V

SSLC MARK 2012- CHENNAI GRAPHIX

mba.basheer

Welcome to my website. join with us

quick search

Saturday, August 24, 2013

கம்ப்யூட்டரில் தோன்றும் சிறிய சிக்கல்களும் அதற்கான தீர்வுகளும்!

கம்ப்யூட்டரில் தோன்றும் சிறிய சிக்கல்களும் அதற்கான தீர்வுகளும்!


நம் கம்ப்யூட்டரில் தோன்றும் சிறிய சிக்கல்களை சரிசெய்வதற்கு இஞ்சினியர்தான் வரவேண்டும் என்ற அவசியம் இல்லை. பைசா செலவில்லாமல், என்ன சிக்கல் ன்பதை நீங்களே கண்டுபிடித்துவிடலாம். கம்ப்யூட்டரில் அடிக்கடி தோன்றும் சிக்கல்களுக்கான அறிகுறிகளும், அவற்றுக்கான காரணங்களும்…

திரையில் எதுவும் தெரியவில்லை:
ஹார்டு டிஸ்க் தவறாக இணைக்கப்பட்டுள்ளது. அதை சரியாக பொருத்த வேண்டும்.

முக்கியமான பவர் விளக்கு எரியவில்லை:
1. முக்கியமாக பவர்கார்டை சரிபார்க்கவேண்டும்.
2. எஸ்.எம்.பி.எஸ்., சோதிக்கவும்.
3. மதர்போர்டு இணைப்பை சரிபார்க்கவும்.

திரையில் படங்கள் அலை அலையாய் நடனமாடுதல்:
1.டிஸ்பிளே கார்டு இணைப்பை சரிபார்க்கவும்.
2.வைரஸ் புகுந்துள்ளதா என பார்க்கவும்.
3.வீடியோ மெமரி கூட இந்த சிக்கலுக்கு காரணமாக இருக்கலாம்.

திரை அதிருதல்:
மின்சார எர்த் கசிவு காரணமாக இருக்கலாம். காந்தப் பொருள் அருகில் இருப்பதால் ஏற்பட்டிருக்கலாம். (நீங்கள் கம்ப்யூட்டருக்கு அருகில் வைத்திருக்கும் ஸ்பீக்கர் பாக்ஸ் இதற்க்கு காரணமாக இருக்கலாம்).

செயல்படும்போது ஹார்டு டிஸ்க் சத்தமிடுதல்:
1.முறையற்ற பவர் சப்ளை.
2.கேபிள்கள் மற்றும் பிளக்குகள் சரியாக செருகப்பட்டுள்தா என்பதை பார்க்கவும்.
3.ஹார்டு டிஸ்க்கிற்கு Y கனெக்டர்களை பயன்படுத்த வேண்டாம்.
மானிட்டர் விளக்கு மினுமினுத்தல்:
மானிட்டர் கேபிள், டேட்டா கேபிள்கள், ராம், டிஸ்பிளே கார்டு, மற்றும் சி.பி.யூ இணைப்புகள் சரியில்லை என்றால் இது தோன்றும். அனைத்தும் சரியாக இருக்கிறதா என்பதை சோதிக்கவும்.

மூன்று தொடர்ச்சியான பீப் ஒலிகள்:
ராம் இணைப்பில் சிக்கல் உள்ளது. சி.பி.யூ திறந்து ராம்(RAM) சரியாக பொருத்தப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும். 

மூன்று தொடர்ச்சியான பீப் ஒலிகள் (1 ஒலி நீளமாக, மற்ற இரண்டும் சிறியதாக):
உங்கள் டிஸ்பிளே கார்டு இணைப்பில் சிக்கல் உள்ளது. முதலில் அதை கவனிக்கவும்.

மூன்று நீளமான பீப் ஒலிகள்:
பயாஸ் அல்லது ராம்-இல் சிக்கல் உள்ளது.

நிற்காமல் தொடர்ச்சியாக பீப் ஒலிகள்:
விசைப் பலகை (கீ போர்டு) சிக்கல். சில நேரம் விசைப்பலகையில் உள்ள முக்கியமான கீ-கள் தொடர்ந்து அழுத்தப்பட்டிருக்கும். இதனால் இந்த சிக்கல் ஏற்படும்.

பிளாப்பி டிரைவுக்கான இடத்தில் உள்ள விளக்கு தொடந்து மினுக்குதல்:
டேட்டா கேபிள் (முறுக்கிய கேபிள்) சரியாக பொருத்தப்படவில்லை.

