V

SSLC MARK 2012- CHENNAI GRAPHIX

mba.basheer

Welcome to my website. join with us

quick search

Wednesday, May 20, 2015

+2முடித்தவரா?, அடுத்து என்ன படிக்கலாம்?


பிளஸ்2 முடிந்து அடுத்து நமது பிள்ளைகளை என்ன படிக்க வைக்கலாம்? என்னபடித்தால் வேலைவாய்ப்பு பிரகாசமாக இருக்கும்? இது பெற்றோர்களின் மனதில் எழும் கேள்வி. இன்றைய காலகட்டத்தில் இது ஒன்றும் பெரிய பிரச்சனை இல்லை. ஏனெனனில் இன்டெர்நெட் இருக்கிறது. தேடல்கள் அனைத்திற்கும் பதில் இருக்கிறது. இவர்களுக்கு முதலில் ஏற்படும் குழப்பம் நாம் எந்த துறையை தேர்ந்தெடுப்பது என்பதில் தான்? அடுத்து என்ன படிக்கலாம்? நமது கல்வி அமைப்பே மதிப்பெண் சார்ந்து இருப்பதால் மதிப்பெண்களுக்குத்தான் அதிகம் முக்கியத்துவம் தரப்படுகிறது. அதே சமயம் நமது ஆர்வம் எதை நோக்கி நம்மை செலுத்துகிறது என்பதை உற்றுநோக்குவதில் சிலர் கோட்டைவிட்டு விடுகிறார்கள். 

அதிலும் நம்பிள்ளைகளின் விருப்பம் என்ன என்று பார்ப்பதில் அதிக பெற்றோர்கள் கவனம் செலுத்துவதில்லை என்றே சொல்லலாம். இதனால் மனம் உடைந்த பிள்ளை வீட்டைவிட்டு ஓடிய கதையை நாம் கேட்டிருப்போம். இது ஒருபுறம் இருக்க சில பலபடிப்புகள் பற்றி மட்டும் சிலரால் பெரிதும் பேசப்படுவது உண்டு. இதனை வைத்து தேர்வு செய்பவர்களும் உண்டு. பெற்றோர்களின் கனவை நினைவாக்குது என்ற எண்ணத்தில் செயல்படுவதாக நினைத்து கடைசியில் ஏமாற்றம் அடைவது, அல்லது நம்முடைய திறன் எத்தனை? என்பதை கவனத்தில் வைக்காமல் இருப்பது, இவைகளை கவனத்தில் கொள்ளாமல் படிப்பை தொடர முற்படும் போது அவர்கள் நினைத்த உயரத்திற்கு போக முடியாத சூழ்நிலைகள் ஏற்படுகிறது. 

இவர்கள் அனைவருக்கும் சொல்ல விரும்புவது ஒன்றுதான். படிப்புக்கு மதிப்பெண் அவசியம் தான். ஆனால் அதனையும் விட நமது ஆர்வம், விருப்பம் நம்மை எதை நோக்கி இழுக்கிறதோ அதனை நோக்கித்தான் செல்ல வேண்டும். அதில் உள்ள அனைத்து விஷயங்களையும் தெளிவாக திறந்த மனதோடு ஆராய்வதில் தப்பில்லை. கவுன்சிலிங் பற்றித்தான் குறிப்பிடுகிறேன். அறிவியல் சார்ந்த, பொறியியல் சார்ந்த, அல்லது வணிகவியல் சார்ந்த படிப்புகள் நிறைந்து இருக்கிறது. மேலும் குறிப்பிட்ட தொழிலை சார்ந்த படிப்புகளும் இருக்கிறது. உதாரணத்திற்கு CA, CS, ஜர்னலிஸம் போன்றவை. என்ஜினீயரிங் துவங்கி பிபி வில் முடிகிற அந்தத் துறைகளையும் அவற்றின் முக்கியத்துவத்தையும் பற்றி விரிவாக தெரிந்து கொள்ள வேண்டும். இதனை தொடர்ந்து டிசைனில் 

Artistic-Basic Jewellery Design Program, 
B. Sc Degree in Fashion, Interior and Textile Design, 
B.Arch B.Arch. (Interior Design)
B.Des. (Accessory Design)
B.Des. (Fashion Design)
B.Des. (Textile Design)
B.Sc in Fashion TechnologyBachelor of Design Bachelor of Architecture 
(B.Arch)Bachelor of Design 
(B. Des ) in Fashion Communication
B.Sc in Jewellery Design
B.Sc (Fashion & Apparel Designing)
Comprehensive course in Jewellery Design & Diamonds
Course in Dress Designing and Garment Manufacturing Creative Fabric Desingning
Design and Pattern Making
Diplima in Fashion Designing -Basic (1 Year)
Diploma Course in Textile Designing
Diploma in Advanced Fashion Designing
Diploma in Fashion and Apparel Design (DFAD)
Diploma in Fashion Design
Diploma In Gems & Jewellery
Diploma in Interior Design
Disigner Coordinator- Interior DesignGraduate 
Diploma in Design (GDD)Graduate 
Diploma in Fashion Design (GDFD) + Bachelor of Science (Fashion Design)- 
B.Sc FDGraduate Diploma Programme in Animation Film DesignGraduate 
Diploma Programme in Design (GDPD)Graduate 
Diploma Programme in Film and Video DesignGraduate 
Diploma Programme in Product Design Interior Designing
Jewellery Designing on Computer Professional course 
Interior Design.Three Year International Programme in Fashion Design என படிப்புகள் டிசைனில் மட்டுமே உள்ளது.





