Thursday, January 30, 2014
Wednesday, January 29, 2014
டி என் டி ஜே வின் சிறை நிரப்பும் போராடத்தின் மக்கள் வெள்ளம்
திணறியது சாலைகள் !
எரிமலையாய் முஸ்லிம்கள் !
விளித்தது அரசு!
கவனித்தது ஊடகம் !
களங்கிய காவல் துறை !
பொசுக்கப்படது பொறாமைகாரர்களின் ஆசை...!
திரண்டது மக்கள் !
திக்கு முக்காடியது திருச்சி !
நிம்மதியில் இளைய தலைமுறையினர்
இன்ஷா அல்லாஹ் ... வெற்றி பெருக ... உரிமை அடைக ...
நடந்து முடிந்த சிறை நிரப்பும் போராட்டத்தின் செய்திகளின் தொகுப்பு
Sunday, January 26, 2014
IMEI நம்பரை வைத்து திருடிய மொபைலை மீட்பது எப்படி..??...
IMEI நம்பரை வைத்து
திருடிய மொபைலை மீட்பது எப்படி..??
IMEI நம்பரை வைத்து திருடிய மொபைலை மீட்க..!
0
inShare
share
உங்களுடைய Mobile Phone தொலைந்துவிட்டதா? அல்லது திருடிவிட்டார்களா? கவலையே
வேண்டாம். மீண்டும் உங்கள் மொபைல் போன் உங்களுக்கே திரும்ப வரும்.
இதற்கு உங்கள் மொபைல்போனின் தனி அடையாள எண்ணை நீங்கள் தெரிந்து வைத்திருக்க
வேண்டும்.
உங்கள் மொபைலில் *#06# என டைப்செய்திடுங்கள்
உடனே உங்களுடைய மொபைல்போனின் IMEI எண் திரையில் தோன்றும்.
உங்கள் மொபைல் தொலைந்துவிட்டால் உடனே போலீசுக்கு தக...
மேலும் வாசிக்க :- www.puthiyaulakam.com
மேலும் வாசிக்க :- www.puthiyaulakam.com
Saturday, January 25, 2014
கிழமைகளுக்கு பெயர் வந்த வரலாரு
ஏழாவது
நாளையம் மத வசயங் களுக்கு மட்டுமே அவர்கள் ஒதுக் கினர். இவ்வாறு இரு
வாணிப நாட்களுக்கு இடைப்பட்ட காலம் (7 நாட்கள்) வாரம் என்று கணக்கி ல்
கொள்ளப் பட் டது.
வாரம் பிறந்த வழக்கிலேயே கிழமைகளும் தோன்றின. வா ரம்
கணக்கிடப்பழகியவர்கள் சந்தைக்கு அடுத்த நாளை ஒன் றாம் நாள், இரண்டாம் நாள்
என்று எண்ணிட்டு வழக்கப்படு த்தினர். அடுத்த 7-வதுநாள் மீ ண்டும் சந்தை
வந்தது. வாரத் திற்கு 7 நாட்கள் என்ற முறை யை கடைபிடித்த எகிப்தியர்க ள்,
வாரத்தின் நாட்களுக்கு பெ யர் சூட்டி அழைக்க ஆரம்பித்த னர். அவர்கள் 5
கிரகங்களின் பெயர்களை கிழமைகளுக்கு சூட்டினர்.
Friday, January 24, 2014
விசா பெற வழிகாட்டும் வலைத்தளம்!
விசா பெற வழிகாட்டும் வலைத்தளம்!
வெளிநாட்டு பயணங்களைத் திட்டமிடும்போது எழக்கூடிய முக்கிய கேள்வி, விசா
பெறுவது எப்படி? இந்த கேள்விக்கு பதில் தெரிய கொஞ்சம் இணைய ஆராய்ச்சி தேவை.
முதலில் பயணம் செல்ல உள்ள நாட்டிற்கு விசா தேவையா என தெரிந்துகொள்ள
வேண்டும். அதன்பிறகு விசாவுக்கு விண்ணப்பிப்பது எப்படி என அறிய வேண்டும்.
ஒரு சில நாடுகளுக்கு விசா தேவையில்லை. ஒரு சில நாடுகளுக்கு அங்கே போய்
இறங்கியவுடன் விசா வாங்கி கொள்ளலாம். பெரும்பாலான நாடுகளை பொருத்தவரை
முன்கூட்டியே விசா பெற வேண்டும். நாடுகளுக்கு நாடு இது மாறக்கூடியது.
குறிப்பிட்ட சில நாடுகள் மட்டும் விசா இன்றி வரும் சலுகையை வழங்குகின்றன. இப்படி விசாவுக்கான நடைமுறைகள் பல இருக்கின்றன.
இந்தத் தகவல்களை எல்லாம் தேடி இணையத்தில் அங்கும் இங்கும் அல்லாடாமல், ஒரே இடத்தில் தெரிந்து கொள்ளும் வகையில் விசாமேப்பர்.காம் (http://www.visamapper.com) வலைத்தளம் அமைந்துள்ளது.
எந்த எந்த நாடுகளுக்கு எல்லாம் விசா இல்லாமல் செல்லலாம், எந்த எந்த
நாடுகளுக்கு எல்லாம் அங்கே போய் சாவகாசமாக விசா வாங்கலாம் போன்ற தகவலகளை
இந்தத் தளம் தருகிறது. அதுவும் எப்படி.., அதிகம் தேடாமல் எடுத்த
எடுப்பிலேயே தெரிந்து கொள்ளும் வகையில் அழகாக உலக வரைபடத்தின் மீது விசா
விவரங்களை புரிய வைக்கிறது.
