V

SSLC MARK 2012- CHENNAI GRAPHIX

mba.basheer

Welcome to my website. join with us

quick search

Friday, June 13, 2014

இன்டர்வியூவில் கேட்கப்படும் பொதுவான கேள்விகள்

இன்டர்வியூவில் கேட்கப்படும் பொதுவான கேள்விகள்

வேலை நிமித்தமா ஏதாவது இ ன்டர்வியூவுக்குப் போகும்போது, வழக்கமா நம்மளோட  Resume  கொண்டு போவோம். அதை மட் டும் பார்த்துட்டு நமக்கு யாரும் வேலை தரப்போறது கிடையாது. அதையும் தாண்டி பல கேள்விக ள் நம்மகிட்ட கேட்பாங்க. அதுக் கு நாம எப்படி பதில் சொல்றோம் குறத பொறுத்து, நம்மளோட திறமை, மன உறுதினு பல விசய ங்கள தீர்மானிப் பாங்க. வழவழ “னு பதில் சொல்லாம, சுருக்கமாவும் தீர்க்கமாவும் நம்ம ளோட பதில் இருக்கணும்னு அவங்க எதிர் பார்ப்பாங்க.
அப்படி இன்டர்வியூ போகும்போது என்ன மாதிரியான கேள்வி கள் பொதுவா கேட்கப்படும்னு அலசலா ம் வாங்க..
1. உங்களைப் பற்றிய விபரம்கூறுங்கள்?
இந்தக் கேள்வி, உங்களைப் பற்றிய சுய விபரம் சம்பந்தப்பட்டதா இருக்கும். அதா வது உங்களோட பேரு, இடம், கல்வித் தகுதி, தொழில்நுட்பத் தகுதி பற்றி நீங்களே தொகுத்து சொல்லணு ம். (அதுக்காக உங்க வரலாறு முழுக்க சொல்லி போர் அடிச்சி டாதீங்க..)
2. உங்களைப் பற்றி சிறு விளக்கம் கூறுங்கள்?
இதுவும் முதல் கேள்வியும் ஒரே மாதிரியா தோணலாம். ஆனா இது உங்க சுயவிபரம் பற்றி அல் ல, உங்கள் குணநலன் பற்றியது. அதாவது நீங்க எப்படிப்பட்டவர் னு சுருக்கமா சொல்லணும். (எதுக்கும், போறதுக்கு முன்னாடி உங்க நண்பர்கள்கிட்ட கேட்டுத் தெரிஞ்சு வச்சு க்கங்க..)
3. இதற்கு முன் பணிபுரிந்த அனுபவம் பற்றி கூறுங்கள்?
அனுபவம்ங்குறது பெரும் பாலான நிறுவனங்கள்ல அவசி யமானதா மாறிடுச் சு. இதைப் பொறுத்து வே லை வாய்ப்புகள் அமையு ம் சூழ லும் உருவாகிடுச்சு. (இஷ்டத்துக்கு அள்ளி விட க் கூடாது.. அதுக்கான சா ன்றி தழும் இருக்கணும்..)
4. பொழுதுபோக்கு அம்சங்கள் என்ன?
தூங்குவேன், டிவி பாப்பேன்“னு கேனத்தனமா பதில் சொல்லாம, அவங்களை கவர்ற மாதிரியான, உறுப்படியான பொழுதுபோக்கு அம்சங்கள சொல்லனும். அதுக்காக நமக்குத் தெரியாத விசயங்களப் பத்தி பந்தாவா சொல்லிட்டு முழிக்க்க்கூடா து. ஏன்னா கேள்விகள் அதப் பத்தியும் வரக் கூடும்.
5. ஏற்கனவே பணி செய்த நிறுவனத்தி லிருந்து விலகக் காரணம்?
“அதிகமா லீவு போட்டேன், அதுனால அவங்களே தொரத்திட்டாங்க“னு ரொ ம்ம் ம்ம்ப நேர்மையா பதில் சொல்ல க்கூடாது. உங்கள ரொம்ம்ம்ப நல்ல்ல் ல்லவர்னு நெனைக்கிற மாதிரி யான காரணத்தை சொல்லணும்.
6. இந்த நிறுவனத்தில் உங்களது பங்களிப்பு என்னவாக இருக்கும்?
இது உங்களோட உழைப்பு பற்றிய கேள்வி. நீங்க இதுக்குக் கொ டுக்கும் பதில் அவங்களுக்கு உங்க மேல நல்ல அபிப்ராயத்தை ஏற் படுத்தணும். (அதுக்காக ஓவர் ஆக்டிங் குடுக்கக்கூடாது.. அடக்கிவாசிங்க..)
7. என்ன சம்பளம் எதிர் பார்க்குறீர்கள்?
இதுரொம்பவே முக்கிய மானகேள்வி. கூடுமான வரை நாம வாய திறக் காம இருக்குறதே நல்ல து. ஏன்னா நாம குறிப் பிடும் தொகை, ஒரு வே ளை அவங்க நிர்ணயி ச்சு வச்சிருக்குறத விட குறைவானதா இருக்க லாம். (பெர்ஃபார்மன்ஸப் பொறுத்து சம்பளம் குடுங்க“னு சொல் லிட்டு பம்மிடலாம்..)
