Monday, January 16, 2012
Shifting for your chennai graphix
வாடிக்கையாளர்களுக்கு ஒர் அறிவிப்பு
நமது சென்னை கிராபிக்ஸ் தற்போது வரும் பெப்ரவரி மாதம் முதல்புதிய இடத்தில் செயல்படும் என்பதை தெரிவித்து கொள்கிறோம் .
ஜாபார்சா தெரு (டைமன் தெரு) பீ யன் லாட்ஜ் அருகில், திருச்சி -8 .
அனைவரும் வருக ! ஆதரவு தருக !
Sunday, January 15, 2012
smoking good injuries in your life
புகை பிடிப்பதினால் ஏற்படும் நன்மைகள் ...
இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
புகை
பிடிப்பதினால் ஏற்படும் தீமைகளைதான் இது வரை படித்து வந்திருப்பீர்கள் ஆனால்
இதனால் ஏற்படும் நன்மைகளை அறிந்திருபீர்களா என்பது தெரியவில்லை தொடர்ந்து
படியுங்கள்
புகை
பிடிப்பதினால் ஏற்படும் நன்மைகள்...
1) இலவச
சுற்றுலா :- அதாவது விதவிதமான கேன்சர் மருத்துவமனைகளுக்கு குடும்ப உறுப்பினர்களின்
செலவில் இலவச சுற்றுலா சென்று வரலாம் ..
( உலகளவில்
இறப்பிற்கு இரண்டாம் மிகப்பெரிய காரணமாக புகையிலை பயன்படுத்துவது அமைந்துள்ளது.
புகைபிடிப்போரில் பாதிக்கும் மேலானவர்கள் புகையிலை சம்பந்தப்பட்ட நோய்களினாலேயே
இறக்கின்றனர்.)
2) பிறர்க்கு உதவி :- அதாவது “தமக்கிருப்பதை பிறர்க்கு கொடுத்து உதவு” என்பதை போல தாம் பிடித்து வெளியே விடும் புகையினால்
அருகில் இருப்பவருக்கும் நோயை கொடுக்கலாம் .
( வாரத்துக்கு
நாற்பது மணி நேரம் சிகரெட் புகை உலவும் இடங்களில் இருப்பவர்கள், தொடர்ச்சியாக ஐந்து ஆண்டுகள் அத்தகைய ஒரு சூழலில்
இருக்க நேர்ந்தால் அவர்களுக்கு நுரையீரல் புற்று நோய் உட்பட பல நோய்கள்
தாக்குகின்றன. )
3)
திருட்டை தடுத்தல் :- தொடர்ந்து புகை பிடிப்பதினால் ஏற்படும் தொடர் இருமலால் இரவு
திருடன் வருவதை தடுத்து சொத்தை காப்பாற்றலாம் .
( புகை பிடித்தல்
தனி மனிதனை மட்டுமன்றி சமூகத்தையும் பாதிக்கிறது என்பதும் நமக்குத் தெரிந்ததே.
சீனாவில் மட்டுமே இருபது இலட்சம் பேர் புகை பாதித்து மரணமடையும் வாய்ப்பு
இருக்கிறதாம் )
4) சிகரெட்
கம்பெனி முதலாளிகளையும் சில்லறை விற்பனையாளர்களையும் மேலும் மேலும்
பணக்காரர்களாக்க தொடர்ந்து சிகரெட் வாங்கி உதவலாம் .
( புகை
பழக்கத்துக்கு அடிமையான பலர் பிற்காலத்தில் அதிலிருந்து விடுபட புகையிலை மெல்லும்
பழக்கத்துக்குத் தாவி விடுகின்றனர். அது புகை பிடிப்பதை விட அதிக ஆபத்தான
விளைவுகளை ஏற்படுத்தும் என நியூயார்க் ஆராய்ச்சி ஒன்று தெரிவிக்கிறது. )
5)ஆண்மை
குறைபாடு , வாய் துர்நாற்றம் போன்றவற்றை ஏற்படுத்தி கொண்டு மனைவி விரைவில்
விவாகரத்து கேட்க உதவலாம் .
