் ஏன் சாகவில்லை?".
என் அருகே ஒரு நபர் நின்று கொண்டிருந்தார்,ஆஜானபாகுவான உருவம்,அழகான தோற்றம்,அவரிடம் நான் மெல்ல கேட்டேன்  "நீங்க யாரு?"
 ஹா...ஹா... இது அந்த புது ஆசாமியின் சிரிப்பு...
சிரித்து முடித்து விட்டு பேச துவங்கினார்.... "நீ கீழே விழும் போது என்னை கூப்பிட்டாய் அதனால் தான் வந்தேன்..."
 "நான் உங்களை கூப்பிட வில்லையே..." இது நான்
"கடவுளே என்னை காப்பாத்து என்று என்னை அழைத்தாய் அதனால் தான் உன்னை காப்பாற்றினேன்...நீ இன்னும் சாகாமல் இருக்க நான் தான் காரணம்."
ஹா...ஹா... இது என் சிரிப்பு..
மதங்கள் எனக்கு கற்பித்த கடவுளுக்கும் இவருக்கும் ஆயிரம் வித்தியாசங்கள்...மிக சாதரணமாக இருந்தார்...கையில் ஆயுதங்கள் இல்லை..என் மதத்தில் சேர்ந்து கொள் என்று என்னிடம் அவர் சொல்லவே இல்லை...
திரைப்பட பாணியில் "நீங்கள் கடவுள் தான் என்பதற்கு ஆதாரம் என்ன...? ஏதாவது மாயாஜாலங்கள் செய்து காட்டுங்கள் " என்று எனக்கு கேட்க தோன்றவில்லை..
அவர் கடவுள் தானா என்ற தர்க்க ஆராய்ச்சி செய்ய என் மனதில் சக்தி இல்லை.என்னை சாவிலிருந்து காப்பாற்றிய அவர் எனக்கு கடவுளாகாவே தெரிந்தார் "என் சாவிற்கு காரணமான சங்கதிகளை கண்ணீர் துளிகளுடன்  அவரிடம் கொட்டி வைத்தேன்...,

அந்த மலைக்கு அருகிலிருந்த காட்டிற்குள் என்னை அழைத்து சென்றார்...மூங்கில் காடு அது...தரையெங்கும் புற்கள்...  சரசர சத்தத்துடன் நானும் கடவுளும் காட்டிற்குள் நடந்து கொண்டிருந்தோம்....
கடவுள் பேச துவங்கினார்....
"நான் இந்த காட்டில் புல்லையும் ,மூங்கிலையும் ஒரே நேரத்தில் தான் விதைத்திருந்தேன்....சில நாட்கள் கடந்திருந்தன..புல் மெல்ல தலை நீட்ட துவங்கியிருந்தது...மூங்கில் விதைக்கப்பட்ட இடத்திலிருந்து ஒரு சுவடும் இல்லை,சில மாதங்கள் சென்றன, புல் செழித்து வளர்ந்து தரை முழுக்க பசுமையாக பரவி இருந்தது..மூங்கில் இருந்த இடத்தில் வளர்ச்சிக்கான சிறு தடம் கூட இல்லை
ஒரு வருடம் கடந்திருக்கும் சிறு முளையாக தரையை முட்டிக்கொண்டிருந்தது மூங்கில்.புல்லை விட அது சிறியதாக தான் இருந்தது.அருகில் இருந்த புல்லுடன் அது தன்னை ஒப்பிட்டு பார்க்கவில்லை.
இரண்டாம் வருடம் புல்லை விட வலிமையாகவும் ,உயரமாகவும் வளரத்துவங்கியிருந்தது, மூன்று வருடங்கள் கடந்திருக்கும் உயர...உயர... உயர்ந்து கொண்டிருந்தது மூங்கில்... காட்டின் மிக உயர்ந்த மரமாக அது சில வருடங்களில் வளர்ந்திருந்தது.
புல் முளைக்க ஆரம்பித்திருந்த தருணங்களில் புதைந்திருந்ததாக நம் கண்களுக்கு தெரிந்த அந்த மூங்கில் கீழே தன் வேர்களை பரப்பி கொண்டிருந்தது.எவ்வளவு உயர்ந்து வளர வேண்டுமோ அவ்வளவு கீழே நம் வேர் இருக்க வேண்டும்.புல் வெளியே தலை காட்ட துவங்கியிருந்த பொழுதுகளில் மறைவாக மண்ணிற்குள் புதையுண்டு,தன் வேர்களை கீழே செலுத்தி கொண்டிருந்தது மூங்கில் மேலே உயர்வதற்காக..."


நான் கடவுளை இடைமறித்தேன் என் மனதில் இருந்த்தை அவரிடம் கேட்டு விட்டேன்.."என்னை நீ ஏன் கஷ்டப்படுத்த வேண்டும்??,என் வாழ்வில் தொடர் தோல்விகள் ஏன் வர வேண்டும்.??"
"சந்தோசத்தை முழுமையாக அனுபவிக்க கவலைகள் அவசியம்...வெற்றி இனிமை நிறைந்ததாக இருக்க தோல்விகள் அவசியம், உயரமாக வளர...ஆழமாக வேர் செலுத்துதல் அவசியம்...."
" கடவுள் இருக்கிறாரா? இல்லையா? என்கிற கேள்வியில் இப்போது எனக்கு நம்பிக்கை இல்லை எனக்கு புது வாழ்வு தந்த அந்த நபர் கடவுளாக தான் காட்சி அளித்தார்"
கண் விழித்து பார்த்தேன் என் எதிரே கம்பீரமாக உயர்ந்து நின்று கொண்டிருந்தன காடு முழுவதும் மூங்கில் மரங்கள்...

சிகரட்டை சிம்பிள்ளாக நிறுத்த வழி இருக்கு! இத முதல்ல படிங்க!