இந்த தளத்தில் தோன்றும் உலக வரைபடத்தில் நாடுகள் பல்வேறு வண்ணங்களில்
சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. அந்த வண்ணங்களுக்கான அர்த்தம் அருகே உள்ள
கட்டங்களில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வண்ணங்களை வைத்தே குறிப்பிட்ட ஒரு
நாட்டின் விசா நடைமுறையை தெரிந்து கொள்ளலாம். உதாரணத்திற்கு பச்சை
வண்ணத்தில் மின்னும் நாடுகளுக்கு அங்கே போய் விசா பெறலாம். மெரூன் நிறம்
என்றால் முன்னதாகவே விசா பெற வேண்டும். வெளிர் பச்சை என்றால் விசாவே
வேண்டாம். மஞ்சள் வண்ணம் என்றால் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். சிவப்பு
என்றால் விசாவே கிடையாது.
ஆக, இந்த வரைபடத்தை பார்த்தே ஒருவர் பயணம் செய்ய உள்ள நாட்டிற்கான விசா
முறை என்ன என அறிந்து கொள்ளலாம். இந்த வரைபடத்தில் மேலும் ஒரு சிறப்பம்சம்,
நீங்கள் தேடக்கூட வேண்டாம், அதுவாகவே விவரங்களை காட்டுகிறது என்பது தான்.
அதாவது இந்த தளத்தில் நுழைந்ததுமே, பயனாளி எந்த நாட்டிலிருந்து விவரங்களைத்
தேடுகிறார் என புரிந்து கொண்டு அந்த நாட்டுக்கான விசா நடைமுறையை வரைபடமாக
காட்டுகிறது.
உதாரணத்திற்கு இந்தியாவில் இருந்து பயன்படுத்தும் போது, இந்தியாவுக்கான
இடம் குடியிருக்கும் நாடு என காட்டப்படுகிறது. இந்தியர்களுக்கு மற்ற
நாடுகள் எப்படி விசா தருகின்றன என்பது வண்ணங்களாக காட்டப்படுகிறது. ஆக,
பயனாளி வேறு நாட்டில் இருந்து அணுகும் போது அவரது நாட்டுக்கான விசா வரைபடம்
தோன்றும். அற்புதம் தான் இல்லையா?
அதே நேரத்தில் வரைபடத்தின் மீது உள்ள, 'நான் இந்த நாட்டு குடிமகன்' என
குறிக்கும் கட்டத்தில் ஒருவர் தனக்கான நாட்டை தேர்வு செய்து பார்த்தால்
அந்த நாட்டுக்கான உலக விசா நடைமுறையை தெரிந்து கொள்ளலாம். இந்த பகுதியில்
பல்வேறு நாடுகளை கிளிக் செய்து பார்த்தால் எந்த எந்த நாடுகள் எந்த எந்த
நாடுகளுக்கு விசா சலுகை அளிக்கின்றன போன்ற தகவல்களையும் தெரிந்து
கொள்ளலாம். உலக அரசியலை அறிவதற்கான சின்ன ஆய்வாகவும் இது அமையும். உலக
அரசியல் யாதார்த்ததையும் இதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.
விசா பற்றி அறிய விரும்புகிறவர்களுக்கு இந்த தளம் நிச்சயம் உதவியாக
இருக்கும். ஆனால் ஒன்று, இது ஒரு வழிகாட்டித் தளமே. இதில் உள்ள விவரங்களை
அதிகாரபூர்வமானதாக கொள்வதற்கில்லை. தகவலை எளிதாக தெரிந்து கொண்டு அதனை
அதிகாரபூர்வ தளங்களின் வாயிலாக உறுதி செய்து கொள்வது நல்லது. மேலும் இந்த
தளத்திலேயே, விடுபட்டிருக்கும் நாட்டை சேர்கக அல்லது பிழையான தகவலை சரி
செய்யும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது.
இதைப் போலவே விசாமேப்.நெட் (http://www.visamap.net)
எனும் வலைத்தளமும் விசா தொடர்பான தகவல்களை வரைபடம் மூலம் தருகிறது. விசா
தகவல்களோடு தூதரக அலுலகங்கள் எங்கே உள்ளன போன்ற தகவல்களையும் அளிக்கிறது.
விசா நோக்கில் பிரபலமான நாடுகளின் பட்டியலும் இருக்கிறது. ஐபோனுக்கான செயலி
வடிவமும் இருக்கிறது. ஆனால் இந்த தளமும் வழிகாட்டி நோக்கிலானது தான்.
இதில் உள்ள தகவல்களை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
வெளிநாட்டுக்கு போக ஆசைப்படுபவர்களுக்கும், போக இருப்பவர்களுக்கும் இந்தத் தளங்கள் பயனுள்ளவைகளாக இருக்கின்றன. (courtesy.techlanka.blogspot.com)
Tuesday, January 21, 2014
உங்கள் செல்போனில் இருந்து கணணியை இயங்க வைப்பது எப்படி?
உங்கள் செல்போனில் இருந்து கணணியை இயங்க வைப்பது எப்படி?
அநேகமாக இணையப் பயனாளர்கள் அனைவருக்கும் Team Viewer பற்றி தெரிந்து இருக்கும்.பெரும்பாலனோர் கணினியில் இதை பயன்படுத்தியும் இருப்பீர்கள். இதைஉங்கள் Android போனுக்கும் பயன்படுத்த இயலும். இந்த இந்த Application மூலம் உங்கள் கணினியில் Team Viewer இருந்தால் அதன் மூலம் உங்கள் கணினியை உங்கள் Android ஃபோனை பயன்படுத்தி Control செய்யலாம்.இதன் மூலம் உங்கள் கணினியில் ஆன்டிராய்ட் போன் பயன்படுத்தி, உங்களுக்கு தேவையான வேலைகளை செய்து கொள்ள முடியும். கணினியில் வரும் File Transfer வசதி மட்டும் அலைபேசியில் இல்லை.
Online ல் இருக்கும் Team Viewer நண்பர்களை காண இயலும். விண்டோஸ், லினக்ஸ், மேக் என்று அனைத்து இயங்கு தளங்களிலும் இயங்க முடியும்.