( மூளையில் பரவும்
நிக்கோட்டின் புகை எல்லோருடைய மூளையிலும் ஒரே போன்ற மாற்றங்களை ஏற்படுத்துவதில்லை.
சிலருக்கு அது எந்த மாற்றத்தையும் செய்யாமல், சிலரிடம் அதிகப்படியான மாற்றத்தை நிகழ்த்தி
விடுகிறது )
மாசில்லா
காற்றை சுவாசிப்பது மனிதருக்கான பிறப்புரிமை, அது
புகைபிடிக்கும் சிறு பான்மையினரால் பறிக்கப்படுவது வருந்தத்தக்கது.
புகை பிடித்தலின் தீமைகளும், அதை விலக்கும், தவிர்க்கும் முறைகளும் அனைவருக்கும் தெரிந்திருந்தும் அது குறித்த விழிப்புணர்வை பல வேளைகளில் இளைய தலைமுறையினருக்கு நாம் ஏற்படுத்துவதில்லை
புகை பிடித்தலின் தீமைகளும், அதை விலக்கும், தவிர்க்கும் முறைகளும் அனைவருக்கும் தெரிந்திருந்தும் அது குறித்த விழிப்புணர்வை பல வேளைகளில் இளைய தலைமுறையினருக்கு நாம் ஏற்படுத்துவதில்லை
இன்றே விலக்குவீர்,வாழ்வீர் பல்லாண்டு !!
Saturday, January 7, 2012
AVOID THE UNUSED COMPUTER MESSAGE

தொழில் நுட்பம் என்று வருகையில் நாம் பல தவறுகளை ஏற்படுத்துகிறோம்.
கம்ப்யூட்டர் பயன்பாட்டில் நாம் ஏற்படுத்தும், சில சாதாரண தவறுகளை இங்கு காணலாம்.
1. டெஸ்க்டாப்பில் அதிக ஐகான்கள்: பலரின் டெஸ்க்டாப், எதனையும் ஏற்றுக் கொள்ளும் நம் மேஜை டிராயர் மாதிரி, குப்பையாய் காட்சி அளிக்கிறது. நாம் அதில் வைத்த பைலையே தேடி உடனே எடுக்க முடிவதில்லை. இதனாலேயே விண்டோஸ் இயக்கம், “பல ஐகான்கள் வெகுநாட்களாகப் பயன்படுத்தப்படாமல் இருக்கின்றன. அவற்றைச் சரி செய்திடலாமா?" என்று பிழைச் செய்தி காட்டுகிறது.
இதனை எப்படி சரி செய்திடலாம்? அவ்வப்போது பயன்படுத்தப்படாமல் இருக்கும் ஐகான்களுக்குரிய பைல்களை, சார்ந்த ட்ரைவ்களுக்குக் கொண்டு சென்று வைக்க வேண்டும். பைல்களை இணையத்தில் இருந்து டவுண்லோட் செய்கையில், பெரும்பாலும் டெஸ்க் டாப்பிலேயே டவுண்லோட் செய்து வைக்கிறோம். அவசர வழிக்கு இது சரிதான். ஆனால் அடுத்து, அந்த பைலின் தன்மை, பொருள் சார்ந்து அதனை, அதற்கான ட்ரைவிற்குக் கொண்டு செல்ல வேண்டும்.
2. ஷட் டவுண் செய்திட பவர் பட்டன்: இது லேப்டாப் கம்ப்யூட்டர் சார்ந்த செய்தி. பலர் லேப்டாப் கம்ப்யூட்டரின் பணி முடிந்தவுடன், அதனை முறையாக ஷட் டவுண் செய்திடுவதில்லை. பவர் பட்டனை அழுத்தி, கம்ப்யூட்டர் இயக்கத்தினை முடிவிற்குக் கொண்டு வருகிறோம் அல்லது கொண்டு வருவதாக நினைக்கிறோம். பல லேப்டாப்களில் இந்த பவர் பட்டன், லேப்டாப் கம்ப்யூட்டரை ஸ்லீப் மோட் என்னும் செயலற்ற நிலைக்குத்தான் கொண்டு செல்லும்.
