V

SSLC MARK 2012- CHENNAI GRAPHIX

mba.basheer

Welcome to my website. join with us

quick search

Saturday, October 26, 2013

நேரம் சரியில்லையா ? சிந்தியுங்கள்!

நேரம் சரியில்லையா ? சிந்தியுங்கள்!

எனக்கு நேரம் சரியில்லை என்று முடங்கி கிடப்பது என்பது அனைவரது வாழ்கையிலும் வந்து செல்ல கூடிய ஒன்று.  அனைவருக்குமே ஒரே நேரம் தான் இந்த உலகத்தில் கொடுக்கபட்டிருக்கிறது அதை நாம் எப்படி பயன் படுத்துகிறோம் என்பதில்தான் நம்முடைய நேரம் சரியானதா அல்லது சரியில்லையா என்ற தீர்மானம் வருகிறது என்றுமே நம்முடன் அல்லது நாம் பழகுகின்ற மனிதர்களை பொருத்துதான் நமது வாழ்கையின் பாதை செல்கிறது நமது நேரமும் நமக்கு சாதகமாக இருக்கிறது. முதலில் நாம் நம்மை பற்றி மனசுத்தியுடன் தெரிந்து கொள்ளவேண்டும்.நாம் வாழ்வின் எந்த நிலையையும் அடைய முடியும் ஆனால் இப்போது எந்த நிலையில் இருக்கிறோம் என்று அறிந்து கொள்ளவது நாம் நல்ல நேரத்தை நோக்கி பயணிப்பதற்கு உதவியாக இருக்கும். முதலில் தேவையில்லாத நமக்கு  முற்றிலும் ஒவ்வாத செய்கைகளை நினைத்து பார்ப்பது தவிர்க்க வேண்டும்.எதை எப்போது செய்யவேண்டும் என்பதை உணர்ந்து செய்வது தான் நல்லது. நாம் நினைப்பது  செய்வதுதான் சரி என்ற நினைப்பை விட்டு விட்டு நாம் நினைப்பது சரியாக இருந்தாலும் அதை சிந்தித்து பிறகு செயலாக்கத்திற்கு கொண்டுவருவருவது நல்லது.அதிகம் போசுவதை விட அதிகம் கேட்பது நலம் எம்போதுமே எதிலுமே முதன்மையாக கருத்து சொல்லவதை தவிர்க்க வேண்டும்.எந்த ஒரு நிகழ்வையும் முற்றிலும் சரி என்று நினைத்தாலும் நிதானமாக செய்வதுதான் நன்று.நம்முடன் இருப்பவர்கள் அனைவருமே நம் நல்லதிற்காக நம்முடன் பழகுகிறார்கள் என்ற நினைப்பை தவிர்க்கவேண்டும். முக்கியமாக சிந்திக்காமல் கோபபடுவதை முற்றிலுமாக விலக்கவேண்டும்.நம்முடைய கோபம் எபோதுமே நமக்கு நல்லது செய்வது இல்லை.நமுடைய வாழ்வில் ஒரே வகையான  இக்கட்டான சூழ்நிலைகள் திரும்ப திரும்ப நிகழ்வது நம்மில் பலபேர் சந்தித்திருப்போம் ஆனால் நாமில் யாராவது ஏன் மீண்டும் மீண்டும் ஒரே வகையான இக்கட்டான சூழ்நிலைகள் நம்மை ஆட்கொள்கிறது என்று சிந்திக்க மறுக்கிறோம்.தற்காலிகமாக ஒருதீர்வைத்தான் நம்மில் அதிகமானவர்கள் நாடுகின்றோம், இதை போல் சூழ்நிலை மீண்டும் வராமல் இருப்பதற்கான நிரந்தர தீர்வை யார் சிந்திக்கிறார்களோ அவர்கள்தான் வாழ்கையில் நல்ல நேரத்தை சந்திக்கின்ற நபர்களாக, வாழ்வில் வெற்றி பெற்றவர்களாக திகழ்கிறார்கள், இதைதான் நம் முன்னோர்கள் "ஒரு மாட்டிற்கு ஒரு சூடு என்று சொல்லுவார்கள்" ஒருமுறை நமக்கு ஏற்பட்ட கசப்பான சூழ்நிலையை மீண்டும் வராமல் பார்துகொள்ளவேண்டும் அதுதான் நமக்கு,நம் முன்னேற்றத்திற்கு நம் வாழ்வின் அமைதிக்கு வழி வகை செய்ய கூடிய நல்ல காரணியாக இருக்கும், மீண்டும் மீண்டும் நாம் வாழ்கையில் சூடு பட்டுக்கொண்டே இருந்தால், வாழ்கை பாடத்தை சரிவர புரித்துகொள்ளமலேயே மன அழுத்தத்திலேயே நாம் வாழ்கையை வாழவேண்டிவரும்.நம்முடைய பலத்தை பொறுத்துதான் நாம் தூக்கும் எடை அமையவேண்டும்,அதிக எடையை  தூக்க நினைப்பது தவறல்ல ஆனால் அதற்க்கு முன் நம் பலத்தை அதிகரிக்க வேண்டும் என்ற எண்ணம் நமக்குள் வரவேண்டும் முதலில் எடையை  தூக்கிவிட்டு பின்னால் பார்த்துக்கொள்ளலாம் என்ற அசட்டையான துணிச்சலை முதலில் நம்மை விட்டு அகற்றவேண்டும்.எல்லாமே நமக்கு சாதகமாகத்தான் அமையும் என்ற தேவை இல்லாத கற்பனையைநிறுத்திவிட்டு வாழ்த்து பாருங்கள் .இதுதான் நல்ல நேரத்தை நோக்கி செல்வதற்கான முதல் படி.அம்பு ஒன்று நம்மை நோக்கிவருகிறது,அதற்கான கவசம் இல்லை  என்றால்அதன் பாதையை விட்டு விலகி எதிர்கொள்ளுவதுதான் நன்மையை தரும். நல்ல நேரத்தை நாம் தேடி செல்வதை விட எல்லா நேரத்தையும் நல்ல நேரமாக மாற்ற சிந்திப்பது உங்கள் வாழ்கையில் நல்லதொரு மாற்றத்தை கொண்டுவரும்.
 