Keyboard பயன்படுத்தும் வசதியை மிக எளிதாக வழங்கி உள்ளது. இதன் மூலம் கணினியில் உள்ள Keyboard தரும் வசதிகளை நீங்கள் இதிலேயே செய்யலாம்.
left click, right click, drag & drop, scroll wheel, zoom போன்ற அனைத்தும் உள்ளது. இதனால் உங்கள் வேலை மிகவும் எளிதாகிறது, அதே சமயத்தில் எந்த இடத்தில் இருந்தும் உங்கள் கணினியை இயக்க முடிகிறது.
Team Viewer பற்றி அறிந்தவர்கள் கட்டாயம் பயன்படுத்த வேண்டிய ஒன்று இது. முக்கியமாக உங்கள் கணினியில் Team Viewer இருக்க வேண்டும்.
இதை தரவிறக்கம் செய்ய...
https://play.google.com/store/apps/details?id=com.teamviewer.teamviewer.market.mobile
(thankyou.techlanka.blgspt.com)
கணினியை எதற்கு Backup செய்ய வேண்டும்?
கணினியை எதற்கு Backup செய்ய வேண்டும்?
வீட்டிலோ
அல்லது அலுவலகத்திலோ கணினியைப் பயன்படுத்தும் போது முக்கிய பைல்களைப்
பிரதி செய்து வேறொரு ஊடகத்தில் பாதுகாப்பாக களஞ்சியப்படுத்திக் கொள்வதை
(Backup) பேக்கப் எனப்படும். எதிர்பராத விதமாக கணினி செயலிழக்கும்போது
தகவல் இழப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளது. எனவே பைல்களை பேக்கப் செய்து
கொள்வதும் அதனை அவ்வப்போது புதுப்பித்துக் (update) கொள்வதும் அவசியம்.
முக்கிய பைல்களை பேக்கப் செய்து வைத்திருந்தால் அதிலிருந்து பைல்களை மீளப்
பெற்றுக் கொள்ளக் கூடிய வாய்ப்பு கிடைக்கிறது.
கணினியை ஏன் பேக்கப் செய்ய வேண்டும் என்பதற்ககான சில காரணங்களைப் பார்க்கலாம்.
முக்கிய ஆவணங்கள் மற்றும் பைல்களை ஹாட் டிஸ்கில் சேமித்து வைப்பதே சௌகரியமாது என அனேகமான கணினிப் பயனர் கருதுகின்றனர். தேவை ஏற்படின் ஆவணங்களை இலகுவாக அச்சிட்டுக் கொள்ளவும். அவற்றில் மாற்றங்கள் செய்து புதுப்பித்துக் கொள்ளவும் முடியும் எனப் பலரும் கருதுவதால் ஹாட் டிஸ்கிலேயே அவற்றை சேமித்து வைப்பர். ஹாட் டிஸ்கில் பைல்களை சேமித்து வைப்பது உண்மையிலேயே சௌகரியமானதுதான்.
எனினும் அது பாதுகாப்பான வழிமுறையல்ல என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். காகித ஆவணங்களைப் போலவே கணினியிலுள்ள பைல்களின் பிரதியொண்றை வேறோரு ஊடகத்தில் களஞ்சியப்படுத்தி வைப்பதே சிறந்த வழி முறையாகும்.
ஹாட் டிஸ்க் ஏதோ ஒரு காரணத்தால் பழுதடையும் போது அதில் சேமிக்கப்பட்டுள்ள பைல்களுக்கும் உத்தரவாதம் கிடைக்காமல் போகும்.. நமது பைல்களைக் கணினி காண்பிக்காது விடும். சில வேளை அவற்றைத் திறந்து பார்க்க முடியாமலிருக்கும் இவ்வாறான சந்தர்ப்பத்தில் இந்த பைகளின் பேக்கப் பிரதியொன்று இருக்குமானால் அதனை வேறொரு கணினியில் ஏற்றியோ அல்லது ஹாட் டிஸ்கை மாற்றிக் கணினியை சரி செய்த பிறகோ பயன்படுத்தக் கூடியதாயிருக்கும். எனினும் பேக்-அப் பிரதி இல்லையெனின் அவற்றை நிரந்தரமாகவே இழக்க நேரிடும் அல்லது. . அதிக நேரத்தைச் செலவிட்டு அந்த ஆவணங்களை மறுபடியும் உருவாக்க வேண்டியிருக்கும்
டெஸ்க்டொப் கணினியை நீங்கள் செல்லுமிடமெல்லாம் தூக்கிச் செல்ல முடியாது. எனவே முக்கியமான பைல்களை ஒரு சீடியிலோ அல்லது பென்ட்ரைவிலோ பேக்கப் செய்து விட்டால் அதன நீங்கள் செல்லுமிடத்திள்ள ஒரு கணினியில் இட்டுப் பயன்படுத்தலாம். இதனை பேக்கப செய்வதனால் பெறக் கூடிய மற்றொரு பயனாகக் கொள்ளலாம்.
ஒரு ரீமோட் சேர்வரின் உதவியுடன் இணையத்திலும் பைல்களையோ அவற்றை இயக்கக கூடிய மென்பொருள்களையோ பேக்கப் செய்து வைக்க லாம். இதனை ஓன்லைன் பேக்கப் என்பர். இணையத்தில் இவ்வாறான சேவை வழங்கும் ஏராளமான நிறுவனங்கள் உள்ளன. சில நிறுவனங்கள் இந்த சேவையை இலவசமாகவும் சில சிறிய தொகையை கட்டணமாகப் பெற்றும் வழங்குகின்றன. ஓன்லைன் பேக்கப் மூலம் நீங்கள் உலகின் எந்த மூலையிலிருந்தாலும் உங்கள் பைல்களை அணுக முடியும்.