courtesy : dinakarannews

Saturday, May 2, 2015

உங்களுக்குள் தாழ்வு மனப்பான்மையா? இத படிங்க முதல்ல,,,,

  அன்பான எனது இணைய வாசகர்களுக்கு சில நாட்களாக பதிவு செய்யாததற்கு முதலில் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன்,

சரி விசயத்திற்கு வருவோம்,,

நம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான தாழ்வு மனப்பான்மைகள் இருக்கலாம், அதாவது வசதி .  உடல்நலம்,, தொழில்,,, பேச்சு என கூறிக்கொண்டே போகலாம், 

ஒருவர் தொடக்கம்(பிள்ளைபருவம்) முதலே அனைத்தையும் கற்றுக்கொண்டுவருவதில்லை,, அவர் வளர்ச்சி,, படிப்பு, இளமைப்பருவம்,, பள்ளிப்பருவம்,, கல்லுரி காலம்,, வாலிப பருவம்,,   திருமண பருவம் என இதையெல்லாம் தாண்டி வரும்போது இந்த ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு அனுபவத்தையும்,,,  பாடத்தையும் கற்றுக்கொள்கிறான், ஆக அடிப்பட்டு அடிப்பட்டே ஒவ்வொன்றையும் கற்றுக்கொள்கிறேன், நாமும் அப்படியே என்று நமக்கு இன்னும் காலம்இருக்கிறது நம்மால் முடியும், நாம் எதை செய்யவேண்டும்,, எதிலிருந்து ஆரம்பிக்க வேண்டும், எதனால் இந்த காரியம் வெற்றி அடைந்தது, அல்லது எந்த படியில் இந்த காரியம் தோல்வி அடைந்தது,, என்று ஆராய்ந்தாலே நாம் எந்த ஒரு விசயத்தையும் வெற்றிகரமாகவும், அல்லது ஒருபாடமாகவும் இருக்கும்,  இதனையறியாமல் செயல்பட்டால் நம்மால் இது இயலவில்லையே, நமக்கு மட்டு்ம் ஏன் இப்படி - என்று கடவுள் மீது பழிப்போட்டு நம்மை தாழ்வுமனப்பான்மை கொண்டவராகவே செயல்படுவாேம்,,

எனவே இதை பாேக்க உங்களுக்குள் சில மாற்றங்கள் ஏற்படுத்த வேண்டும்,
அப்புறம் என்ன, வெற்றி,,,வெற்றி,,, வெற்றி
இத படிங்க முதல்ல 
1. நீங்கள் அழகு என்பதை முதலில் நீங்கள் நம்புங்கள். நிறத்திற்கும் அழகிற்கும் சம்பந்தமில்லை என்பதை ஏற்றுகொள்ளுங்கள். யாரும் சொன்னாலும் ரசித்தாலும் தான், நான் அழகு என்று நினைப்பதை நிறுத்துங்கள். உங்களை நீங்களே ரசியுங்கள்.
2. எந்த மொழி சரளமாக பேச முடியவில்லை என்றாலும் கவலை கொள்ளாதீர்கள். உங்களை நக்கல் செய்பவரிடம் துணிச்சலாய் எதிர்த்துத் சொல்லுங்கள் இங்கு பலருக்கு அவரவர் தாய் மொழியையே சரியாகப் பேசத் தெரியாதென்று.
3. உங்களால் எது முடியாது. உங்களுக்கு எது தெரியவில்லை என்று யாரேனும் சொன்னாலும், அதை விரைவில் கற்றுக் கொண்டு முடித்துக் காட்ட வெறித் தனமாய் முயற்சி செய்யுங்கள்.
4. என் வாழ்க்கை சோகம் நிறைந்தது என்று நினைக்காதீர்கள். எல்லாம் நிறைவாய் இருக்கும் வாழ்க்கை இங்கு யாருக்குமே அமைவதில்லை என்பதே உண்மை.
5. உங்களுக்கு எதுவும் தெரியாது. எதிரில் நிற்பவருக்கு எல்லாமே தெரியும் என்று ஒரு போதும் நினைக்காதீர்கள். இந்த எண்ணம் இருந்தால் நீங்கள் சொல்ல வந்ததை சரியாக தடுமாற்றம் இன்றி சொல்லி முடிக்க முடியாது.
6. கேள்வி கேட்பதற்கும் உங்களை முன் நிறுத்துவதற்கும் மொழி புலமை அவசியம் என்று நினைக்காதீர்கள். உலகில் சரியாக சிந்திக்க வைத்த கேள்விகளை கேட்ட நிறையப் பேர் மொழிப்புலமை இல்லாமல் தங்களுக்கு தெரிந்த வார்த்தைகளைக் கொண்டு தங்கள் கேள்விகளை சரியாக புரியவைத்தவர்கள்.
7. அழும் போது தனியாக அழுங்கள். நீங்கள் அழைத்தாலும் சேர்ந்து அழ இங்கு யாரும் வரப்போவதில்லை என்பதை ஏற்றுக் கொள்ளுங்கள். கண்ணீரில் துக்கத்தை கரைத்து தூர எறிந்து விட்டு முன் செல்லுங்கள்.
8. உங்கள் அன்பு எந்த இடத்தில் நிராகரிப்பட்டாலும் இழப்பு உங்களுக்கில்லை,நிராகரித்த்வருக்கே என்பதை புரிந்துக் கொள்ளுங்கள்