இது ஒன்றும் மோசமான தவறு அல்ல. இது போலத் தூங்கும் லேப்டாப், சில நொடிகளில் இயக்கத்திற்கு வந்துவிடும். ஆனாலும் இவ்வாறு செய்வது தவறு. இதற்கான காரணங்கள் இரண்டு. முதலாவதாக, ஸ்லீப் மோட் என்பது முற்றிலும் அனைத்தும் நிறுத்தப்பட்ட நிலை அல்ல. பேட்டரியின் பவர் அப்போதும் செலவழிந்து கொண்டு தான் இருக்கும். எனவே, தொடர்ந்து அது மின்சார சாக்கெட் ஒன்றில் இணைக்கப்பட்டிருந்தாலே, பாதுகாப்பாக இருக்கும். இல்லையேல், அதன் பேட்டரி பவர் தீர்ந்து போய்,மொத்தமும் சக்தி அற்ற பேட்டரி கொண்ட லேப்டாப் தான் உங்களுக்குக் கிடைக்கும்.
இரண்டாவதாக, நீங்கள் எப்போதும் கம்ப்யூட்டரை நிறுத்தி வைக்க, ஸ்லீப் மோடினை விரும்புவதாக இருந்தால், அது கம்ப்யூட்டரை ரீ பூட் செய்திடும் வாய்ப்பினையே இழக்கிறது. விண்டோஸ் சுமுகமாக இயங்க வேண்டும் என்றால், அது முற்றிலும் நிறுத்தப்பட்டு, பின்னர் ரீ பூட் செய்யப்பட வேண்டும்.
3.மவுஸ் பயன்படுத்தி புரோகிராம் இயக்கம்: ஒரு புரோகிராமினை இயக்க ஒவ்வொரு முறையும், ஸ்டார்ட், ஆல் புரோகிராம்ஸ் சென்று, புரோகிராமின் இயக்க பைல் பார்த்து கிளிக் செய்வது. அல்லது அதன் ஐகான் மீது டபுள் கிளிக் செய்வது போன்ற பழைய பழக்கங்களை விட்டுவிடுங்கள். அல்லது குயிக் லாஞ்ச் ஏரியாவில், புரோகிராம் ஐகான்களை வைத்து, அதில் ஒரே ஒரு முறை கிளிக் செய்வதன் மூலம் அவற்றை இயக்கலாம்.
இப்போது இன்னும் வேகமான முறை ஒன்று உள்ளது. விஸ்டா மற்றும் விண்டோஸ் 7 இயக்கத் தொகுப்புகளில், ஸ்டார்ட் பட்டனை அடுத்துள்ள இடத்தில் உள்ள புரோகிராம்களில் வரிசைப்படி, அதற்கான எண்ணை விண்டோஸ் கீயுடன் அழுத்தினால், அந்த புரோகிராம் இயக்கப்படும். எடுத்துக் காட்டாக, ஸ்டார்ட் பட்டனை அடுத்து, இன்டர்நெட் எக்ஸ்புளோரர், பெயிண்ட், குவார்க் எக்ஸ்பிரஸ் என வைத்திருந்தால், விண்+1, விண்+2 என அழுத்தினால், இன்டர்நெட் எக்ஸ்புளோரர், அடுத்ததாக பெயிண்ட் எனத் திறக்கப்படும்.