courtesy:krishna.blogspot.

Thursday, October 17, 2013

alaikalikkapadum aadhaar...!!!???

தண்ணீர் காட்டும் எண்ணெய் நிறுவனங்கள்


சுப்ரீம் கோர்ட் கடந்த செப்டம்பர் 23ம் தேதி ஒரு முக்கியமான திர்ப்பை வழங்கி மத்திய அரசுக்கும், எண்ணெய் நிறுவனங்களுக்கும் ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அது தான் பொதுமக்கள் தங்கள் மானியத்திற்காக ஆதார் கார்ட் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்ற விதியை தளர்த்தியது தான். ஆதார் கார்ட் இல்லாதவர்களுக்கும் மானியம் அளிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் சொன்ன தீர்ப்பு ஒரே நாளில் அரசின் 50,000 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டத்தின் பெரும் தோல்வியாக நாம் பார்க்க இடமளிக்கிறது.

இந்த தீர்ப்பினை எதிர்த்துப் போராட மத்திய அரசு, எண்ணெய் நிறுவனங்கள் அவர்களுக்கு விலை போன மீடியாக்கள் என்று ஒரு குழுவாக களத்தில் இறங்கி இந்த தடையை தளர்த்த போராடுகிறார்கள்

எதற்காக இந்த தடை?

சுப்ரீம் கோர்ட் கீழ்கண்ட அம்சங்களை கருத்தில் கொண்டு இந்த தீர்ப்பினை வழங்கியிருக்கிறது.

1. பொது மக்கள் எல்லோராலுமே ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் இந்த ஆதார் அட்டையினை வாங்கிட முடியாது,
  - இது அரசின் புள்ளியல்  மற்றும் கணக்கெடுப்புத் துறையின் பலவீனமான செயல்பாட்டை சுப்ரீம் கோர்ட் சரியாகக் கணக்கில் கொண்டுள்ளதைக் காட்டுகிறது.

2. ஆதார் அட்டை வழங்குதலில் உள்ள முறைகேடு மற்றும் குழப்பங்கள்
- போலியான அட்டைகள், பணம் வாங்கிக் கொண்டு முறைகேடாகத் தரும் அட்டைகள் (ஆந்திராவின் ஒரு பகுதியில் ரூ.200/-க்கு முறைகேடான் ஆதார் அட்டை வழங்கிய கும்பல் போன மாதம் கைது), குளறுபடியாக பிரிண்ட் செய்யப்பட்ட அட்டைகள்(பெயர், போட்டோ மாறியிருத்தல் மிகச்சாதாரனமாக காணப்படுகிறது)
- எத்தனை பேருக்கு ஆதார் அட்டைக்கான சான்றுகள், விண்ணப்பிப்பதற்கான விடுப்புகள், வங்கிக் கணக்குகள் இருக்கின்றன? எத்தனை கிராமங்களில் வங்கிகள் இருக்கின்றன?

3.ஆதார் அட்டையினால் லாபம் அடைபவர்கள் யார் யார்..

மூன்றாம் கேள்விக்கான விடை சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு வந்தவுடன் காலில் வெந்நீர் ஊற்றியது போலே குதித்துக் கொண்டு எண்ணெய் நிறுவனங்களின் செயல்பாட்டை கவனித்தால், இவர்களுக்கு இருக்கும் நிஜ ஆதாயம் என்ன என்று புரியும்.

Economic Timesல் இந்த தீர்ப்பினால் ஏற்படும் விளைவுகளைச் சுட்டிக் காட்டுகிறது, கள்ளச் சந்தையில் எல்.பி.ஜி சிலிண்டர்களை கட்டுப்படுத்தத் தவறினால் அரசுக்கு 01 பில்லியன் டாலர் வரை இறக்குமதி அதிகரிக்கும் என்று சொல்கிறது. இங்கே ஒரு லாஜிக்: ஆதார் கார்ட் உபயோகிப்பதால் எண்ணெய் இறக்குமதி குறையும் என்று எண்ணெய் நிறுவனங்கள் சொல்வதில் இந்நிறுவனங்களுக்கு என்ன லாபம் இருக்கிறது?. 