எப்படிப்பா இந்த சிகரெட் ´குடிக்கும்´ பழக்கத்தை நிறுத்துவது…உலகம் முழுவதும் இதே பிரச்சினைதான்!. எத்தனையோ உபாயங்களை பலரும் சொல்கிறார்கள், என்னென்னவோ பண்ணிப் பார்க்கச் சொல்கிறார்கள். ஆனால் புகை பிடிப்பதை அடியோடு நிறுத்த அல்லது வெகுவாக குறைக்க ஒரு ஈசியான வழி உள்ளது.
புகை பிடிக்கும் பழக்கம் எல்லோருக்கும் கூடப் பிறந்தது அல்ல, இடையில் வந்ததுதான். எனவே அதை நிறுத்துவது என்பது மலையை சாய்க்கும் காரியம் அல்ல, சற்றே மனது வைத்தால் போதும். மனக் கட்டுப்பாட்டை சற்றே உறுதியோடு கடைப்பிடித்தாலே போதும் இதை எளிதில் சமாளிக்கலாம்.
சரி மேட்டருக்கு வருவோம்… சிகரெட் பிடிப்பதை நிறுத்த மிக மிக ஈசியான வழி ஒன்று உள்ளது. அதுகுறித்துத்தான் இந்த கட்டுரையே…
முதலில் நீங்கள் புகை பிடிப்பதில் ´செயின்´ ஜெயபாலா அல்லது ´அக்கேஷனல்´ ஆரோக்கியசாமியா, இல்லை´மிடில்கிளாஸ்´ மாதவனாக இருக்கலாம். ஆனாலும் நீங்கள் எப்படியாப்பட்ட ´கிங்ஸாக´ இருந்தாலும் இந்த உபாயத்தைப் பயன்படுத்திப் பார்க்கலாம் – நம்பிக்கையோடு.
- நீங்கள் ஒரு நாளைக்கு எத்தனை சிகரெட் பிடிப்பவராக இருந்தாலும் பரவாயில்லை, சிகரெட்டை நிறுத்த வேண்டும் என்று முதலில் மனதளவில் தீர்மானியுங்கள். முதலில் கஷ்டமாகத்தான் இருக்கும். ஆனாலும் கண்ணை மூடிக் கொண்டு முதலில் முடிவை எடுத்து விடுங்கள்.
- முடிவெடுத்து விட்டாயிற்றா, அதை எந்த நாளிலிருந்து அமல்படுத்துவது என்பதையும் தீர்மானியுங்கள். இப்போது முதலே நிறுத்துகிறேன் என்று சவடாலாக முடிவெடுக்க வேண்டாம். அது சாத்தியமில்லாதது. எனவே நாளையிலிருந்து அல்லது அடுத்த வாரத்திலிருந்து என்று ஒரு தேதி குறிப்பிடுங்கள்.
- முடிவு செய்த தேதிக்கு வந்துருச்சா, நீங்கள் தம் அடிக்கும் நேரம் வந்து விட்டதா.. உடனே கடைக்குப் போங்கள். ஒரு சிகரெட்டை வாங்குங்கள். ஆனால் பற்ற வைக்காதீர்கள். அதை வெறுமனே வாயில் வைத்துக் கொண்டு சிறிது நேரம் தம் அடிப்பது போல உணர மட்டும் செய்யுங்கள். ஒரு சிகரெட்டை நீங்கள் எப்படியெல்லாம் அனுபவித்து பிடிப்பீர்களோ, அந்த உணர்வு வருவது போல வாயில் வைத்து எடுங்கள். படு கஷ்டமாகத்தான் இருக்கும். இருந்தாலும் மனதைக் கட்டுப்படுத்துங்கள்.
- வாங்கிய சிகரெட்டை அப்படியே வைத்துக் கொண்டு இதே போல முதல் நாள் முழுவதும் செய்து பாருங்கள். சற்று கட்டுப்படுவது போலத் தோன்றும். ஆனால் பெரும் கஷ்டமாகவும் இருக்கும். இருந்தாலும் மனம் தளர்ந்து பற்ற வைத்து விடாதீர்கள்.
- அடுத்த நாள்தான் ´சத்திய சோதனை´யே ஆரம்பம்.2வது நாளில் நீங்கள் ஒரு சிகரெட்டை கூட வாங்கக் கூடாது. மாறாக கடைக்குப் போய் 50 காசு கொடுத்து கடலை மிட்டாயை வாங்குங்கள். சென்னைப் பக்கம் இதற்கு பர்பி என்று பெயர்,மதுரைப் பக்கம் போனால் கடலை மிட்டாய் என்பார்கள். இந்தக் கடலை மிட்டாய்தாங்க உங்களின் புகைப் பழக்கத்தை அடியோடு விரட்டப் போகும் அரு மருந்து. எனவே இதை சாதாரணமாக எடை போட்டு விடாதீர்கள்.