இனி நீங்களும் தலைவர்தான்!!!!

இனி நீங்களும் தலைவர்தான்!!!!








              காந்தி, நேரு போன்ற தேசத் தலைவர்கள், பிரபலங்கள் போன்றவர்களது படங்களைத்தானே அஞ்சல்தலையில் பார்த்திருப்பீர்கள். இனி நீங்கள், உங்கள் முகத்தையும் பார்க்கலாம். அதிகம் செலவாகாது. வெறும் முந்நூறு ரூபாய்தான்!


                   இங்கே உள்ள உள்ளூர் அரசியல் தலைவர்கள் சிலருக்கு பிரான்ஸ் அஞ்சல் தலை வெளியிட்டு கவுரவித்தது என்றெல்லாம் வரும் செய்திகளின் பின்னணி ரகசியம் இதுதான்.


                     ஆனால், நம் நாட்டில் இதுவரை ஒருவருக்கு அஞ்சல் தலை வெளியிடுவது என்பது குறித்து, அரசுதான் முடிவெடுக்க முடியும். ஆனால், இரண்டு ஆண்டுகளுக்கு முன், சாதாரண மக்களின் முகங்களும் அஞ்சல்தலையில் வெளியிடப்படும் திட்டம் ஒன்றினை இந்தியத் தபால்துறை, தில்லியில் தொடக்கி வைத்தது.

              இத்திட்டத்துக்கு, ‘எனது அஞ்சல்தலை’ என்று பெயரும் சூட்டப் பட்டது. பிரமாதமான வரவேற்பு. தொடர்ச்சியாக உ.பி., மும்பை மாதிரி வடஇந்தியாவில் விரிவுபடுத்தப்பட்டு ஆயிரக்கணக்கானோர் அஞ்சல்தலையில் இடம்பெற்று விட்டார்கள். இதோ இப்போது அஞ்சல்தலையில் தமிழ் முகங்களும் சிரிக்க, நம் ஊருக்கும் வந்துவிட்டது ‘எனது அஞ்சல்தலை’ திட்டம்.

                உயிருடன் இருக்கும் யாரும் இந்தத் திட்டத்துக்காக விண்ணப்பிக்கலாம். ரூ.300/- கட்டணம் செலுத்தினால், 12 அஞ்சல்தலைகள் வழங்கப்படும்.

           இந்த அஞ்சல் தலைகளை நீங்கள் உங்கள் நண்பர்களுக்கோ, உறவினர்களுக்கோ அனுப்பும் கடிதங்களில் ஒட்டி, அவர்களை  அசத்தலாம்.

           விண்ணப்பிப்பவர்கள், அரசு அங்கீகாரம் பெற்ற புகைப்படம் இடம்பெற்றிருக்கும் ஏதேனும் ஓர் அடையாள அட்டையின் நகலை (டிரைவிங் லைசென்ஸ், ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, பான் கார்டு போன்றவை) சமர்ப்பிக்க வேண்டும்.

            தற்போது தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி மற்றும் புதுச்சேரி ஆகிய நகரங்களில் இருக்கும் சிறப்பு அஞ்சல்தலை சேகரிப்பு மையங்களில் மட்டுமே, ‘எனது அஞ்சல் தலை’ திட்டத்துக்கு விண்ணப்பிக்கும் வசதி இருக்கிறது.

            சென்னையில் விண்ணப்பிப்பவர்களுக்கு ஒருவாரத்திலும், மற்ற மையங்களில் விண்ணப்பிப்பவர்களுக்கு இரண்டு வாரங்களிலும் அஞ்சல்தலைகள் அனுப்பி வைக்கப்பட்டு விடும்.

              பொதுமக்களின் வரவேற்பைப் பொருத்து, விரைவில் இத்திட்டம் மேலும் விரிவுபடுத்தப்படும்" என்று போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் ஸ்ரீமெர்வின் அலெக்ஸாண்டர் உறுதியினை அளித்திருக்கிறார்.
 
            மறைந்த நமது தாத்தா, பாட்டிகளின் முகத்தை அஞ்சல் தலையில் இடம் பெறச் செய்யவைக்க இத்திட்டத்தில் இப்போதைக்கு இடமில்லை.

          ஆனால், உயிரோடிருக்கும் நம் அம்மா, அப்பா ஆகியோர் (அடையாள அட்டை இருப்பின்) விண்ணப்பிக்கலாம்.