கணினியை குறிப்பிட்ட கால இடை வெளியில் பேக்கப் செய்து கொள்ள வேண்டும். பேக்கப் செய்ய மறந்து விடுமானால் பேக் அப் செய்யும் செயற்பாட்டை நீங்கள் குறிப்பிடும் கால இடை வெளியில் விண்டோஸ் தானாகவே பேக்கப் செய்வதற்கும் வசதியுள்ளது.. குறைந்தது மாதமொருமுறையேனும் பேக்கப் செய்து கொள்வது சிறந்த நடை முறையெனப் பரிந்துரைக்கப்படுகிறது எனினும் உங்கள் கணினியில் தினசரி டேட்டா சேக்கப்படுமாயின் வாரமொரு முறையேனும் பேக்கப் செய்து கொள்ளல் நல்லது.
இவ்வாறு பேக்கப் செய்து கொண்டால் ஹாட் டிஸ்கில் பாதிப்பு ஏற்படினும் தகவல், இழப்பைக் குறைத்துக் கொள்ள முடிவதோடு குறைந்த நேரத்திலேயே அதனை மீட்டுக் கொள்ளவும் முடியும்.
விண்டோஸ் எக்ஸ்பீ பதிப்பில் பேக்கப் செய்வதற்கான யூட்டிலிட்டியும் இணைந்து வருகிறது. எந்த பைல்களை பேக்கப் செய்ய வேண்டும், பேக்கப் செய்த பைல்களை எந்த ஊடகத்தில் சேமிக்கப்பட வேண்டும் என்பதைத் தீர்மானித்த் பிறகு பின்வரும் வழிகளில் பேக்கப் செய்ய ஆரம்பிக்கலாம்.
விண்டோஸ் எக்ஸ்பீ இயங்கு தளத்தில் Start →Programs →Accessories →System Tools ஊடாக Backup தெரிவு செய்யுங்கள். அப்போது Backup and Restore விசர்ட் தோன்றும். அங்கு வரும் மூன்றாவது கட்டத்தில் நான்கு தெரிவுகள் உள்ளன.
All information on this computer என்பதைத் தெரிவு செய்வதன் மூலம் கணினியிலுள்ள அனைத்து பைல்களையும் பேக்கப் செய்யலாம். எனினும் இதற்கு அதிக கொள்ளளவு கொண்ட ஒரு ஊடகம் தேவைப்படும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
My documents and settings என்பதைத் தெரிவு செய்வது சிறந்த தெரிவாகும். பயனர் கணக்குக்குரிய மை டொகுயுமண்ட்ஸ் போல்டரானது, அவுட்லுக் எக்ஸ்பிரஸ் மூலம் பெற்ற மின்னஞ்சல்கள், இண்டர்நெட் எக்ஸ்ப்லோரர் பயன்படுத்திய குக்கீஸ் மற்றும் விருப்பமான இணைய
தளங்களின் பட்டியல் என்பவற்றுடன் விண்டோஸ் ரெஜிஸ்ட்ரி செட்டிங்ஸ் என்பவற்றைக் கொண்டிருக்கும். பேக்கப் செய்ய வேண்டிய பைல்கள் கணினியில் வேறொரிடத்தில் இருப்பின் அவற்றையும் மை டொகுயுமண்ட்ஸ் போல்டருக்கே நகர்த்திக் கொள்வது பேக் அப் செயற்பாட்டை இலகு படுத்தும்
.
ஒரே கணினியைப் பல பேர் பயன்படுத்தும் சூழலில் Everyone's documents and settings என்பதைத் தெரிவு செய்வதன் மூலம் அனைத்து பயனர் கணக்குகளுக்குரிய ஆவணங்கள் மற்றும் விண்டோஸ் ரெஜிஸ்ட்ரி செட்டிங்ஸ் அனைத்தும் பேக்கப் செய்யப்படும்.
உங்கள் ஆவணங்கள் மைடொகுயுமெண்ட்ஸ் போல்டருக்கு வெளியே வேறொரு இடத்தில் சேமிக்கப்பட்டிருப்பின், Let me choose what to back up
என்பதைத் தெரிவு செய்ய வேண்டும். இதனைத் தெரிவு செய்வதன் மூலம் உங்களுக்கு பேக் அப் செய்ய அவசியமற்ற பைல்களைக் நீக்க முடியும்.
பேக்கப் செய்யும் பைல்களை எந்த ஊடகத்தில் சேமிப்பது என்பதை விண்டோஸ் அடுத்து வினவும். மெக்னடிக் டேப் எனும் காந்த நாடா, ப்லொப்பி டிஸ்க், சிப் டிஸ்க், ஹாட் டிஸ்க், சீடி, டீவிடி, பென் ட்ரைவ் என எவற்றிலும் சேமித்துக் கொள்ளலாம். உங்கள் கணினி ஒரு வலையமைப்பிலிருந்தால் வெறொரு கணினியிலும் கூட சேமித்துக் கொள்ளலாம். ஹாட் டிஸ்கில் பேக்கப் செய்கையில் C - ட்ரைவ் அல்லாத வேறொரு பாட்டிசனில் பேக்கப் செய்தல் நல்லது.
பேக்கப் செய்ததும் அனைத்து பைல்களும் ஒரே பைலாக சேமிக்கப்படும். பேக்கப் பைல் . bkf என்ற பைல் நீட்டிப்பைக் கொண்டிருக்கும். ஒரு பேக்கப் பைலைப் பயன்படுத்த முன்னர் ஒரு (Zip) சிப் பைலை (extract) விரித்துக் கொள்வது போல் அதனை ரீஸ்டோர் (restore) செய்து கொள்ள வேண்டும்..
விண்டோஸ் விஸ்டா பதிப்பபில் பேக்க்ப் செய்வதற்கு Backup and Restore Center ஐ அணுக வேண்டும் அதற்கு கண்ட்ரோல் பேனலில் System and Maintenance தெரிவு செய்யுங்கள். அங்கு Backup your computer. தெரிவு செய்யுங்கள். அங்கு Backup files, தெரிவு செய்வதன் மூலம் உங்களுக்குத் தேவையான பைல்களை பேக்கப் செய்யலாம் (courtesy.techlanka.blgspt.com)
Background Remover மென்பொருளை தரவிறக்கம் செய்வதற்கு
கமெராவின்
உதவி கொண்டு கிளிக் செய்யப்படும் அழகிய காட்சிகளில் காணப்படும் தேவையற்ற
பகுதிகளை நீக்குவதற்கு விசேடமான கணனி மென்பொருட்கள் உதவியாக அமைகின்றன.