4. பாதுகாப்பற்ற பிளாஷ் ட்ரைவ்: டேட்டாவினை எடுத்துச் செல்ல, பிளாஷ் ட்ரைவ்கள் மிகவும் வசதியானவை தான். ஆனால் இதில் உள்ள டேட்டாவினை, மற்றவர் அறியாதபடி என்கிரிப்ட் செய்து நாம் வைப்பதில்லை. இதனால், அது தொலைந்திடும் பட்சத்தில், நம் தனிப்பட்ட தகவல்கள் மற்றவருக்குக் கிடைத்திடும் சூழ்நிலைகள் உருவாகிவிடும். இதில் டேட்டாவினை எளிதாக என்கிரிப்ட் செய்திட, இணையத்தில் கிடைக்கும் ட்ரூகிரிப்ட்(TrueCrypt) போன்ற புரோகிராம்களைப் பதிந்து இயக்குவது நல்லது.
5.கண்ணை மூடிக் கொண்டு நெக்ஸ்ட் அழுத்துவது: திடீரென நம் டெஸ்க்டாப்பில் ஏதேதோ படங்களுடன் ஐகான்கள் தோன்றி நம்மை ஆச்சரியப்படுத்தும். நாம் பயன்படுத்தும் வெப் பிரவுசரிலும் இதே போல் சில தோற்றமளிக்கும். இவை தோன்றுவதற்கு நாம் தான் காரணம் என்று உங்களுக்குத் தெரியுமா? சாப்ட்வேர் அப்ளிகேஷன் ஒன்றை இன்ஸ்டால் செய்திடுகையில், என்ன ஏது எனப் படிக்காமலேயே, அடுத்தடுத்து நெக்ஸ்ட் பட்டனை அழுத்துகிறோம்.
இதன் மூலம் அந்த புரோகிராம்களைத் தயாரித்த நிறுவனங்களின் சோதனை டூல்கள், புரோகிராம்களை நம் கம்ப்யூட்டரில் நிறுவ நாம் சம்மதம் அளிக்கிறோம். மேலும் நமக்குத் தேவைப்படாத சில இயக்கத்திற்கும் இசைகிறோம். இது போல நாம் நம்மை அறியாமல் அளிக்கும் சலுகைகள், நம் கம்ப்யூட்டரில் மால்வேர் புரோகிராம்களை நிறுவி, நம்மை சிக்க வைக்கின்றன. எனவே, ஒரு புரோகிராமினை இன்ஸ்டலேஷன் செய்கையில், இணையப் பக்கம் வழியாக ஒன்றை டவுண்லோட் செய்கையில், நம்மிடம் எதற்கு இசைவு கேட்கப்படுகிறது என்று சரியாகப் படித்துப் பார்த்து இயங்க வேண்டும்.
6. ஒரே ஒரு பேக் அப் அபாயம்: பலர் தங்கள் பைல்களுக்குப் பேக் அப் எடுப்பதே இல்லை. இது மிகப் பெரிய தவறு. சிலர் ஒரே ஒரு பேக் அப் பைலுடன் நிறுத்தி விடுகின்றனர். இதுவும் தவறுதான். எக்ஸ்டர்னல் ஹார்ட் ட்ரைவ் ஒன்றைப் பயன்படுத்தி, முழுமையான பேக் அப் காப்பி ஒன்றை உருவாக்குவதும், அதற்கான சாப்ட்வேர் ஒன்றை இயக்கி, குறிப்பிட்ட கால கட்டத்தில் பேக் அப் காப்பி அமைப்பதுவும் மட்டுமே சரியான வழியாகும்.
Friday, January 6, 2012
Rs.5000 worthable CCTV CAMERA Software is FREE
ரூபாய் 5000 மதிப்புள்ள உளவு பார்க்க உதவும் மென்பொருள் இலவசமாக(MAX KEYLOGGER)
நாம் வீட்டில் பயன்படுத்தும் கணினியில் நாம் இல்லாத சமயங்களில் என்ன செய்கின்றார்கள் என கண்டுபிடிக்கவும் , அலுவலகத்தில் பணியாளர்கள் வேலை நேரத்தில் என்ன செய்கின்றார்கள் என கண்காணிக்கவும் , குழந்தைகள் இணையத்தில் எந்த எந்த தளங்களை பார்க்கின்றனர் , facebook, orkut, என சமுகதலங்களில் என்ன மெசேஜ் அனுப்புகின்றனர் என்றும் கண்காணிக்க இது உதவும் .