044-28543199 என்கிற தொலைபேசி எண்ணில் பேசினால், 
    ‘எனதுஅஞ்சல் தலை’ திட்டம் குறித்த சந்தேகங்களுக்கும் இந்தியத் தபால்துறை விளக்கமளிக்கிறது.

USEFUL WEBSITE ADDRESS

1. ஆன்லைன் -ல் புகைப்படங்களை அழகாக வெட்டித்தரும் பயனுள்ள தளம்.

http://www.cutmypic.com/

2. வீடியோ விளக்கத்தோடு அசத்தும் இணைய அகராதி.

http://www.wordia.com/

3. தமிழில் கணினி செய்திகள்

http://tamilcomputertips.blogspot.com/

4. உங்கள் போடோவை ஓவியமாக மாற்ற ஒரு இலவச மென்பொருள்

http://www.fotosketcher.com/PortableFotoSketcher.exe

5. அனைத்து அரிய வீடியோக்களையும் கொடுக்கும் பயனுள்ள தளம்.

 http://yttm.tv/

6. ஆங்கிலம் கற்க கைகொடுக்கும் தளம்.

http://classbites.com/ 

7. தேடல் முடிவுகளை வகை வாரியாக பிரித்து கொடுக்கும் மிகவும் பயனுள்ள தளம்.

http://www.helioid.com

8. தொலைக்காட்சியில் இருந்து வீடியோ பயனுள்ள தளம்.

 http://www.8on.tv

9. குழந்தைகள் விரும்பும் கார்டூன் முதல் அத்தனை டி.வி நிகழ்சிகளும் ஒரே இடத்தில் பார்க்க

http://video.kidzui.com

10. வீடியோ எடிட்டிங் செய்ய உதவும் இலவச மென்பொருள்.

http://www.lightworksbeta.com

11. பிறந்தநாள் வாழ்த்து செய்திகளை கொடுக்கும்  பிரத்யேகமான தளம்.

http://www.freebirthdaymessages.com

12. வலைப்பூவுக்கு அழகான பேக்ரவுண்ட் வடிவமைக்க.

http://bgmaker.ventdaval.com

13. வீடியோ மெயில்ஆன்லைன் மூலம் இலவசமாக அனுப்ப.

http://mailvu.com

பென்டிரைவ் வேகமாகச் செயல்பட என்ன செய்ய வேண்டும்?

பென்டிரைவ் வேகமாகச் செயல்பட என்ன செய்ய வேண்டும்?







          பென்டிரைவ் என்பது கணனி பயன்படுத்துவோர் மட்டுமல்லாமல், கிட்டத்தட்ட அனைவருமே பயன்படுத்தும் ஒரு Removable Device ஆகும்.


        இத்தகைய பென்டிரைவ்கள் (pendrives) நாம் கணினியில் பயன்படுத்தும்போது சில வேளைகளில் நம்முடைய பொறுமையைச் சோதிக்கும் அளவுக்கு மிகவும் மெதுவாக இயங்கும். அதிலுள்ள தரவுகளை பரிமாற்றம் செய்யும்போது நீண்ட நேரம் எடுத்துக்கொள்ளும். 
இத்தகைய சூழ்நிலையைத் தவிர்ப்பது எப்படி


        உங்களுடைய பென்டிரைவ் வேகமாகச் செயல்பட என்ன செய்ய வேண்டும் என்று பார்ப்போம்.


      1.  உங்கள் கணினியில் பென்டிரைவை இணையுங்கள். (win+E) கொடுத்து (அ) MY COMPUTER செல்லவும்.


      2. அங்கு பென்டிரைவிற்கான டிரைவை வலது கிளிக் செய்து Properties என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.


      3. தொடர்ந்து திறக்கும் விண்டோவில் HARDWARE என்னும் டேபை கிளிக் செய்யவும். பிறகு Name (eg. SanDisk Curzer Blade USB Device) என்னும் தலைப்பின் கீழுள்ள உங்கள் பென்டிரைவைத் தேரந்தெடுக்கவும்.


      4. பிறகு கீழிருக்கும் Properties என்பதை கிளிக் செய்து Ok கொடுக்கவும்.


      5. அடுத்து தோன்றும் விண்டோவில் change settings என்பதை கிளிக் செய்யவும்.


     6. அதற்கு அடுத்துத் தோன்றும் பெட்டியில் Policies எனும் டேபிள் கிளிக் செய்து அதன் கீழிருக்கும் Better Performance என்பதைத் தேர்ந்தெடுத்து OK கொடுக்கவும்.


