V

SSLC MARK 2012- CHENNAI GRAPHIX

mba.basheer

Welcome to my website. join with us

quick search

Tuesday, October 30, 2012

விடைபெறுகிறேன் !





ன்று உனக்கும் எனக்கும் விவாகரத்து
நான் மட்டும் கண்ணீரோடு...
நீ என்றுமே பெருமிதத்தோடு.

ந்தேன். வசந்த நாளில் - உன்
வாசல் தேடி....
வாரி அணைத்து
வரவேற்பு செய்தாய்
விவாகரத்து விரைவில் என்று சொல்லாமலே !!

ன்னால் தானடி - என்
பெற்றோரை பிரிந்தேன்
உன்னால் தானடி - என்
உறவுகள் மறந்தேன்
உன்னால் தானடி - என்
கனவுகள் மலர்ந்தேன்
உன்னைத் தானடி
உண்மை சொல்லேன்?

திருமணத்தன்றே தப்பிக்கலாம் - என்று
நினைத்தேன்
உன் அழகால் என்னை
அடைத்து விட்டாயடி - என் நினைவை அன்றே
அழித்து விட்டாயடி

முதல் இரவு
உன்னுடன் உறங்காமலே ...
சில இரவு
உன்னோடு பேசாமலே...
பல இரவு
உன்னோட பாசத்திலே...

றவுகள் பல தந்தாய்
உணர்வுகள் பல தந்தாய்
உரிமைகள் பல தந்தாய் - இன்று
"உதறிவிட்டு செல்" என்கிறாய் .

நான் ஆணென்று உணர்ந்ததும்
உன்னை மணந்த பின்பு தான்;
நான் நானென்று உணர்ந்ததும்
உன்னை மணந்த பின்பு தான்.

காதலைக் கற்று தந்தாய்
கவிதைகள் கற்று தந்தாய்
கல்வியைக் கற்று தந்தாய்
கலையையும் கற்று தந்தாய்
கடைசியில் ஏனடி கழட்டிவிட்டு செல்கிறாய்?

ன்னைச் சேர்ந்த ஒவ்வொரு நாளும்
உதிரம் உலையாய் கொதித்ததடி - இனி
உன்னைப் பிரியும் ஒவ்வொரு நாளும்
உதிரம் பணியை உறையுமடி

ப்படி என்னடி செய்துவிட்டேன் - படித்தேன்
உன்னைப் படித்தேன்
படிப்புக்கு தண்டனை பிரிவா?

முதல் முத்தம் தந்து என்னை நீ அழைத்தாய் - இதோ
இறுதி முத்தம் தந்து உன்னை நான் அழைக்கிறேன்
வந்துவிடு என் வாசல்தேடி
வரமாட்டாய் - நீ நிச்சயம்
வரமாட்டாய்
ஈழத்தைக் காக்க இந்தியன் வருவானா?

வி
டைபெறுகிறேன்...
உன் குழந்தையோடு - இல்லை இல்லை
நம் குழந்தையோடு.

ய்! கல்நெஞ்சக்காரி , இப்பொழுதாவது கூறடி
யாரடி வைத்தது - உனக்கு
"கல்லூரி" என்ற பெயரை

நிதர்சனம்




முகங்கள் முகங்கள் மறந்தேன் ;
முகப்புத்தகத்தில் தினமும் திரிந்தேன்.
யுகங்கள் யுகங்கள் அளந்தேன்;
பிஞ்சு இதழ்மொழி அறியேன்.

லகம் பெரிதாய் தெரிந்தது - என்
மகிழ்ச்சி அதுபோல் இருந்தது.
உலகம் சுருங்கிப் போனது - என்
மனமும் மழுங்கிப் போனது.

ண்மை சொன்னால் கசக்குது;
பொய்கள் எங்கும் சிரிக்குது.
காதல் கடையில் கிடைக்குது;
காசில் நட்பு பிறக்குது.

அடுப்பங்கறை

சுடச் சுட  பரிமாறி - வர வர
சரியாவே சாப்பிடுறதே இல்ல - என
செல்லமாய் அதட்டி ...
சட்னி, சாம்பார் , மீன் குழம்புக்கு மத்தியில்
சடாரென்று தள்ளிவிட்டு ..
சத்தமில்லாமல் அடுப்பங்கறையில் நீ
சாப்பிடுவாயே ! - 'பழையது' *
அதில் உள்ளதம்மா
பலகோடி வருடங்களுக்கான பாசமும் ;
'நீ இன்னும் சாப்பிடலையா?' எனக் கேட்க மறந்த என்னுடைய பாவமும்.

*பழையது - முதல் நாள் செய்து மிஞ்சிய சாதம்.

Thursday, October 25, 2012

பழமையான , பாதுகாக்க வேண்டிய , அறிதான புகைப்படங்கள் - விளக்கங்களுடன் - 1




இந்தியா ஆகஸ்ட் 15 1947  சுதந்திரம் அடைந்ததை அறிவித்த டைம்ஸ் ஆப் இந்தியா செய்தித்தாள். 




















குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் DAIRY MILK சாக்லேட் 






ஸ்டாலின் , லெனின் , ட்ராஸ்கி மூன்றும் இணைந்த புகைப்படம் .






டாவின்சியின் அற்புதாமான பெய்ண்டிங் 






 

ஏப்ரல் 16 போஸ்டன் குளோப் முதல் பக்க செய்தி , டைட்டானிக் விபத்தை பற்றி விரிவாக 






 1858 ல் யானை மலை ( மதுரை )







 M G M - சிங்கம்  லோகோவின் படபிடிப்பு - ஆண்டு 1924





 ஸ்டார் திரையரங்கம் 1948 ல் - தற்போது பாகிஸ்தானில் 



 பிரிட்டிஷ் போலீசாரால் கடைசி முறையாக நேதாஜி கைது செயப்பட்டப் போது .


 காந்தி தன மனைவி கஸ்துரிபா காந்தியுடன். 


படத்தப் பார்த்து சிரிக்காம இருங்க , பார்க்கலாம்.