- 2வது நாள் முழுவதும் எப்போதெல்லாம் தம் அடிக்க வேண்டும் என்று உங்களுக்குத் தோன்றுகிறதோ அப்போதெல்லாம் ஒன்று அல்லது 2 கடலை மிட்டாய்களை வாங்கி வாயில் போட்டு சாப்பிடுங்கள். இது மிகப் பெரிய ´டைவர்ஷனை´ கொடுக்கும்- இது அனுபவ வார்த்தை எனவே நம்புங்கள். 2வது நாள் முழுவதும் உங்களுக்கு ரொம்பவே கஷ்டமாகத்தான் இருக்கும், கிட்டத்தட்ட பைத்தியம் பிடிப்பது போலவும் இருக்கும். இருந்தாலும் மனதை கட்டுப்படுத்துங்கள், டைவர்ஷனைத் தரும் வகையிலான சிந்தனைக்கு மாறிப் பாருங்கள், நிச்சயம் புகை பிடிக்கும் உணர்வை கட்டுப்படுத்த முடியும்.
- 3வது நாளில் உங்களுக்குள் பெரிய மாற்றத்தை உணர முடியும். புகை பிடிக்க வேண்டும் என்ற எண்ணம் வெகுவாக குறைந்திருப்பதை நீங்களே உணர முடியும். அப்படி ஒரு வேளை தவிர்க்க முடியாமல் தோன்றினாலும், உடனே கடைக்குப் போய் கடலை மிட்டாயை வாங்கி வாயில் போடுங்கள்.
இந்த மிக மிக எளிய முறையில் 3 நாட்களிலேயே, ஒரு வேளை உங்களால் கட்டுப்படுத்த முடியாவிட்டால் கூடுதலாக 2 நாட்களை எடுத்துக் கொள்ளலாம், உங்களது புகை பிடிக்கும் பழக்கத்தை நீங்கள் கட்டோடு நிறுத்தி விட முடியும் அல்லது குறைத்து விட முடியும்.
அது எப்படிய்யா கடலை மிட்டாயை வச்சு தம் அடிப்பதைக் குறைக்க முடியும், பெரிய டுபாக்கூரா இருக்கே என்று அவ நம்பிக்கையுடன் கேட்கிறீர்களா.. அப்படிச் சொல்லாதீங்க, நிச்சயம் முடியும். உங்களுக்கு மன உறுதியும், கட்டுப்பாடும் மட்டும்தான் இந்த சமயத்தில் மிக மிக முக்கியமாக தேவை.
இன்னொரு விஷயம், இந்த மூன்று நாட்களுமே நீங்கள் வீட்டில் உட்கார்ந்து கொண்டு இதைச் செய்து பார்க்காதீர்கள், சத்தியமாக உங்களால் புகைப் பழகத்தை விடவே முடியாது. நீங்கள் எங்கு வழக்கமாக சிகரெட் வாங்குவீர்களோ அதே கடைக்குப் போய்த்தான் இந்த ´மருந்தை சாப்பிட´ வேண்டும். அப்போதுதான் உங்களைப் பிடித்துள்ள இந்த ´நோய்´ குணமாகும்.
இதுவும் கூட ஒரு வகையில் ´சைக்கலாஜிகல் அப்ரோச்´தான். அதாவது சிகரெட்டை சிகரெட்டை வைத்தே விரட்டுவது.
விலைவாசி நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. 2.50ரூபாய்க்கு விற்ற கிங்ஸ் இன்று 6 ரூபாய்க்கு வந்து விட்டது. ஒரு நாளைக்கு நீங்கள் சராசரியாக பத்து சிகரெட்டை ´சாப்பிடுவதாக´ இருந்தால் ஒரு நாளைக்கு 60 ரூபாய் வரை செலவிட வேண்டும். ஒரு மாதத்திற்கு 1800 ரூபாய் செலாவாகிறது. ஒரு வருடத்திற்கு சராசரியாக 22,000 ரூபாய் செலவாகிறது. கேட்கவே படு கொடுமையாக இருக்கிறதில்லையா.. அதை விட மகா கொடுமை உங்களது வாழ்நாளை நீங்களே தினசரி தீவைத்துக் கொல்வது. ஒருசிகரெட்டானது உங்களது ஒரு நாள் ஆயுளைக் குறைக்கிறதாம். அத்தோடு உங்களைச் சுற்றியுள்ளவர்களையும் கூட காவு வாங்கி விடுகிறது.
எனவே இனியும் கையில்´தம்´மோடு திரியாதீர்கள்.. மனதில் தெம்போடு திரிய கடலை மிட்டாயை வாங்குங்கள், மனம் நிறைய நம்பிக்கையோடு புது வாழ்க்கையைத் தொடங்குங்கள்…
Disclaimer: கடலை மிட்டாய் என்பது ஒரு மீடியம்தான். கடலை மிட்டாய்க்குப பதில் சாக்லேட், மின்ட் என எதை வேண்டுமானாலும் நீங்கள் பயன்படுத்தலாம்… உங்களுக்குத் தேவை திசை திருப்ப உதவும் ஒரு டைவர்ஷன் மட்டும்தான். உங்களுக்குப் பிரியமானவர்களை நினைத்துக் கொண்டாலும் கூட நீங்கள் புகை பிடிப்பதை விட முடியும்…!