      இப்போது உங்கள் பென்டிரைவ் முன்பைக் காட்டிலும் வேகமாக இயங்கும். இதை நீங்கள் கண்கூடாக காண்பீர்கள். இந்த அனுபவம் எப்படி இருக்கிறது என்பதை கருத்துரையில் சொல்லுங்கள். 


      மறக்காமல் ஒவ்வொரு முறையும் பென்டிரைவை கணினியிலிருந்து நீக்கும்போது Safely remove hardware என்பதைக் கிளிக்செய்து பின்பு உங்கள் பென் டிரைவை கணினியிலிருந்து நீக்கவும்

 

       இதை ஒரு தொடர் பழக்கமாக மாற்றிக்கொள்ளுங்கள். இதனால் உங்கள் பென்டிரைவ் சேதமடையாமல் நீண்ட காலம் உழைக்கும்...!

ஸ்கைப்பின் மிகப்பெரும் அபாயங்கள்

ஸ்கைப்பின் மிகப்பெரும் அபாயங்கள்







                       வெளிநாட்டில் இருக்கும் ஒருவருடன் நாம் எளிதில் பேச இன்று பலரும் பயன்படுத்துவது ஸ்கைப் நெட்வோர்க்கை தான். 
                      இதில் இருக்கும் ஆபத்துகள் உண்மையில் பலருக்கு தெரிவதில்லை ஸ்கைப்பில் நீங்கள் உரையாடுவது பதிவு செய்யபடுகின்றது அது தெரியுமா உங்களுக்கு. 
                      மேலும் ஸ்கைப்பில் இருக்கும் வைரஸ் தான் இணையத்திலேயே மிக கொடுமையான வைரஸ். 
                         இந்தியாவில் ஸ்கைப் பயன்படுத்துவோர் பெற்று வரும், கெடுதல் விளைவிக்கும் ஸ்பாம் மெயில் குறித்து எச்சரிக்கை கொடுத்து வந்தது. தற்போது இந்த ஸ்பாம் வேகமாகப் பரவி வருவதாக அறிவித்துள்ளது. 
                           இந்த வைரஸ் உங்கள் கணிப்பொறியை என்னென்ன செய்யும் என்பதை கீழே பாருங்கள் சற்று அதிர்ந்தே போய்விடுவீர்கள்....








ஸ்கைப்பின் அபாயங்கள் 
              இந்தியாவில் மட்டுமே இது வேகமாக இயங்கி வருகிறது. ஸ்கைப் பயன்படுத்துவோரின் காண்டாக்ட் முகவரி எளிதாக அவர்களைச் சென்றடையும். 


           
               இதில் ஏதேனும் ஒரு லிங்க் தரப்பட்டிருக்கும். இதில் கிளிக் செய்தால், கெடுதல் விளைவிக்கும் வைரஸ் புரோகிராம், கம்ப்யூட்டரில் வந்து விடும்

             
                  பின்னர் இந்த புரோகிராம், கம்ப்யூட்டரில் தரப்படும் பெர்சனல் தகவல்களை, இணையம் மற்றும் வங்கி அக்கவுண்ட்களுக்கான யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்ட்களை, தொலைவில் உள்ள இன்னொரு சர்வருக்கு அனுப்பிக்கொண்டே இருக்கிறது

            
                  அதனை இயக்குபவர், அங்கிருந்தே, உங்கள் கம்ப்யூட்டரைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் வகையில் இந்த வைரஸ் புரோகிராம் செயல்படும்
                  

                  இதனைத் தவிர்க்க, ஸ்கைப் காண்டாக்ட் முகவரியில் உள்ள நண்பர்கள் மற்றும் உறவினர்களிடமிருந்து வரும் இன்ஸ்டண்ட் மெசேஜில் உள்ள லிங்க்கில் கிளிக் செய்திடக் கூடாது

                     

Thursday, August 15, 2013

CHENNAI GRAPHIX: அட்டகாசமான 3D ஓவியங்கள்

CHENNAI GRAPHIX: அட்டகாசமான 3D ஓவியங்கள்: Alessandro Dididi எனும் வரைந்த 3 D ஓவியங்கள் தான் இந்த  புகைப்படங்கள் வரிசையாக உங்கள் பார்வைக்கு.  இத்தாலி நாட்டினைச் சேர்ந்த...