8. உங்கள் பலம், பலவீனமாக எதனைக் கருதுகிறீர்கள்?
இது உங்கள நீங்க எந்த அளவுக்குப் புரிஞ்சு வச்சி ருக்கீங்கங்குறத காட்ட உதவும். அது மட்டுமில்லா ம, உங்களோட நடத்தை யை எடை போட உதவும்.. ஜாஆ ஆஆ ஆக்கிரதை. அதுக்காக தம் அடிக்கிற பழக்கம் பத்தியெல்லாம் ஓப்பனாசொல்லப்படாது..)
9. இந்த நிறுவனம் பற்றி உங்களுக்குத் தெரிந்த தகவல்கள் என்ன?
இது ரொம்பவே முக்கியமான கே ள்வி. குறிப்பிட்ட வேலைக்கு வி ண்ணப்பிக்கும் போது, அந்த நிறுவ னம் பத்தியும், அந்த வேலை பத்தி யும் தெளிவா தெரிஞ்சுவச்சுக்குற து அவசியமானது. (ஜஸ்ட்.. விளம் பரம் பாத்தேன், அப்ளை பண்ணே ன், தட்ஸ் ஆல்“னு தெனா வெட்டா பதில்சொல்லி ஆப்பு வாங்காதீங் க..)
10. பணிநிமித்தம் பயணம் செய்ய சம்மதிப்பீர்களா?
வேலை காரணமா, சில நாள் வெளி யூர் செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற் படலாம். அதுக்கு நீங்க தயாராஇருக் கிங்களானு முன்னாடியே தீர்மானிச் சு வச்சுக்குறதுஅவசியம்.(கூடவே லை பாக்குற பொண்ணை துணைக் கு அனுப்புவீங்களானுகேட்றாதீங்க .)
11. முந்தைய நிறுவனத்தில் ஏதேனும் இக்கட்டான சூழ்நலையை கையாண்ட அனுபவம் உண்டா?
வேற நிறுவனத்துல வேலை பார்த்த அனுபவம் இருந்துச் சுனா, இந்தக் கேள்விக்கான பதில், நம்ம ளோட திறமை யை யூகிக் கச் செய்யும். (ஆபீ சுக்கு லீவு போட்டுட்டு, பாட்டி செத்துப்போய்ட்டாங்கனு ச மாளிச்ச அனுபவத்த சொல் லி வச் சுடாதீங்க..)
12. தனித்து செயல்பட விருப்பமா ? அல்லது குழுவாக செயல்பட விருப்பமா?
இது அவங்கவங்க, தன்மேல வச் சிருக்குற நம்பிக்கையப் பொறுத் து பதி லளிக்கணும். (நா தனியா தான் வருவேன்.. ஆனா தனியாள் இல்லேனு பன்ச் அடிச்சுடாதீங்க ..)
13. இங்கு வேலை கிடைக்காத பட்சத்தில் உங்களுடைய பிரதி பலிப்பு என்னவாக இருக்கும்?
மனசுக்குள்ள கெட்ட வார்த்தைல திட்டுவேன்“னு சொல்லத் தோ ணும். ஆனா சொல் லிடாதீங்க.. இது உங்க விடா முயற்சி, நம்பிக் கை பத்தின கேள்வியா இருக்கும். இந்த பதிலை வச்சுக்கூட வேலை கிடைக்கலாம்.
14. எவ்வளவு காலம் இங்கே பணி செய்யத் தயாராக இருக்கி றீர்கள்?
“ஃப்ரெண்ட் கம்பெனில அப்ளை பண் ணிருக்கேன். கிடைச்சதும் ஓடிடு வேன்“னு அதிமேதாவித்தனமா பதில் சொல்லக் கூடாது. இதுக்கு குறிப்பிட்ட காலவரையறை எ துவும் சொல்லாம, கடைசிவரைக்கும் இருப்பேன்னு சொல்ல ணும். தொடர்ந்து வே லைசெய்ய முன்வரும் பட்சத்துல வாய் ப்புகள் தர ப்படலாம்.
15. உங்களுக்கு, எங்க ளிடத்தில் கேட்கவேண் டிய கேள்விகள் ஏதாவ து இருக் கின்றனவா?
இது, நிறுவனம் அல்லது பணி பற்றி, நமக்கு ஏதாவது சந்தேகங்கள் இருக் காங்குற நோக்கத்துல கேட்கப்படுது. திறம்பட கேட்டுத் தெளிவுபடுத்திக் கொ ள்ளலாம். இந்தக் கேள்வியில இருந்து ம் நம்மளோட, தெரிந்துகொள்ளும் ஆர் வம் ஆராயப்படும். (இங்க எத்தன பொ ண்ணுங்க வேலை பாக்குறாங்க“னு கேட்டுறாதீங்க…)
*
நிறுவனங்களப் பொறுத்து, இன்னும் பல கேள்விகள் கேட்கப்படலாம். கே ள்விகள் எதுவாகயிருந்தாலும் தைரி யமா, தடுமாற்றமில்லாமல நாம கூறு ம் பதில்கள் ரொம்பவே அவசியம். நம் மகிட்டயிருந்து வெளிப்படும் பதில் கள், சம்பந்தப்பட்டவர்க்கு திருப்தியளி க்கும் பட்சத்துல, அதற்கான பலன் நிச்சயம் பாசிடிவ்வாக அமையும்.
வாழ்த்துக்கள்