இந்த மென்பொருளின் உண்மையான விலை $50 முதல் $100 வரை இருக்கிறது. நமது வாசகர்களுக்காக இதை இலவசமாக வழங்குகின்றேன்.
1 . முதலில் max keylogger இதை click செய்து downloadசெய்துகொள்ளவும்.
2. அதை Double click செய்து install செய்யவும்.
3. வரும் விண்டோவில் “i accept the agreement “ option select செய்யவும்
4. save செய்ய வேண்டிய இடத்தை தெரிவு செய்யவும்
5. install button அய் தெரிவு செய்யவும்
6. Finish button அய் தெரிவு செய்யவும்.
7. வரும் விண்டோவில் உங்கள் விருப்பமான password தரவும்.
8. ctrl + shift + alt + z இது short cut key.
9. மீண்டும் ctrl + shift + alt + z அமுக்கி password விண்டோவ்வை வரவையுங்கள். அதில் உங்கள் கடவுச்சொல்லை கொடுத்த பின் கிழே உள்ள விண்டோ வரும் .
10. அதில் register என்ற பட்டனை click செய்யவும்.
Serial Number என்ற இடத்தில் :
5B4F77ACCD016128F6D77F3485649DA1
copy & paste செய்யவும் .
12. அல்லது KEYGEN இந்த LINK செய்து DOWNLOADசெய்துகொள்ளவும்.
13. வரும் விண்டோவில் LOG என்ற OPTION தெரிவு செய்து CLIPBOARD என்ற OPTION இல் உங்கள் கணினியில் என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ளுங்கள் .
Sunday, January 1, 2012
2011 bye 2012 welcom
அன்பு - இது பதிவுலகில் 2012 ல் மேலும் தழைக்க வேண்டுகிறேன்...
நட்பு - நமது கருத்துக்கள் எதிரெதிர் திசையில் இருந்தாலும் நட்புகள் உடையாமல் இருப்பது நலம்...அதிலும் தனி மனித தாக்குதல் மனங்களை உடைக்கும் ஜாக்கிரதை...!
படைப்புகள் - மிகச்சிறந்த படைப்பாளிகள் பலர் வெளிச்சத்துக்கு வராமல் இன்னும் ஒரு வட்டத்தில் தங்களை வைத்து இருக்கிறார்கள்...அவர்கள் வெளியில் வர வாழ்த்துக்கள்...!
மனம் - பல நேரங்களில் பல கருத்துக்கள் எனக்கு தவறாக தெரிந்தாலும் அதை வெளிக்காட்டாமல் அமைதியாக போகும் மனம் வேண்டுகிறேன்...!
சுதந்திரம் - என் மனைவி எனக்கு கொடுத்த சுதந்திரத்தை என்றும் பாதிக்காமல் நடந்து கொள்ளும் மன உறுதியை நான் தொடர விரும்புகிறேன்!
சத்தியம் - தேவையில்லாத சத்தியங்களை அலைஸ் வாக்குறுதிகளை யாருக்கும் நான் கொடுத்ததில்லை...அதே போல தொடர வேண்டுகிறேன்...!
தண்ணீர் தண்ணீர் - விட்டது விட்டதாக இருக்கும் நேரத்தில் அதை தொடராமல் இருக்க நண்பர்களின் பேராதரவை வேண்டுகிறேன் (ஹிஹி!)
கொள்கைகள்: இவை வெறும் கானல் நீராக போகாமல் துணிந்து முடிக்க முயற்சிக்கிறேன்...!
உறவுகள்: எந்த வித சோக கீதங்களோ அல்லது புகழுரைகளோ என்னை தாக்காத வண்ணம் என் வழியில் நான்...!
உதவிகள்: நான் புரிந்து வரும் விஷயங்கள் வெளி பார்வைக்கு தெரியாமல் அந்த மக்களுக்கு நல்லது செய்வதாக தொடர வேண்டுகிறேன்..!