Sunday, August 11, 2013

அட்டகாசமான 3D ஓவியங்கள்

Alessandro Dididi எனும் வரைந்த 3D ஓவியங்கள் தான் இந்த  புகைப்படங்கள் வரிசையாக உங்கள் பார்வைக்கு. 

இத்தாலி நாட்டினைச் சேர்ந்த 42 வயதான இந்த ஓவியர் வரைந்த ஓவியங்கள் சில கோணங்களில் பார்க்கும்போது பேப்பரை விட்டு நம்மிடம் வந்து விடுவது போல இருக்கும் என அவரே சொல்கிறார்.


அவரது ஓவியங்களைக் காண்போமே..... 


























என்ன நண்பர்களே ஓவியங்களை ரசித்தீர்களா?   (courtesy:venkat)

Friday, August 9, 2013

ALLAH VIN NALARUL THANGAL YAAVAR MEETHUM NILAVATTUMAAGA

EEGAI THIRUNAAL NALVALTHUKKAL ( EID MUBARAK)

YAA ALLAH ... NONBU KAALANGALIL NAAN MEYRKONDA IRAIACHAM VARUM KAALANGALIL NIRANTHARAMAAGA ENNUL IRUKKA NALARUL  PURIVAAYAAGA. (AAMIN)

Monday, August 5, 2013

கம்ப்யூட்டருக்கான கட்டாயப் பணிகள்


கம்ப்யூட்டருக்கான கட்டாயப் பணிகள்

கம்ப்யூட்டர்கள் இன்றைய கால கட்டத்தில் நம் உடனுறை நண்பனாக மாறிவிட்டது. மனைவி, குழந்தைகளைக் கூட கை பிடித்து அழைத்து வராத பலர், இதனை பையில் போட்டு முதுகில் பத்திரமாகத் தூக்கிக் கொண்டு செல்வது நாம் அன்றாடம் பார்க்கும் காட்சி. 

இருந்தும், நாம் அந்த கம்ப்யூட்டரின் முழுத் திறனையும் பயன்படுத்தும் வகையில், அதனை வைத்திருக்கிறோமா? பராமரிக்கிறோமா? அதில் மேற்கொள்ள வேண்டிய சில முக்கிய வேலைகளை அவ்வப்போது செயல்படுத்தி வருகிறோமா? என்றால், நிச்சயமாய் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். 

அப்படி, நாம் கட்டாயமாக மேற்கொள்ள வேண்டிய, ஆனால் பெரும்பாலானவர்கள் மேற்கொள்ளாத சில வேலைகளை இங்கு காணலாம்.



1. கம்ப்யூட்டர், கீபோர்ட், மானிட்டர் திரை: 
உங்கள் கம்ப்யூட்டரை நீங்கள் சுத்தமாக வைத்திருக்கிறீர்களா? கம்ப்யூட்டரைச் சுற்றிப் பரவும் தூசியும் அழுக்கும், கம்ப்யூட்டர் சிபியுவில் புகுந்து, உள்ளே வெப்பத்தினைத் தணிக்க இயங்கும் மின் விசிறிகளின் செயல்திறனைக் குறைக்கும். 
இதனால், கம்ப்யூட்டரின் செயல் திறனும் குறையும். சுத்தப்படுத்துவதற்கான பொருட்களைத் தயார் செய்து வைத்துக் கொண்டு, கம்ப்யூட்டரை ஷட் டவுண் செய்து, மின் இணைப்பிலிருந்து நீக்கி, ஸ்குரூக்களை நிதானமாகக் கழற்றி, உள்ளே சேர்ந்திருக்கும் தூசியையும், அழுக்கையும் அகற்றவும். 
உள்ளே மின்விசிறியிலும், வெளியே வெப்பம் வெளியேறும் துவாரங்களிலும் நிச்சயம் அதிகமாகத் தூசு தென்படும். இவற்றை நீக்கிச் சுத்தப்படுத்த வேண்டும். குறைந்த அளவில் வேகமாக காற்று அடிக்கும் கருவியைப் பயன்படுத்தி, சிபியு மின்விசிறி, மதர்போர்ட் மற்றும் கிராபிக்ஸ் போர்ட் ஆகியவற்றில் படிந்துள்ள தூசியை நீக்கவேண்டும். வேறு இடங்களில் படிந்துள்ள தூசியையும் நீக்கவும். 
அடுத்ததாக கீ போர்ட். இதனைக் கழட்டி, தலைகீழாகக் கவிழ்த்து, சிறியதாகத் தட்டினால், நம்மை அறியாமல் கீகளுக்கிடையே உள்ள இடைவெளியில் சென்ற சிறிய தூசுகள் எல்லாம் வெளியேறும்.இங்கும் காற்றடிக்கும் சிறிய கருவியின் மூலம் தூசியை வெளியேற்றவும். சிறிய பேப்பர் டவலில் தண்ணீர் அல்லது பெட்ரோல் நனைத்து, கீகளின் மேலாகவும், 
பக்கவாட்டிலும் சுத்தம் செய்திடவும். குறிப்பாக நம் விரல்கள் கீகளின் எந்த இடத்தில் தொடுகிறதோ, அந்த இடங்களில் அழுக்கு சேர்ந்திருக்கும். இதனைக் கட்டாயம் நீக்க வேண்டும். 
இதே போல மவுஸ் சாதனத்தையும் சுத்தப்படுத்தவும். இறுதியாகக் கவனிக்க வேண்டியது மானிட்டர். மைக்ரோ பைபர் துணி கொண்டு இதனைச் சுத்தம் செய்திடலாம். இதனை நீர் அல்லது வினீகரில் நனைத்து, திரையையும் சுற்றி உள்ள பகுதியையும் சுத்தம் செய்திட வேண்டும்.