Monday, September 24, 2012

innocence of muslims பின்னனியில் இருப்பவரை கொலை செய்தால் $100,000

innocence of muslims பின்னனியில் இருப்பவரை கொலை செய்தால் $100,000 Posted by Kiruththikan Yogaraja on 9/23/2012 in general, latest, news, slider | 0 comments அண்மையில் innocence of muslims என்ற திரைப்படத்தின் ட்ரெயிலர் ஒன்று வெளிவந்தது.இது யு ரியூப்பில் 3 மாதங்களுக்கு முன்னரே அப்லோட் செய்யப்பட்டாலும் அண்மையில்தான் உலகம்முழுவதும் இது சர்ச்சைக்குரியதாக மாறி பல நாடுகளில் கலவரங்களை ஏற்படுத்தியுள்ளது.இதுவரை இக்கலவரங்களினால் இதுவரை 50 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.200 க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளார்கள்.இப்படத்தில் இறுதி இறை தூதரான நபி அவர்கள் சிறுவர்கள் பெண்களை கொல்லுங்கள் என ஏவும் காட்சிகள் நபி ஒரு பெண் பித்தர் போன்ற காட்சிகள், நபியை பெண்கள் துரத்தி துரத்தி செருப்பால் அடிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இப்படத்தை இயக்கியவர் 65 வயதான அலன் ரோபேர்ட் அப்லோட் செய்தவர் நேக்குலா பாஸிலி என்ற எகிப்திய கெப்பிரிக் கிறீஸ்தவர் என்று நம்பப்படுகின்றது.50 லட்சம் டொலர்கள் செலவில் இப்படம் எடுக்கப்பட்டிருக்கின்றது. இதுவரை 12,870,769 பார்வையாளர்கள் இந்த வீடியோவைப்பார்த்துள்ளார்கள். சர்ச்சைக்குரிய வீடியோ இதுதான்.... (இந்த வீடியோ கேட்கப்பட்டுக்கொண்டதற்கிணங்க நீக்கப்பட்டுள்ளது... உணர்ச்சிவசப்பட்ட முஸ்லீம்கள் விளங்கிக்கொள்ள மாட்டார்கள் என்று நினைத்தால் இங்கேயும் இப்படி சிலர் இருக்கின்றார்கள்.அதை சாதாரணமாக எடுப்பதாக தெரியவில்லை . பிரச்சனையே வேண்டாம் அதை அகற்றியாகிவிட்டது) பல நாடுகளில் இஸ்லாமிய அமைப்புக்கள் இதனால் கொந்தளித்துக்கொண்டிருக்கின்றன.யூ ரியூபில் நபிகளுக்கெதிரான வீடியோவை அகற்றுமாறு கேட்க கருத்துச்சுதந்திரத்தை காரணம்காட்டி அகற்றமுடியாது என மறுத்துவிட்டது.இன்நிலையில் அதில் நடித்த சிந்தி லீ கார்சியா லாஸ் ஏஞ்சல்ஸ் கோர்டில் யு டியூப்பில் உள்ள வீடியோவை அகற்றுமாறு வழக்கொன்றை தொடர்ந்திருந்தார்.இதற்கு சில காரணங்களை கோர்டில் முன்வைத்திருந்தார் படத்தின் நிஜ ஸ்கிரிப்ட் எனக்கு வழங்கப்படவில்லை.படத்தில் ஒலிக்கும் குரல்கூட என்னுடையதில்லை.திரைப்படத்தில் ஜார்ஜ் என்பவரின் மனைவியாக நடிப்பதாகவே நான் நம்பிக்கொண்டிருந்தேன்.அது பின்னர் நபிகளின் மனைவியாக மாற்றப்பட்டிருக்கின்றது.எனது அனுமதி இல்லாமல் படத்தில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.இதன்காரணமாக படத்தை தடை செய்யவேண்டும் என வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு வெற்றிபெற்றால் உலகெங்கிலும் நடைபெற்றுக்கொண்டிருக்கும் கலவரங்கள் முடிவுக்குவரலாம் என்று நம்பிக்கொண்டிருக்க கோர்ட் வழக்கை தள்ளுபடி செய்துள்ளது. நடிகைக்கும் இயக்குனருக்கும் இடையே ஒப்பந்தம் எதுவுமில்லை.இருந்தால் அது சமர்பிக்கப்படவில்லை.எந்தவித மாற்றத்தையும் செய்யக்கூட்டாது என்ற ஒப்பந்தமும் இடப்படவில்லை .இவற்றின் காரணமாக வழக்கை தள்ளுபடி செய்வதாக நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆனால் இப்படத்திற்கு ஆதரவுதருவதாகவும் முஸ்லீம்களின் எதிர்ப்புகளுக்கு எதிர்ப்புத்தெரிவித்தும் சில ஊடகங்களில் கருத்து வெளியிடப்பட்டுள்ளன.எரிகிற நெருப்பில் எண்ணையை ஊற்றியுள்ளன ஊடகங்கள்.பிரான்ஸ் நாட்டுப்பத்திரிகைஒன்று நபியை அவமதிக்கும் விதமாக கேலிச்சித்திரம் ஒன்றைவெளியிட்டிருந்தது. உடனடியாக உஸாரான பிரான்ஸ் அரசு தூதரகங்கள் பள்ளிக்கூடங்களை மூட உத்தரவிட்டுள்ளது. அயார்ன்ஹிர்ஸி அலி இன் நிலையில் அமெரிக்க பத்திரிகையான நியூஸ்வீக் என்ற பத்திரிகை Muslim rang என்றதலைப்பில் அட்டைப்படத்துடன் கட்டுரைஒன்றை வெளியிட்டுள்ளது.நபியையும் முஸ்லீம்களையும் விமர்சித்து சர்ச்சைக்குள்ளான வலதுசாரி சோமாலியாவை சேர்ந்த ஆதரவாளர் பெண் எழுத்தாளர் அயார்ன்ஹிர்ஸி அலி என்பவராலேயே இக்கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது.பல தீவிரவாத அமைப்புக்கள் இதற்கு எதிரான பழிவாங்கலுக்கு மக்களை அழைத்துள்ளன.அல்கொய்தாவும் அமெரிக்க தூதுவரை கொன்ற நடவடிக்கைக்கு மேலதிகமாக பல தாக்குதல்களுக்கு அழைத்துள்ளது.பல முஸ்லீம் நாடுகளில் ஆர்ப்பாட்டம் நடந்துகொண்டுதான் இருக்கின்றது. Ahmed Ghulam Bilour இது இப்படியிருக்க பாகிஸ்தானை சேர்ந்த மத்திய ரெயில்வே அமைச்சரான Ahmed Ghulam Bilour முஸ்லீம்களை அவமதிக்கும் இந்த வீடியோவை ஏற்றுக்கொள்ளமுடியாது.இந்த வீடியோவிற்கு பின்னனியில் இருக்கும் நபரை கொலை செய்தால் எனது சொந்தப்பணத்தில் $100,000 பரிசாக அளிப்பதாக அறிவித்துள்ளார். இத்தோடு நிற்காமல் தலிபான்,அல்கொய்தா தீவிரவாத அமைப்புக்களையும் அழைத்துள்ளார். said: “I also invite Taliban and Al Qaeda brothers to be partners in this noble deed.” உலக அளவில் இது பெரும் பிரச்சனையாக உருவெடுத்திருந்தாலும் அமெரிக்காவை பொறுத்தவரை கருத்துச்சுதந்திரத்தை கொண்டு இதற்கெதிரான கோசங்களை தூசியாக்கிவிடமுடியும். அமெரிக்க ஜனாதிபதித்தேர்தல் காரணமாகத்தான் அமெரிக்கா இதன் மீது கவனம் செலுத்துகின்றதோ என்றும் எண்ண தோன்றுகின்றது. நம் சகோதர வலைப்பூக்கள் தளங்களிலும் இது தொடர்பான பாதிப்புக்கள் வெளியிடப்பட்டிருந்தன. ஒரு சாரார் இது சரிதான் என்றும் கருத்து தெரிவித்திருந்தனர்.ஒரு மதத்தை சார்ந்த மற்ற மதத்திற்கு எதிரானவர்களை ஒன்றும் செய்யமுடியாது தண்டிக்கத்தான் முடியும்.ஆனால் பகுத்தறிவான கருத்தை முன்வைப்பதாக நினைத்துக்கொண்டு இவ்வாறான கருத்துக்களுக்கு எண்ணை ஊற்றுவதால் மேலும் பற்றி எரியுமே தவிர தீ அணையாது.சமயத்தால் ஏற்படும் அழிவுகளை மூட நம்பிக்கைகளை தட்டிக்கேட்க அல்லது அழிக்க அல்லது மாற்ற பகுத்தறிவு பயன்படலாம். ஆனால் பகுத்தறிவாளர்களாலேயே இவ்வாறான கலவரங்களை உருவாக்கிவிட முடிந்தால் உங்களது கொள்கைகளுக்கும் சமய நம்பிக்கையாளர்களுக்கும் வித்தியாசம் இல்லாது போய்விடும்.எந்த தீயை நீங்கள் அணைக்க முயல்கின்றீர்களோ உங்கள் வடிவிலேயே அதை எரியவைத்தால் பகுத்தறிவு என்ற வசனம் அர்த்தமற்றது. தமது சமய மார்க்கத்தை மறந்து உணர்ச்சிவசத்தில் முஸ்லீம்கள் இதற்கு எதிராக போராடிவருகின்றார்கள்.இன்னிலையில் சமய சகிப்புத்தன்மை என்பவற்றை கேட்கும் நிலையில் அவர்கள் இல்லை.ஒரே வழி அந்த சர்ச்சைக்குரிய வீடியோவை நீக்கிவிடுவதுதான்.சகலவற்றைவிடவும் மனித உயிர்கள் மதிப்புமிக்கவை..கொள்கைகளைக்காப்பாற்றவாவது மனிதர்கள் வேண்டுமல்லவா?