இவ்வகையான மென்பொருட்களின் வரிசையில் தற்போத Background Remover எனும்
மென்பொருளானது மேலதிக அம்சங்களுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இம்மென்பொருளின் உதவியுடன் புகைப்படங்களில் காணப்படும் பொருட்களினையோ அல்லது பின்னணி ஒன்றினையோ இலகுவாக பிக்சல்களின் எண்ணிக்கை மாறாது அகற்றிவிட முடியும்.
அத்துடன் ஒளி ஊடுபுகவிடும்(Transparent) பின்னணியைக் கொண்டிருக்கும் புகைப்படங்களை பொருத்தமான வர்ணங்களை பயன்படுத்தி மெருகூட்டிக்கொள்ளவும் முடியும்.
தரவிறக்க சுட்டி

Friday, January 10, 2014
அவசர காலத்தில் முதல் உதவி செய்வது எப்படி
விபத்தில் சிக்கிய ஒருவருக்கு கிடைக்கும் முதல் உதவி தான் உயிரை காப்பாற்றும். மருத்துவமனை போய்ச் சேரும் வரை ஒவ்வொரு நிமிடமும் பொன்னான காலம் டாக்டர் வரும் வரையிலோ அல்லது மருத்துவமனைக்கு போய்ச்சேரும் வரையிலோ பாதிக்கப்பட்டவருக்கு நீங்களும் உதவலாம்.
அதற்கு ஒவ்வொருவரிடமும் மற்றவரை காப்பாற்ற வேண்டும் என்ற அக்கரை, அர்ப்பணிப்பு உணர்வுடன் துணிச்சலும் இருக்க வேண்டும்.
முதல் உதவி சிகிச்சை முறைகள் சிலவற்றை இங்கே பார்ப்போம்.
நினைவு இழத்தலுக்கான பொதுவான காரணங்கள்:
ஒருவர் நினைவிழந்தது எதனால் என்று தெரியாவிட்டால்,
1 . அவர் சுவாசம் ஒழுங்காக இருக்கிறதா என்று பார்க்கவும். இல்லை என்றால் அவருடைய தலையைப் பின்புறம் நன்றாகச் சாய்த்துத் தாடையையும் நாக்கையும் முன்னுக்கு இழுக்கவும். அவர் தொண்டையில் ஏதாவது அடைத்துக் கொண்டிருந்தால், அதை வெளியே எடுத்து விடவும். அவர் சுவாசிக்காமல் இருந்தால் உடனடியாக வாய்க்குள் – வாய்
சுவாச முறையை மேற்கொள்ளவும்.
2. ரத்தம் அதிக அளவில் வெயியேறிக் கொண்டிருக்கிறதா என்பதை கவனிக்கவும். அதனை உடனே கட்டுப்படுத்தவும் கைகளில் ரத்தம் படாமலிருக்க கை உறைகள் அல்லது பிளாஸ்டிக் கவர்கள் அணியவும்.
3. நாடித்துடிப்பு அல்லது இதயத்துடிப்பு இருக்கிறதா, என்பதை கவனிக்கவும்.
இதயத்துடிப்பு நின்றிருந்தால் உடனே இதயத்தைப் பிடித்துவிடும் முறையை மேற்கொள்ளவும்.
4. அதிர்ச்சி அடைந்த நிலையில் அவர் இருக்கிறாரா என்று பாருங்கள் (பிசுபிசுப்பான வெளிறிய தோல்; தளர்ந்த வேகமான நாடித் துடிப்பு) அப்படி இருந்தால் கால்களைவிடச் சற்றுத் தாழ்வாகத் தலை இருக்கும்படி படுக்கவைக்கவும். ஆடைகளைத் தளத்தி விடவும்.
5. வெப்பத்தாக்கு, மூளைத்தாக்கு, இதயப் பிரச்சினைகள், தலையில் காயம் போன்றவை இருக்கக்கூடுமா என்று பார்க்கவும் (வியர்க்காதிருத்தல், கடுமையான காய்ச்சல், சூடான சிவந்த தோல்) அப்படியிருந்தால் அவர் மீது வெயில் படாதவாறு செய்யவும். கால்களைவிடத் தலை உயர்ந்து இருக்குமாறு வைக்கவும். வெப்பத்தாக்காக இருந்தால்
குளிர்ந்த நீரை (முடிந்தால் ஐஸ் நீரை) அவர் உடல் மீது தெளிக்கவும்.
சுவாசம் நின்றுவிட்டால் என்ன செய்ய வேண்டும்?
சுவாசம் நின்று போவதற்கான பொதுவான காரணங்கள்:
வாய் சுவாச முறை : பின்வரும் முறையில் எவ்வளவு விரைவாகச் செயல்படமுடியுமோ அந்தளவிற்கு விரைவாகச் செயல்படுங்கள்:
முதலாவதாக, வாயில் அல்லது தொண்டையில் ஏதாவது சிக்கிக் கொண்டிருந்தால் அதை உடனடியாக அகற்றவும்.
நாக்கை வெளியே இழுக்கவும். தொண்டையில் கோழை இருந்தால் விரைவாக அதை அகற்றவும்.
இரண்டாவதாக, அவரை மல்லாந்து படுக்க வைக்கவும், தலையை நன்றாகப் பின்னனுக்கு வளைத்து, தாடையை முன்னுக்கு இழுக்கவும்.
மூன்றாவதாக, அவருடைய நாசித் துவாரங்களை உங்கள் விரல்களால் மூடிக் கொண்டு அவரது வாயைத் திறக்கவும்.