Monday, June 2, 2014

கியாஸ் கசிவு ஏற்பட்டால் புகார் செய்ய இலவச தொலைபேசி வசதி..!

கியாஸ் கசிவு ஏற்பட்டால் புகார் செய்ய 24 மணி நேர இலவச தொலைபேசி வசதி - ஐ.ஓ.சி அறிமுகம் இந்தியன் ஆயில் நிறுவனம் இன்டேன் கியாஸ் வாடிக்கையாளர்களுக்காக புதிய இலவச தொலைபேசி வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது.


அந்த எண் 1800-425-247-247.


தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள இன்டேன் வாடிக்கையாளர்களுக்கு உதவுவதற்காக இந்த

வசதி தொடங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் 80 லட்சம் கியாஸ் இணைப்புகள் உள்ளன.


475 ஏஜென்சிகளின் கீழ் இந்த வாடிக்கையாளர்கள் உள்ளார்கள். தற்போது அவசர தேவைக்கு 3 செல்போன் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அதை டிஸ்ட்ரிபியூட்டர்கள் கையாளுகிறார்கள். அலுவலக நேரம் தவிர, மற்ற நேரங்களில் அவசர உதவிக்கு புகார் செய்ய முடியாத நிலை இருந்தது. எனவே இந்தியன் ஆயில் நிறுவனம் இந்த புதிய சேவை வசதியை ஏற்படுத்தி உள்ளது.


இந்த தொலைபேசி மாலை 5 மணி முதல் மறுநாள் காலை 9 மணி வரை செயல்படும். சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களில் 24 மணிநேரமும் இயங்கும். கியாஸ் கசிவு பற்றி இரவு நேரத்தில் புகார் செய்தாலும் உடனடியாக சம்பந்தப்பட்ட பகுதி மெக்கானிக்கு உடனடியாக தகவல் கொடுக்கப்படும்.


உடனடியாக அவர் கியாஸ் கசிவை பார்த்து விட்டு கால்சென்டருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

மருத்துவக் காப்பீட்டுக்கு விண்ணப்பிப்பது எப்படி?

முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்துக்கு விண்ணப்பிப்பதற்கான நடைமுறைகள் என்னென்ன?





‘மருத்துவச் செலவு என்பது திடீரென வரக் கூடியது. ஆதலால் மருத்துவக் காப்பீட்டு எடுத்து வைத்துக் கொள்வது மிக நல்லது. தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் நம்மிடம் பிரீமியத் தொகை பெற்றுக்கொண்டு காப்பீடு அளிக்கின்றன. அதுவும் சில நோய்களுக்கும், அவசர சிகிச்சை மற்றும் அறுவைச் சிகிச்சைகளுக்கு மட்டுமே. அதுபோல பொருளாதார வசதி இல்லாத ஏழைகளுக்காகக் கொண்டுவரப்பட்டது முதலமைச்சரின் மருத்துவக் காப்பீடுத் திட்டம். இத்திட்டத்தின் பயனைப் பெற விண்ணப்பிப்பது எப்படி? அதற்கான தகுதிகள் என்ன? ஆகியவற்றைத் தெரிந்துகொள்ளலாம்.


மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் என்பது என்ன?