SUN MUSIC + PEOPLE = FOOL & SAD FEEL

மக்களை முட்டாள்களாக்கி காசு பார்க்கும் சன் மியூசிக்... நீங்கள் சாலையில் நடந்து போகிறீர்கள்...திடிரென உங்கள் முன் ஒருவர் வந்து நடனமாடினால் எப்படி இருக்கும்?உங்களை பார்த்து பாட்டு பாடுங்கள் என சொல்லி வம்பு இழுத்தால் டென்சன் ஆகுவீர்களா இல்லையா? நீங்கள் நடந்து போகும்போது உங்களை பார்த்து இரண்டு பேர் சிரித்துகொண்டே உங்களை கிண்டல் பண்ணினால் எப்படி உணருவீர்கள்? சாலையில் போகும் உங்களிடம் அட்ரெஸ் கேட்பதுபோல பேசிக்கொண்டு உங்கள் மீது பேனா மை கொட்டுவதுபோல செய்தால் கோபம் வருமா வராதா? பைக்கில் போகும் உங்களை மூணு போலீஸ்காரர்கள் நிற்க வைத்து அதை இதை சொல்லி வா காவல் நிலையத்துக்கு என சொன்னால் என்ன செய்வீர்கள்? ஒரு பெண் உங்களிடம் வந்து அவசரமா ஒரு போன் பண்ணனும் என உங்கள் செல்போனை வாங்கி கொண்டு திருப்பி தராமல் பேசுவதுபோல ஆக்டிங் செய்து கொண்டு இருந்தால் ஓங்கி ஒரு இழுப்பு இழுப்பீர்களா இல்லை சும்மா விடுவீர்களா? இத்தனையும் தினமும் நடந்து கொண்டுதான் இருக்கிறது...கேண்டிட் கேமரா ,வடை போச்சே போன்ற நிகழ்சிகளின் போர்வையில் ஏதாவது ஒரு டிவி காரன் நடத்தி கொண்டுதான் இருக்கிறான்....இப்ப சன் மியூசிக்கில் வடை போச்சே அப்படின்னு இந்த நிகழ்ச்சியை பண்றானுக...டி ஆர் பி ரேட்டிங்கில் அவர்களின் நிகழ்ச்சி மேலே செல்வதற்கு பொதுமக்கள் பகடை காயாம் ! அட கன்றாவி பயலுகளா!நீங்க நிகழ்ச்சி ஒளிபரப்பி காசு பார்ப்பதற்கு சாலையில் ஆயிரம் வேலைகளுடன் கடந்து போகும் பொது மக்கள்தானா கிடைத்தார்கள்? நேற்று அப்படிதான் ஒரு பைக்கை நிற்பாட்டி போலீஸ் உடையில் மூன்று பேர் இரண்டு அப்பாவிகளை அதை இதை சொல்லி மிரட்டுவதுபோல கலாயித்து கொண்டு இருந்தார்கள்...அப்புறம் அந்த நபர் அழுது விடும் சூழ்நிலைக்கு வந்த பின்னர் நாங்க சன் மியூசிக் தான்..சும்மா நிகழ்சிக்காக இப்படி பண்ணினோம் என்று சொல்கிறார்கள்....ஏண்டா லூசு பயலுகளா நிகழ்ச்சி என்ற போர்வையில் மக்களை முட்டாள்களாக்கி நீங்க என்ன வேணும்னாலும் பண்ணி பணம் பார்ப்பிங்க....நாங்க வாயை மூடி கொண்டு போகணும்? நம் முன் வந்து டான்ஸ் ஆடுவது,சிரிப்பது, வம்பு இழுப்பது போன்றவைகள் ஒரு பக்கம் இருக்கட்டும்....போலீஸ் உடையில் எப்படி ஒருவன் வந்து நிகழ்ச்சி என்ற போர்வையில் மிரட்டலாம்?கலாயிக்கலாம் ? நிஜ போலீஸ் ,சும்மா போலீஸ் என பொது மக்கள் எப்படி அடையாளம் காண்பார்கள்?ஒருவேளை உண்மையான போலீஸ் நீங்கள் பைக்கில் போகும்போது உங்களிடம் லைசென்ஸ் கேட்டு நீங்கள் அதை டிவி போலீஸாக இருக்குமோ என நினைத்து பதில் சொன்னால் அவர்கள் காண்டாகி பதம் பார்த்து விட மாட்டார்கள் இதற்கெல்லாம் வேறு யாரும் வந்து முடிவு கட்ட மாட்டார்கள்.. நாம்தான் பதிலடி கொடுக்கணும்....இதுபோல ஏதாவது என் முன் நடந்து என்னை கலாயித்து விட்டு நாங்கள் சன் மியூசிக் நிகழ்ச்சிக்காகத்தான் இப்படி செய்தோம் என கூறினால் ஓங்கி நாலு அப்பு அப்பிடுவேன்...நாளை உங்களுக்கும் நடக்கலாம்...என்ன செய்ய போகிறீர்கள் நண்பர்களே...? இது சும்மா ஒரு நிகழ்ச்சிதானே இதை ஏன் போயி பெரிதுபடுத்திகிட்டு என கேட்பவர்களுக்கு .......நாளை நீங்கள் ஏதோ மன கஷ்டத்தில் ,அல்லது ஏதோ அவசரத்தில்,அல்லது மருத்துவமனைக்கு போகும்போதும் கூட உங்களை அவர்கள் இப்படி கலாயிக்கலாம் ...அப்ப என்ன செய்வீர்கள்? மக்களை கேனயனாக்கி அதை டிவியில் காட்டி அந்த மக்களையே பார்க்கவைத்து அந்த TVக்காரன் லாபம் பார்ப்பான் ....அதை நாம வேடிக்கை பார்த்துவிட்டு டேக் இட் ஈசின்னு எடுத்துகிட்டு போக முடியுமா?போங்கடா நீங்களும் உங்க நிகழ்ச்சியும்....!