அவருடைய வாயை உங்கள் வாயால் மூடிக் கொண்டு அவருடைய மார்பு உயரும்படியாக, வலுவாக ஊதவும், பிறந்த குழந்தைகளுக்கு நிமிடத்திற்கு 25 முறை மிகவும் மென்மையாக வாயிலிருந்து மட்டும் ஊதவும்; ஆழ்ந்த மூச்சு எடுத்து ஊதக் கூடாது.
அவர் தானாகவே சுவாசிக்க ஆரம்பிக்கும் வரை அல்லது அவர் இறந்து விட்டார் என்பது நிச்சயமாகும் வரை வாய்க்குள் - வாய் சுவாச முறையைத் தொடரவும். சில சமயங்களில தொடர்ந்து ஒரு மணி நேரம் அல்லது அதற்கும் மேலாக இவ்வாறு செய்ய வேண்டி இருக்கலாம்.
இதயத்தைப் பிடித்து விடுவதிலுள்ள பிரச்சனைகள்:
இரு கையை வைத்து அழுத்தும்போது அதிகமாக அழுத்தக்கூடாது. அதிகம் அழுத்தினால் மார்பு எலும்பு முறியும், முறியும் விலா எலும்பு ஈரலைக் குத்தி விடலாம். அவர் அதிர்ச்சியில் இருக்கிறாராப (முகம் வேர்த்து,தோல் வெளுத்து, பலமில்லாமல், நாடிதுடிப்பு அதிகரித்து) என்பதைக் கவனிக்கவும்.
இது வெப்ப அயர்ச்சியாக இருக்கலாமா? (வியர்வையில்லாமல், அதிக காய்ச்சல், சிவந்த தோல்) அப்படி இருந்தால் அவரைத் தலையை உயரத்தில் வைத்து, நிழலில் படுக்க வைக்கவும், கழுத்தை வளைக்க வேண்டாம்.
இதயத்தை பிடித்துவிடும் முறை:
ரத்தப் போக்கு இருந்தால் பின்வருவனவற்றைச் செய்யவும் முறை :
1. காயம் பட்ட இடத்தைச் சற்று உயர்த்திப் பிடிக்கவும் (ரத்தப் போக்கைக் குறைக்க)
2. சுத்தமான ஒரு துணியை (துணி எதுவும் இல்லாவிட்டால் உறை அணிந்து கொண்டு உங்கள் கையை) நேரடியாகக் காயத்தின் மீது வைத்து ரத்தப் போக்கு நிற்கும்வரை அழுத்திப்பிடித்துக் கொண்டிருக்கவும்.
15 நிமிடமோ சில சமயங்களில் ஒரு மணி நேரமோ அல்லது அதற்கும் அதிகமாகவோ கூட இவ்வாறு செய்ய வேண்டி இருக்கலாம்.
இதனால் பெரும்பாலான காயங்களிலிருந்து ஏற்படும் ரத்தப் போக்கைக் கட்டுப்படுத்தலாம் – சிலசமயம் உடலின் ஒரு பகுதி வெட்டப்பட்டாலும் கூட.
3. காயத்தின் மீது அழுத்திப் பிடித்தும் கூட இரத்தப் போக்குக் கட்டுப்படாமல் ரத்தம் மிகுதியாக வந்து கொண்டிருந்தால்,
* நேரடியாகக் காயத்தின் மீது அழுத்திப் பிடித்தும் கட்டுப்படுத்த முடியாத அளவு இரத்தப்போக்குக் கடுமையாக இருந்தால் மட்டுமே கட்டுப் போட வேண்டும்.
* கட்டு இன்னும் அவசியமா என்று தெரிந்து கொள்வதற்கு, ரத்த ஓட்டத்திற்கு ஏதுவாக அரை மணி நேரத்திற்கு ஒரு முறை கட்டைச் சற்று நேரம் தளர்த்திவிடவும். வெகு நேரம் கட்டை அவிழ்க்காமல் விட்டு விட்டால் கையையோ காலையோ அகற்ற வேண்டிய அளவுக்குப் பாதிப்பு ஏற்படலாம்.
* ரத்தப் போக்கை நிறுத்த ஒருபோதும் மண், சாணம், மண்ணெண்ணெய், சுண்ணாம்பு அல்லது காப்பிப் பொடியைப் பயன்படுத்தாதீர்கள்.
* காயம் அல்லது இரத்தப் போக்கு கடுமையானதாக இருந்தால் அதிர்ச்சி ஏற்படுவதைத் தடுக்கப் பாதத்தை உயர்த்தித் தலையைத் தாழ்வாக வைக்கவும்.
* நாடித்துடிப்பு, இதயத்தடிப்பு இருக்கிறதாப என்று கவனிக்கவும். இல்லாவிட்டால் இதய தசையைப் பிடித்து விடவும்.
* பாதிக்கபட்டவர்களுக்கு உதவுபவர்களின் கையில் காயமோ வெட்டோ இருந்தால் அதில் ரத்தம் படாமலிருக்க கையுறை அல்லது பிளாஸ்டிக் பையைப் பயன்படுத்தவும்.

- குடிபோதை
- தலையில் அடிபடுதல்
- காக்கை வலிப்பு
- அதிர்ச்சி
- வேனல் அதிர்ச்சி
- உடலில் விஷம் கலத்தல்
- மூளைத்தாக்கு
- நீரிழிவு
- மாரடைப்பு
- மயக்கமடைதல் (பீதி, பலவீனம், ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைதல் முதலான காரணங்களால்)
ஒருவர் நினைவிழந்தது எதனால் என்று தெரியாவிட்டால்,
1 . அவர் சுவாசம் ஒழுங்காக இருக்கிறதா என்று பார்க்கவும். இல்லை என்றால் அவருடைய தலையைப் பின்புறம் நன்றாகச் சாய்த்துத் தாடையையும் நாக்கையும் முன்னுக்கு இழுக்கவும். அவர் தொண்டையில் ஏதாவது அடைத்துக் கொண்டிருந்தால், அதை வெளியே எடுத்து விடவும். அவர் சுவாசிக்காமல் இருந்தால் உடனடியாக வாய்க்குள் – வாய்
சுவாச முறையை மேற்கொள்ளவும்.