நமக்கு ஏற்படும் சில மருத்துவ உதவிகளுக்குத் தேவையான பணத்தை அரசே செலுத்துவதுதான் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்.


தகுதிகள்:

இத்திட்டத்தின் பயனைப் பெற ஒரு குடும்பத்தின் ஆண்டு வருமானம் 72,000 ரூபாய்க்குக் கீழே இருக்க வேண்டும்.


தேவையான ஆவணங்கள்:

கிராமப் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனில் கிராம நிர்வாக அலுவலரிடமும், நகர்ப்புறத்தைச் சேர்ந்தவர்கள் எனில்தாசில்தாரிடமும் வருமானச் சான்றிதழ் வாங்கிக் கொடுக்க வேண்டும்.


குடும்ப அட்டை இருக்க வேண்டும். குடும்ப அட்டையில் பெயர் உள்ளவர்கள் மட்டுமே இத்திட்டத்தின் பயனைப் பெற முடியும்.


எங்கே விண்ணப்பிப்பது?

ஒவ்வொரு மாவட்ட அலுவலகத்திலும் காப்பீட்டுத் திட்ட மையம் இயங்கி வருகிறது. அந்த மையத்திற்குச் சென்று விண்ணப்பத்தைப் பெற்று பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களைக் கொடுக்கவும். பின்னர் அவர்கள் சொல்லும் தேதியில் குடும்பத்துடன் சென்று புகைப்படம் எடுத்துக் கொள்ளவும். புகைப்படம் எடுக்கப்பட்டதும் ஓரிரு நாட்களில் மருத்துவக் காப்பீட்டு அட்டைவழங்கப்படும். 


பயனை எப்படிப் பெறுவது?

இத்திட்டத்தின் மூலம் அரசு மற்றும் பதிவு பெற்ற தனயார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம். சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பயன்பெற முடியும். இதன் மூலம் கீழ்க்கண்ட சிகிச்சைகளைப் பெற முடியும்.


இதயம் மற்றும் இதய நெஞ்சக அறுவைச் / cardiology and cardiothoracic surgery

புற்றுநோய் மருத்துவம் /ˆOncology

சிறுநீரக நோய்கள் /‡Nephrology / urology

மூளை மற்றும் நரம்பு மண்டலம் /neurology and neuro surgery

கண் நோய் சிகிச்சை/opthalmology

இரைப்பை (ம) குடல் நோய்கள் /Gastroenterology

ஒட்டுறுப்பு (பிளாஸ்டிக்) அறுவைச் சிகிச்சைகள் /Plastic Surgery

காது, மூக்கு மற்றும் தொண்டை நோய்கள்/E.N.T

கருப்பை நோய்கள்/Gynaecology

ரத்த நோய்கள் / Haematology



மருத்துவமனை செல்லும்போது கவனிக்க வேண்டியவை:

சிகிச்சைக்கு அனுமதிக்கப்படும் முதல் நாள் முதல் சிகிச்சை முடிந்து வீட்டுக்கு அனுப்பப்படும் நாளிலிருந்து ஐந்து நாட்களுக்கு செய்யப்படும் பரிசோதனைகளுக்கான கட்டணம் மற்றும் இதர செலவினங்களுக்கான தொகையும் இத்திட்டத்தில் வழங்கப்படும்.


இலவச சிகிச்சைக்காக மருத்துவ மனையில் அனுமதிக்கப்படும் முன் அந்த மருத்துவமனையில் காப்பீடுத் திட்ட அலுவலரைச் சந்தித்து மேலும் விவரங்களைத் தெரிந்துகொள்ள வேண்டும். ஏனெனில் ஒரே சிகிச்சை வெவ்வேறு மருத்துவமனைகளில் வெவ்வேறு கட்டணங்கள் பெறப்படுவதுண்டு.


ஆன்லைனில் தெரிந்துகொள்ள:-

உறுப்பினர் விண்ணப்பப் படிவத்தைப் பெற இந்த இணைப்பில் செல்லவும். https://docs.google.com/file/d/1VpMQHGnbQywYPlAxYoW8AFec27t6s6sUNMjAIJdGJUtzluRhC2G9KqJl5aMS/edit



மேலும் விவரங்களுக்கு:

இத்திட்டத்தில் பதிவு செய்து கொள்வதற்கும், மேற்கொண்டு விவரங்களைப் பெறவும் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தைத் தொடர்புகொள்ளலாம்.
http://www.cmchistn.com/  இத்தளத்திற்குச் செல்லலாம்.

1800 425 3993 என்ற எண்ணிலும் தொடர்புகொள்ளலாம்.