Tuesday, September 4, 2012

இவர்களை பாராட்டலாமே





சினிமாவில் தான் அதில் நடிக்கும் பல நாயகர்கள் ஹீரோ ஆக முடிகிறதே தவிர நிஜ வாழ்கையில் பெரும்பாலானவர்களது நிலைமை உங்களுக்கு சொல்லி தெரிய வேண்டிய அவசியம் இல்லை ...அவர்கள் படங்களில் சில அபாயகரமான காட்சிகளில் நடிக்ககூட மாட்டார்கள் ...காரணம் மரண பயம் ..இதில் மரணத்தை பற்றிய பஞ்சு வேறு....ஆனால் இவர்களுக்காக ஒரு கூட்ட்டமே இருக்கிறது கொடிபிடிக்க ...தலைவா என கூச்சலிட ...அவர்களது பெயரை பச்சை குத்த ...இப்படி இவர்களை பற்றி கூறிக்கொண்டே போகலாம் ...அவர்களுக்கு பலசமயம் தம்மை முட்டாள்கள்ஆக்குகின்றார்கள் என்பது தெரியாமலே போய் விடுகின்றது facebook கில் கூட தமது தந்தையின் பெயரை எடுத்துவிட்டு தமது ஹீரோ களின் பெயரை போட்டுக்கொள்கிறார்கள் ...(தெரிஞ்சவன் பாத்தா மானம் ஒருபக்கமா போய்டும் ) இவ்வாறானவர்களை தெருவில் நாய்க்குட்டி விபத்தில் அடிபட்டுக்கிடக்கும்போது அதை இரக்கத்துடன் பார்ப்பது போல் தான் பார்க்க தோன்றுகிறது


இவ்வாறான போலிகதாநாயகர்களை விட நிஜத்தில் கதாநாயகர்கள் இருக்கின்றார்கள் இவர்கள் தமது உயிரை பணயம் வைத்து பலரை காப்பாற்றி இருக்கின்றார்கள் இவர்கள் சிறிய வயதினர் என்பது இன்னும் தூக்கலான விடயம்



Bravery Awards அசாதாரன சாதனைகளை செய்யும் சிறுவர்களுக்காக இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்படும் விருது இதுவரை 800 சிறுவர்கள் இவ்விருதை பெற்றிருக்கின்றார்கள் (568 boys ,232 girls ) இவ்விருதை 16 வயதுக்கு குறைந்த 24 சிறுவர்கள் பெற்றிருக்கிறார்கள் 


2012 இற்கான விருதை 24 சிறுவர்கள் பெற்றிருக்கிறார்கள் 

Om Prakash Yadav

11 வயது  சிறுவன் ...............எரிந்து கொண்டிருக்கும் வண்டியில் இருந்து தனது உயிரை பணயம் வைத்து உள்ளே இருந்த சிறுவர்களை காப்பாற்றியவர் பரிசாக எரி காயங்களை முகத்திலும் கைகளிலும் உடலின் பின்புறத்திலும் வாங்கியவர் இவற்றில் இருந்து இன்னும் இவர் பூரணமாக குணமடையவில்லை சரியான சிகிச்சையை பெறமுடியாததால் தனது ஒருவருட பாடசாலை கல்வியை இழந்துவிட்டார் ..
இதே மாதிரி ஒரு சந்தர்ப்பம் மீண்டும் ஏற்பட்டால் மீண்டும் காப்பாற்ற முயல்வீர்களா என கேட்டபோது இவளவு  பட்டும் அசராமல் எத்தனை சந்தர்ப்பம் ஏற்பட்டாலும் காப்பாற்றுவேன் என சிரிப்புடன் கூறியுள்ளார் Om Prakash Yadav இவரது தந்தை ஒரு விவசாயி இவர் பாடசாலை சென்றுகொண்டிருக்கும்போது வீதியல் எரிந்துகொண்டிருந்த வானிற்குள் இருந்து உயிருக்கு  போராடியவர்களை காப்பாற்றினார் டிரைவர் இறுதியில் கதவை திறந்து தப்பி விட்டார் ஆனால் ஓம் பிரகாஷ் ஆல் தப்ப முடியாமல் போய் விட்டது இவர் 8 சிறுவர்களை காப்பாற்றி உள்ளார் 

Mittal Patadiya


இவரது வயது 12 தம்மை தாக்க வந்தவர்களை எதிர்த்து போராடியவர் ..அகமதாபாத் ஐ சேர்ந்தவர் ..நவம்பர் 3 2010 அன்று இவரது வீட்டின் கதவு தட்டப்பட்டது இவரது பாட்டி சென்று கதவை திறந்தார் வெளியே படிக்கு பழக்கமான டிரைவர்ரும் வேறு இரண்டுபேரும் நின்றிருந்தார்கள் சடுதியாக பட்டியை உள்ளே தள்ளி தாளிட்டு கடுமையாக தாக்கினார்கள் இதை பார்த்த 
மிட்டல் பாய்ந்து ஒருவனை பிடித்தார் அவன் மிட்டலின் கழுத்தில் பலமாக மீண்டும் மீண்டும் தாக்கினான் இதனால் மிட்டலின் கழுத்தில் இரத்தம் வந்தது இறக்கும் நிலைக்கே சென்றுவிட்டார் எனினும் சமாளித்துக்கொண்டு எழுந்து கதவை திறந்தார் அப்பொழுதுதான் அயலவர்களுக்கு செய்தி தெரிந்தது அயலவர்களால் தாக்கியவர்கள் விரட்டி அடிக்கப்பட்டனர் ...இவர் சிறிய வயதில் இவ்வாறு செயற்பட்டதால் இவர் சுற்றத்தாரால் ஜான்சி ராணி என அழைக்கப்படுகின்றார் 

 Prasannata Shandilya



இவருக்கு வயது 11 ..ஓடிசாவை சேர்ந்தவர் ...ஏப்ரல் 12 2011 இரவு இவரது வீட்டுக்குள்  கொள்ளையர்கள் ஐந்து பேர் புகுந்து இவரது கண் முன்னாலேயே  இவரது பெற்றோரை இரும்புக்கம்பிகளால் தாக்கி உள்ளார்கள்   விழித்துக்கொண்ட இவர் பயந்து ஓடவில்லை சமயலறைக்கு ஓடினார் மிளகாய் பொடியை எடுப்பதற்கு அங்கு இரண்டு போத்தல்கள் இருந்தன எதற்குள் மிளகாய் பொடி இருக்கின்றது என கும்மிருட்டில் கண்டுபிடிக்கமுடியவில்லை புத்திசாலித்தனமாக இரண்டையும் கலந்து கொண்டு சென்று அவர்களுக்கு அவற்றால் தாக்கியவர்களை தாக்கினர் இவரது பெற்றோர் பலத்த காயங்களுடன் உயிர் தப்பினார்கள் ...