2. ரத்தம் அதிக அளவில் வெயியேறிக் கொண்டிருக்கிறதா என்பதை கவனிக்கவும். அதனை உடனே கட்டுப்படுத்தவும் கைகளில் ரத்தம் படாமலிருக்க கை உறைகள் அல்லது பிளாஸ்டிக் கவர்கள் அணியவும்.
3. நாடித்துடிப்பு அல்லது இதயத்துடிப்பு இருக்கிறதா, என்பதை கவனிக்கவும்.
இதயத்துடிப்பு நின்றிருந்தால் உடனே இதயத்தைப் பிடித்துவிடும் முறையை மேற்கொள்ளவும்.
4. அதிர்ச்சி அடைந்த நிலையில் அவர் இருக்கிறாரா என்று பாருங்கள் (பிசுபிசுப்பான வெளிறிய தோல்; தளர்ந்த வேகமான நாடித் துடிப்பு) அப்படி இருந்தால் கால்களைவிடச் சற்றுத் தாழ்வாகத் தலை இருக்கும்படி படுக்கவைக்கவும். ஆடைகளைத் தளத்தி விடவும்.
5. வெப்பத்தாக்கு, மூளைத்தாக்கு, இதயப் பிரச்சினைகள், தலையில் காயம் போன்றவை இருக்கக்கூடுமா என்று பார்க்கவும் (வியர்க்காதிருத்தல், கடுமையான காய்ச்சல், சூடான சிவந்த தோல்) அப்படியிருந்தால் அவர் மீது வெயில் படாதவாறு செய்யவும். கால்களைவிடத் தலை உயர்ந்து இருக்குமாறு வைக்கவும். வெப்பத்தாக்காக இருந்தால்
குளிர்ந்த நீரை (முடிந்தால் ஐஸ் நீரை) அவர் உடல் மீது தெளிக்கவும்.
சுவாசம் நின்றுவிட்டால் என்ன செய்ய வேண்டும்?
சுவாசம் நின்று போவதற்கான பொதுவான காரணங்கள்:
- தொண்டையில் ஏதாவது சிக்கிக் கொள்ளுதல்
- நினைவிழந்த ஒருவரின் தொண்டையில் அவருடைய நாக்கு அல்லது கெட்டியான கோழை அடைத்துக் கொள்ளுதல்
- நீரில் மூழ்குதல், புகையினால் மூச்சு மூட்டுதல் அல்லது உடம்பில் விஷம் கலத்தல்.
- தலையில் அல்லது மார்பில் பலமாக அடிபடுதல்
வாய் சுவாச முறை : பின்வரும் முறையில் எவ்வளவு விரைவாகச் செயல்படமுடியுமோ அந்தளவிற்கு விரைவாகச் செயல்படுங்கள்:
முதலாவதாக, வாயில் அல்லது தொண்டையில் ஏதாவது சிக்கிக் கொண்டிருந்தால் அதை உடனடியாக அகற்றவும்.
நாக்கை வெளியே இழுக்கவும். தொண்டையில் கோழை இருந்தால் விரைவாக அதை அகற்றவும்.
இரண்டாவதாக, அவரை மல்லாந்து படுக்க வைக்கவும், தலையை நன்றாகப் பின்னனுக்கு வளைத்து, தாடையை முன்னுக்கு இழுக்கவும்.
மூன்றாவதாக, அவருடைய நாசித் துவாரங்களை உங்கள் விரல்களால் மூடிக் கொண்டு அவரது வாயைத் திறக்கவும்.
அவருடைய வாயை உங்கள் வாயால் மூடிக் கொண்டு அவருடைய மார்பு உயரும்படியாக, வலுவாக ஊதவும், பிறந்த குழந்தைகளுக்கு நிமிடத்திற்கு 25 முறை மிகவும் மென்மையாக வாயிலிருந்து மட்டும் ஊதவும்; ஆழ்ந்த மூச்சு எடுத்து ஊதக் கூடாது.
அவர் தானாகவே சுவாசிக்க ஆரம்பிக்கும் வரை அல்லது அவர் இறந்து விட்டார் என்பது நிச்சயமாகும் வரை வாய்க்குள் - வாய் சுவாச முறையைத் தொடரவும். சில சமயங்களில தொடர்ந்து ஒரு மணி நேரம் அல்லது அதற்கும் மேலாக இவ்வாறு செய்ய வேண்டி இருக்கலாம்.
இதயத்தைப் பிடித்து விடுவதிலுள்ள பிரச்சனைகள்:
இரு கையை வைத்து அழுத்தும்போது அதிகமாக அழுத்தக்கூடாது. அதிகம் அழுத்தினால் மார்பு எலும்பு முறியும், முறியும் விலா எலும்பு ஈரலைக் குத்தி விடலாம். அவர் அதிர்ச்சியில் இருக்கிறாராப (முகம் வேர்த்து,தோல் வெளுத்து, பலமில்லாமல், நாடிதுடிப்பு அதிகரித்து) என்பதைக் கவனிக்கவும்.
இது வெப்ப அயர்ச்சியாக இருக்கலாமா? (வியர்வையில்லாமல், அதிக காய்ச்சல், சிவந்த தோல்) அப்படி இருந்தால் அவரைத் தலையை உயரத்தில் வைத்து, நிழலில் படுக்க வைக்கவும், கழுத்தை வளைக்க வேண்டாம்.
இதயத்தை பிடித்துவிடும் முறை:
- மூச்சு நின்று போன வரை மல்லாக்கப்படுக்க வைக்க வேண்டும்.
- அவர் பக்கத்தில் மண்டியிட்டு, அவர் தாடையைப் பிடித்து தலையை நிமிர்த்த வேண்டும்.
- வலது கையில் கீழ் பாகத்தை மார்பின் நடுவில் வைத்து அதன்மேல் இடது கையை வைக்கவும்.