லாபம் இருக்கவே செய்கிறது!! அதாவது ஆதார் கார்டு வினியோகத்தில் உள்ள சாத்தியக் கூறு, இருக்கும் வாடிக்கையாளர்களில் ஒரு பத்து சதவீதம் பேரையாவது வடிகட்டி அவர்களுக்கு மானியம் இல்லாமல் சந்தை விலைக்கு கொடுக்க முடியும் என்பது அரசிற்கு ஒரு Extra Bonus. உங்கள் மாநகரங்களில் திடீரென்று முளைத்துள்ள சில தனியார் எல்.பீ.ஜி. கடைகளின் பெயர்கள் உங்களுக்கு ஞாபகம் வருகிறதா?? Total Gas, Super Gas..இவர்களுக்கான புதிய சந்தைக்கு பயன்படும் ஒரு முக்கிய நபர் இந்த ஆதார்.  

அப்படியென்றால் அரசினால் ஆதார் கார்டு இல்லாமலேயே கள்ளச் சந்தையைக் கட்டுப்படுத்த வேறு வழிகள் இல்லையா?? அரசு மட்டும் நினைத்திருந்தால் பத்து ஆண்டுகளுக்கும் முன்பாகவே RFID தொழில்நுட்பம் மூலம் வீட்டு நுகர்வுக்கு வரும் சிலிண்டரினை கள்ளச் சந்தையில் விற்பதை தடுத்திருக்க முடியும். ஏன் ஒட்டுமொத்த CIVIL SUPPLIESஐயும் கட்டுப்படுத்திட இந்த தொழில்நுட்பம் உதவும், ஆனால் அரசுக்கு இதன் மீதான் அக்கறை இல்லை என்பது மட்டும் உறுதி.

சரி இப்படி வைத்துக் கொள்வோம், முதலில் எல்.பீ.ஜிக்கான மானியத்தை இப்படி ஆதார் மூலம் வங்கிகளில் டெபாசிட் செய்தால், அடுத்ததாக ஒட்டு மொத்த CIVIL SUPPLIESன் மானியங்களும் வங்கிகளுக்குமே வரவு வைக்கப் படும், நாம் அதை எடுத்துக் கொண்டு ரிலையன்ஸ் ஃப்ரஸ் போன்ற சூப்பர் மார்க்கெட்டிலோ அல்லது தீபாவளிக்கு வெளி வரும் திரைப்படத்தைக் கான் முன்பதிவோ செய்யக் கூடும்.

எல்லோரும் 1004 ரூபாய் கொடுத்து சிலிண்டர் வாங்கிவிட வேண்டும், அரசு நாம் வாங்கியவுடன் 410.50 ரூபாயினை நம் வங்கியில் வரவு வைத்து விடும், இங்கே நாம் கவனமாக இருக்க வேண்டும், சரியாக குறைந்த வைப்புத் தொகையினை நாம் வங்கியில் வைத்திருக்க வேண்டும், இல்லையென்றால் உங்கள் மானியம் அபராதமாக வங்கிகளால் சுவாஹா செய்யப்படும். இதில் எத்தனை பேருக்கு எல்லா வங்கிகளிலும் NO FRILLS ACCOUNT இருக்கும் என்று தெரியும்?? ஆனால் NO FRILLS ACCOUNTஇனை வையர் ட்ரான்ஸ்பருக்குப் பயன்படுத்த முடியுமா என்று தெரியாது? மானியத்திர்காக மட்டும் வங்கிகளுக்குள் முதன் முறை நுழைபவர்களுக்கெல்லாம் ATM கட்டணங்கள், இதர வங்கிச் சேவை கட்டணங்கள் குறித்த விளக்கங்கள் தெரிவிக்கப்படுமா??

ஒன்றை மட்டும் உறுதியாக சொல்ல முடியும் ஆதார் கார்டு இந்திய அரசியல் சாசனத்தின் 14,20 மற்றும் 21ஆம் பிரிவுகளுக்கு எதிரானது (Right to equality, live and liberty) என்பதை, ஆக இதற்கெதிரான பிரச்சாரம் மிக அத்தியாவசியமாகிறது

மராட்டிய மாநிலத்தில் ஆதார் கார்டு இல்லையெனில் திருமணப் பதிவு ஏற்றுக்கொள்ளப் பட மாட்டாது என்று அரசு கூறியுள்ளது ஒருவேளை மக்கள் தொகைப் பெருக்கத்தினைக் கட்டுப்படுத்தும் யுக்தியா என்று தெரியவில்லை.
வரும் அக்டோபர் 22ம் தியதியில் வரும் தீர்ப்பினைச் சார்ந்து தான் இதன் முடிவு எப்படி இருக்கும் என்று யோசிக்க இயலும். அதுவரை எண்ணெய் நிறுவனங்கள் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பினைக் கண்டு அஞ்சப் போவதில்லை...