 Uma Shankar Age
இவரது வயது 12 நகரங்களில் விபத்துக்கள் ஏற்பட்டால் மக்கள் உதவிசெய்ய முன்வரமாட்டார்கள் இவர் பாடசாலைக்கு சென்று கொண்டிருக்கும்போது  ஒரு வான் விபத்துக்குள்ளானது உள்ளே இவரை போன்ற மாணவர்கள் பலர் ரத்த வெள்ளத்தில் காயப்பட்டுக்கிடந்தர்கள் இவர் தான் பிரயாணம் செய்துகொண்டிருந்த பஸ்சில் இருந்து ஜன்னலினூடாக பாய்ந்து அவர்களுக்கு உதவி செய்தார் உள்ளே இருந்த சிறுவர்களை வெளியே இழுத்து எடுக்க வேண்டியதை இருந்தது ..சாலையில் விபத்து நடந்தும் யாரும் தமது வாகனங்களை நிறுத்தவில்லை ..நிறுத்துமாறு தனது சட்டையை கழற்றி கொடி அசைத்தும் நிறுத்தவில்லை ..அவர்களை காப்பற்ற  வேறு வழியில்லாமல் போகவே  உடனே வீதில் வந்த வாகனத்தின் முன் பாய்ந்துவிட்டார் அப்பொழுதுதான் நிறுத்தினார்கள் ஆறு சிறுவர்கள் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர் ஐந்து பெண்களையும் காப்பாற்றி உள்ளார் 


நடிகர்கள் ஒரு விடயத்திற்கு பணம் கொடுப்பார்கள் உண்மையில் இது அவர்களின் விளம்பரத்துக்ககவே உதாரணமாக தானே புயலிற்கு நடிகர்கள் கொடுத்த பணத்தின் அளவு உங்களுக்கு தெரிந்திருக்கும் அவர்களது சொத்து மதிப்பு 500 அல்லது 600 கோடிகளுக்கு மேல் அனால் கொடுத்தபணம் லட்ச கணக்கில் மட்டுமே இது எமது வீட்டுக்கு பிச்சை கேட்டு வருபவனுக்கு ஐந்து ரூபாய் போடுவதற்கு சமனானது ....இதை விட கேவலமான விடயம் இவர்களது ரசிகர்கள் என்று கூறிக்கொள்பவர்கள் "புயல் நிவாரண நிதிக்கு பணம் கொடுத்த கடவுளே வாழ்க "என்று போஸ்டர் அடித்து ஓட்டுகிறார்கள் (அவர்களுக்காக இரங்கி ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தி விடுவோம் )


இவர்கள் எல்லாம் நடிகர்கள் நாம் கொடுக்கும் பணத்தில் அவர்கள் திளைப்பவர்கள் இவர்களுக்கு லட்சங்கள் பெரிய விடயமல்ல ஆனால் ஒரு ஆசிரியருக்கு 50 லட்சம் என்பது ஒரு மிகப்பெரிய தொகை அதை கல்விக்காக வழங்கி உள்ளார் ஒரு ஆசிரியர் 
ஈரோட்டில் சித்தோடு என்ற கிராமத்தை சேர்ந்தவர் பொன்மணி தேவி இவர் ஓய்வு  பெற்ற தமிழ் ஆசிரியர்  "எனது கணவரும் ஒரு தமிழ் ஆசிரியர் ஆசிரியர் என்பது ஒரு உயர்ந்த துறை பலமாணவர்களை நல்ல குடிமகன்களாக ஆக்கும் பொறுப்பு எங்களுடையது கிராமங்களில் உள்ள பாடசாலைகளில் அடிப்படை வசதிகள் இல்லாமல் இருக்கின்றன இவற்றை ஓரளவிற்கு தீர்க்கவே இத்தொகையை வழங்கி உள்ளதாக கூறி உள்ளார் 
பாடசா
லைக்காக நிலத்தையும்  வழங்கி உள்ளார் 10 000 சதுர அடி நிலத்தையும் வழங்கி உள்ளார் ...
ஆழ்வார் தாத்தாவின் கல்விப்பணி.....


சென்னை மயிலாப்பூர் ரயில் நிலையத்தில் இறங்கி யாரிடம் கேட்டாலும் ஆழ்வார் பழைய புத்தககடையை கேட்டால் வழி சொல்லி விடுவார்கள். கடந்த கால் நூற்றாண்டு காலமாக ஒரு புத்தகவங்கி செய்ய வேண்டிய பணியை சப்தமின்றி தனி மனிதராக தமது தள்ளாத 78 வயதிலும் செய்து வருகின்றார் ஆழ்வார் தாத்தா. எனவே மயிலாப்பூரின் அடையாளங்களில் ஒருவராக அவர் மாறிப்போனதில் ஆச்சர்யமில்லை.

நான் அவரை சந்திக்கச் சென்ற போது லேசான மழை தூறல் தூரிக்¢ கொண்டிருந்தது. மழை தூறலில் புத்தகங்களை நனைந்து விடாமல் காக்க பிளாஸ்டிக் உரைகளால் புத்தகங்களை மூடிக் கொண்டிருந்தார் ஆழ்வாரின் துணைவியார் மேரி. புத்தகக் குவியலுக்கு நடுவே ஒரு நாற்காலியில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார் ஆழ்வார் தாத்தா.

தோலில் வெள்ளை நிற கோர்ட்டும், டேதஸ் கோப்புமாக புத்தங்களை வாங்க வந்த மருத்துவக் கல்லூரி மாணவர் சேவியர் “மருத்துவ புத்தகங்கள் குறைந்தது ரூ.1,000க்கு குறையாமல் கிடைப்பதில்லை. பொருளாதாரத்தில் பின் தங்கிய என்னைப் போன்ற மாணவர்களால் இவற்றை விலை கொடுத்து வாங்குவது என்பது முடியாத ஒன்று. நான் கடந்த மூன்று வருடங்களாக தாத்தாவிடம் தான் புத்தகங்களை மலிவான விலைக்கு வாங்கி வருகின்றேன்’’ என்றார்.

பத்து வருடங்களாக நான் ஆழ்வார் தாத்தாவிடம் புத்தகங்களை வாங்குகின்றேன் என்று பேசிய பள்ளி ஆசிரியர் முத்துக்குமார் “ஐஏஎஸ் படிப்பவர்களில் இருந்து ஐடிஐ பயிலும் மாணவர்கள் வரையிலும் தங்களின் கல்விக்காக அனைத்து புத்தகங்களையும் விலை கொடுத்து வாங்குவது என்பது இயலாத ஒன்று. இந்த மாணவர்களுக்கு எல்லாம் பழைய புத்தகங்களை தேடி அவற்றை குறைந்து விலைக்கு விற்று ஆழ்வார் தாத்தா ஆற்றி வரும் கல்விப்பணி மகத்தானது. ஆனால் யாரும் அவரை கண்டு கொள்ளாதது. மிகவும் அநியாயமானது’’ என்றார்.