வெற்று புகழ்: நாலு பேருக்கு தெரிய வேண்டும் என்பதற்காக அற்பத்தனமாக எல்லோரிடம் ஜல்லி அடிப்பதை தவிர்க்க விரும்புகிறேன்..!
கடமைகள்: சொந்த கடமைகளை நிறைவேற்றுவதில் சரியான குடும்பஸ்தனாகவும்(!) அதே நேரத்தில் குடிமகனாக என் கடமையை சரியாக செய்து வருவதில் மனது சாந்தி பெறுகிறது..தொடர வேண்டுகிறேன்!
சமுதாயம்: என்னை தாக்கும் கண்ணாடி சில்!...
எதிரிகள்: என்னை வளர்க்கும் நல்லவர்கள்...!
நண்பர்கள்: என்னை பொறுமையானவனாக்க(!) துடிப்பவர்கள்..
நட்பு - நமது கருத்துக்கள் எதிரெதிர் திசையில் இருந்தாலும் நட்புகள் உடையாமல் இருப்பது நலம்...அதிலும் தனி மனித தாக்குதல் மனங்களை உடைக்கும் ஜாக்கிரதை...!
படைப்புகள் - மிகச்சிறந்த படைப்பாளிகள் பலர் வெளிச்சத்துக்கு வராமல் இன்னும் ஒரு வட்டத்தில் தங்களை வைத்து இருக்கிறார்கள்...அவர்கள் வெளியில் வர வாழ்த்துக்கள்...!
மனம் - பல நேரங்களில் பல கருத்துக்கள் எனக்கு தவறாக தெரிந்தாலும் அதை வெளிக்காட்டாமல் அமைதியாக போகும் மனம் வேண்டுகிறேன்...!
சுதந்திரம் - என் மனைவி எனக்கு கொடுத்த சுதந்திரத்தை என்றும் பாதிக்காமல் நடந்து கொள்ளும் மன உறுதியை நான் தொடர விரும்புகிறேன்!
சத்தியம் - தேவையில்லாத சத்தியங்களை அலைஸ் வாக்குறுதிகளை யாருக்கும் நான் கொடுத்ததில்லை...அதே போல தொடர வேண்டுகிறேன்...!
தண்ணீர் தண்ணீர் - விட்டது விட்டதாக இருக்கும் நேரத்தில் அதை தொடராமல் இருக்க நண்பர்களின் பேராதரவை வேண்டுகிறேன் (ஹிஹி!)
கொள்கைகள்: இவை வெறும் கானல் நீராக போகாமல் துணிந்து முடிக்க முயற்சிக்கிறேன்...!
உறவுகள்: எந்த வித சோக கீதங்களோ அல்லது புகழுரைகளோ என்னை தாக்காத வண்ணம் என் வழியில் நான்...!
உதவிகள்: நான் புரிந்து வரும் விஷயங்கள் வெளி பார்வைக்கு தெரியாமல் அந்த மக்களுக்கு நல்லது செய்வதாக தொடர வேண்டுகிறேன்..!
வெற்று புகழ்: நாலு பேருக்கு தெரிய வேண்டும் என்பதற்காக அற்பத்தனமாக எல்லோரிடம் ஜல்லி அடிப்பதை தவிர்க்க விரும்புகிறேன்..!
கடமைகள்: சொந்த கடமைகளை நிறைவேற்றுவதில் சரியான குடும்பஸ்தனாகவும்(!) அதே நேரத்தில் குடிமகனாக என் கடமையை சரியாக செய்து வருவதில் மனது சாந்தி பெறுகிறது..தொடர வேண்டுகிறேன்!
சமுதாயம்: என்னை தாக்கும் கண்ணாடி சில்!...
எதிரிகள்: என்னை வளர்க்கும் நல்லவர்கள்...!
நண்பர்கள்: என்னை பொறுமையானவனாக்க(!) துடிப்பவர்கள்..
Subscribe to:
Posts (Atom)