- முட்டியை நேராக வைத்து நெஞ்செலும்பு நடுவில் 1 முதல் 2 அங் குலம் வரை கீழ் அழுத்தவும். பின் கையை
- எடுக்காமல் அழுத்தத்தை நிறுத்தவும். ஒரு நிமிடத்திற்கு 60 – 80 தடவை இந்த முறையைக் கையாளவும்.
- சிறு பிள்ளைகளுக்கு இரு விரல்களை மட்டும் வைத்து அழுத்தவும், மூச்சும், இதயத்துடிப்பும் நின்றுவிட்டால் மார்பை அழுத்துவதையும் வாய்க்குள் – வாய் சுவாச முறையையும் செய்யவும். இருவர் இருந்தால் ஒருவர் அழுத்தி விட மற்றவர் வாய்க்குள் – வாய் சுவாச முறை செய்யவும்.
- ஒருவர் தானே மூச்சுவிடும் வரை அல்லது அவர் இறந்தார் என்ற நிலை அறியும் வரை இந்த முறைகளைக் கையாளவும். அரைமணி நேரம் செய்தும் ஒரு முன்னேற்றமும் இல்லாவிட்டால் நிறுத்தவும்.
ரத்தப் போக்கு இருந்தால் பின்வருவனவற்றைச் செய்யவும் முறை :
1. காயம் பட்ட இடத்தைச் சற்று உயர்த்திப் பிடிக்கவும் (ரத்தப் போக்கைக் குறைக்க)
2. சுத்தமான ஒரு துணியை (துணி எதுவும் இல்லாவிட்டால் உறை அணிந்து கொண்டு உங்கள் கையை) நேரடியாகக் காயத்தின் மீது வைத்து ரத்தப் போக்கு நிற்கும்வரை அழுத்திப்பிடித்துக் கொண்டிருக்கவும்.
15 நிமிடமோ சில சமயங்களில் ஒரு மணி நேரமோ அல்லது அதற்கும் அதிகமாகவோ கூட இவ்வாறு செய்ய வேண்டி இருக்கலாம்.
இதனால் பெரும்பாலான காயங்களிலிருந்து ஏற்படும் ரத்தப் போக்கைக் கட்டுப்படுத்தலாம் – சிலசமயம் உடலின் ஒரு பகுதி வெட்டப்பட்டாலும் கூட.
3. காயத்தின் மீது அழுத்திப் பிடித்தும் கூட இரத்தப் போக்குக் கட்டுப்படாமல் ரத்தம் மிகுதியாக வந்து கொண்டிருந்தால்,
- காயத்தின் மேல் தொடர்ந்து அழுத்திப் பிடித்துக் கொண்டிருக்கவும்.
- அடிப்பட்ட பகுதியை எவ்வளவு முடியுமோ அவ்வளவு உயர்த்திப் பிடிக்கவும்.
- கையில் அல்லது காலில் காயம்பட்டிருந்தால், காயத்திற்குச் சற்றுத் தள்ளி மேல் பகுதியில் படத்திலுள்ள மாதிரி கட்டுப் போடவும். ரத்தப் போக்குக் கட்டுப்படும் வகையில் கட்டை இறுக்கவும். கை அல்லது கால் நீலமாக மாறும் அளவுக்குக் கட்டை இறுக்க வேண்டாம்.
- உடலிலிருந்து காயம்பட்ட பகுதிகள் எந்த நாளத்திலிருந்து ரத்தம் வருகிறதோ அந்த நாளத்தின் அழுத்த முனைகளை விரல்களைக் கொண்டு எலும்பு தென்படும் வரை அழுத்தவும். இது ரத்தப் போக்கைக் குறைக்க உதவும்.
- ரத்தப்போக்கு நின்றுவிட்டதை அறிய குறைந்த பட்சம் 20 நிமிடங்களாவது அழுத்திப் பிடிக்கவும்.
- கட்டுப் போடுவதற்கு மடித்த துணியையோ அல்லது அகலமான `பெல்ட்’ டையோ பயன்படுத்தவும். மெல்லிய கயிறு, நைலான், பிளாஸ்டிக் கயிறு முதலியவற்றை ஒரு போதும் பயன்படுத்தக் கூடாது.
* நேரடியாகக் காயத்தின் மீது அழுத்திப் பிடித்தும் கட்டுப்படுத்த முடியாத அளவு இரத்தப்போக்குக் கடுமையாக இருந்தால் மட்டுமே கட்டுப் போட வேண்டும்.
* கட்டு இன்னும் அவசியமா என்று தெரிந்து கொள்வதற்கு, ரத்த ஓட்டத்திற்கு ஏதுவாக அரை மணி நேரத்திற்கு ஒரு முறை கட்டைச் சற்று நேரம் தளர்த்திவிடவும். வெகு நேரம் கட்டை அவிழ்க்காமல் விட்டு விட்டால் கையையோ காலையோ அகற்ற வேண்டிய அளவுக்குப் பாதிப்பு ஏற்படலாம்.
* ரத்தப் போக்கை நிறுத்த ஒருபோதும் மண், சாணம், மண்ணெண்ணெய், சுண்ணாம்பு அல்லது காப்பிப் பொடியைப் பயன்படுத்தாதீர்கள்.
* காயம் அல்லது இரத்தப் போக்கு கடுமையானதாக இருந்தால் அதிர்ச்சி ஏற்படுவதைத் தடுக்கப் பாதத்தை உயர்த்தித் தலையைத் தாழ்வாக வைக்கவும்.
* நாடித்துடிப்பு, இதயத்தடிப்பு இருக்கிறதாப என்று கவனிக்கவும். இல்லாவிட்டால் இதய தசையைப் பிடித்து விடவும்.
* பாதிக்கபட்டவர்களுக்கு உதவுபவர்களின் கையில் காயமோ வெட்டோ இருந்தால் அதில் ரத்தம் படாமலிருக்க கையுறை அல்லது பிளாஸ்டிக் பையைப் பயன்படுத்தவும்.
Monday, January 6, 2014
Subscribe to:
Posts (Atom)