தாத்தாவிற்கு உடல்நலம் சரியில்லாததால் அன்னாரின் மனைவி மேரி என்னிடம் பேசினார் “எங்களுக்கு திருமணமாகி மூன்று பெண் குழந்தைகள். மூன்று பெண் குழந்தைகளையும் இந்த புத்தக்கடையை நடத்தி தான் கரையேற்றினோம். முன்னமாதிரி இவரால் நடமாட முடியவில்லை. ஒரு வருடமாக ஆஸ்பத்திரி வீடு என்று அழைத்த வண்ணம் உள்ளோம். இதனால் கடையை நானும் எங்க புள்ளைகளும் தான் பார்த்து கொள்கின்றோம். போலீஸ்காரங்கள் தான் அடிக்கடி கடை நடைபாதையில் இருப்பதாகச் சொல்லி அடிக்கடி இடத்தை மாற்றக் கோருகின்றார்கள். மழைக்காலங்களில் புத்தகங்களை பாதுபாப்பதும் மிகச் சிரமமாக இருக்கின்றது’’ என்றவர் மேலும் எனது கணவரிடம் புத்தகங்களை வாங்கி இன்று எத்தனையோ பேர்கள் பெரிய பெரிய பதவிகளில் இருக்கின்றார்கள். அவர்களிடம் ஐயா இந்தப் புத்தகங்களை எல்லாம் பாதுகாக்க ஒரு கொட்டகை மட்டும் போடுவதற்கு அனுமதி பெற்றுத் தாங்கள். பெரிய புண்ணியமாகப் போகும் என்று, கண்ணீருடன் தங்கள் கதையை பகிர்ந்து கொண்டார்.

நான் ஆழ்வார் தாத்தாவை அணுகி தங்களை புகைப்படம் எடுத்துக் கொள்ளலாமா என்று கேட்டேன். உடனே தமது மனைவியை அருகில் அழைத்து ஒரு புத்தகத்தை எடுத்து வரச் சொன்னார். அந்த புத்தகம் என்ன தெரியுமா? நமது முன்னாள் குடியரசுத் தலைவர் மேதகு அப்துல் கலாம் அவர்களின் சுயசரிதமான அக்னி சிறகுகள். இந்த புத்தகத்தோடு சேர்த்து என்னை புகைப்படம் எடுத்துக் கொள்ளுங்கள் என்றார். மாணவர்களையும், இளைஞர்ளுக்கும் இன்று கலங்கரை விளக்கமாக கனவு நாயகனாகவும் திகழும் அப்துல் கலாமின் சாதனைகளை ஒப்பிடும் போது, டாக்டர், இன்ஜினியர், கலெக்டர் என பலரது கனவுகளை நிறைவேற்றிருக்கும் ஆழ்வார் தாத்தாவின் சாதனையும் கிஞ்சிற்றும் குறையாதது. மேரி பாட்டி கூறியது போன்று புத்தகங்களை வைக்க ஒரு கொட்டகை வைக்க அரசாங்கத்திடம் கையேந்த தேவையில்லை. ஆழ்வார் தாத்தாவிடம் புத்தகளை வாங்கிய என்னைப் போன்றோர்கள் உதவினாலேப் போதும், இன்னும் பல கலாம்கள் கூட உருவாகுவார்கள்.

நன்றி : தோழர் .ரபி





உலகின் தலைசிறந்த 10 பேரில் மதுரை இளைஞர் 
: 1.20 கோடி பேருக்கு உணவு தந்ததற்கு கௌரவம்:


ஆதரவற்ற, மனநலம் பாதித்தவர்களுக்கு 2002 முதல் இதுவரை தினமும் மூன்று வேளை உணவு அளித்து வரும் மதுரை டோக் நகரைச் சேர்ந்த நாராயணன் கிருஷ்ணனை(29), உலகின் தலைசிறந்த 10 “ரியல் ஹீரோக்களில்’ ஒருவராக சி.என்.என்., வெப்சைட் தேர்வு செய்துள்ளது.

நட்சத்திர ஓட்டலில் வேலை பார்த்த, விருதுகள் வென்ற செப் சமையல் கலைஞரான இவர், 2002ல் சுவிட்சர்லாந்து ஓட்டல் நிறுவனத்தில் வேலை கிடைத்தவுடன் அங்கு செல்வதற்காக மதுரை ரயில்வே ஸ்டேஷன் வந்தார். அங்கே முதியவர் ஒருவர் உணவுக்கு போராடும் அவலத்தை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வெளிநாட்டு வேலையை துறந்து மதுரையிலேயே தங்கி, வீட்டில் சமைத்து, இது போன்ற மனிதர்களை தேடிச் சென்று உணவு கொடுக்க ஆரம்பித்தார். இதுவரை 1.20 கோடி பேருக்கு தினமும் காலை, மதியம், இரவு என உணவு வழங்கி வருகிறார். இதற்காக “அக்ஷயா டிரஸ்ட்’ என்ற அமைப்பையும் “ஸ்பான்சர்கள்’ உதவியுடன் நடத்தி வருகிறார். மதுரையை சுற்றி கண்ணில் படும் இதுபோன்ற மனிதர்களை தேடிப்பிடித்து உணவு தருகிறார். இதற்காக தனது வாழ்கையை முழுமையாக அர்ப்பணித்துள்ள இவர், சி.என்.என். வெப்சைட்டால், உலகின் தலை சிறந்த 10 ரியல் ஹீரோக்களில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ஏழை எளிய மக்களை தேடிசென்று உணவு கொடுப்பதென்பது அரிய மகத்தான பணி .. கோவில் உண்டியலில் பணத்தை கொட்டுபவர்கள இவரின் கைகளின் குடுங்கள் உங்களுக்கு கடவுள் குடுப்பதை விட இது பெரிய புண்ணியம் ..வளரட்டும் இவரின் சேவை.. வாழ்த்துக்கள்


நாம் செலவழிக்கும் பணத்தை வாங்கி நமக்கே செலவழித்து புகழ் தேடும் நடிகர்கள் அரசியல் வாதிகள் மத்தியில் ,படங்களில் மட்டுமே இரண்டு மணித்தியால   ஹீரோவாக  வாழ்கை நடத்தும் நடிகர்கள் மத்தியில் இவர்கள் நிஜ ஹீரோக்கள் .............
இவர்களையும் பாராட்டுங்கள்