2. டேட்டா பேக் அப்: 

இந்தக் கட்டுரையில் தரப்பட்டிருக்கும் டிப்ஸ்கள், அவற்றின் முக்கியத்துவத்தின் அடிப்படையில் வரிசையில் இல்லை. இருந்தால், இந்த டிப்ஸ்தான் முதலில் இருக்க வேண்டும். உங்கள் கம்ப்யூட்டர் ஆண்டாண்டு காலம் இயங்கிக் கொண்டே இருக்காது. 

ஒரு நாளில், முடங்கிப் போய் தன் இயக்கத்தை நிறுத்திவிடும். உள்ளே நாம் சேர்த்து வைத்த முக்கிய பைல்களை நம் பயன்பாட்டிற்கு எடுக்க இயலாமல் போய்விடும். வெள்ளம், தீ, பூகம்பம், திருட்டு மற்றும் பிற விபத்துக்கள் எதிர்பாராமல் நடப்பது போல, உங்கள் கம்ப்யூட்டரின் ஹார்ட் டிஸ்க்கும் சுழலாமல் நின்று விடும்.

என்ன செய்தாலும், அதில் உள்ள பைல்கள் கிடைக்காத நிலை ஏற்படும். எனவே, நம் உழைப்பின் கனிகளான அந்த பைல்கள் உங்களுக்கு வேண்டும் எனில், அவற்றை உருவாக்கிய வுடனேயே, அதற்கு பேக் அப் எடுக்க வேண்டும். 

இதற்கு பேக் அப் சாப்ட்வேர் பயன்படுத்தலாம். அல்லது, நாமே விழிப்புடன் இருந்து, ஒன்றுக்கு இரண்டாக நல்ல பிளாஷ் ட்ரைவ் அல்லது எடுத்துச் செல்லக் கூடிய ஹார்ட் ட்ரைவ்களில் நம் டேட்டா பைல்களை பேக் அப் எடுக்க வேண்டும். 




3. மால்வேர் பாதுகாப்பு: 

நான் அனைத்து பாதுகாப்பு வழிகளையும் கையாள்கிறேன். சந்தேகத்திற்கிடமான இமெயில்களைத் திறப்பதில்லை; தேவையற்ற தளங்களைப் பார்ப்பதில்லை; எனக்கு இதுவரை மால்வேர் புரோகிராம்களே வந்ததில்லை என்று நீங்கள் உறுதியாக இருந்தாலும், உங்கள் கம்ப்யூட்டர் இந்த வகையில் அடிபடும் வாய்ப்புகள் அதிகம். 

நீங்கள் என்னதான் கவனமாக இருந்தாலும், ஏதேனும் ஒரு சிறிய செயல்பாடு, உங்கள் கம்ப்யூட்டருக்கு வைரஸைக் கொண்டுவரலாம். எனவே, ஆண்ட்டி வைரஸ், ஆண்ட்டி மால்வேர் புரோகிராம்களை இன்ஸ்டால் செய்து கட்டாயம் பயன்படுத்த வேண்டும். 

இதற்கென இலவச புரோகிராம்கள் மட்டுமின்றி, கட்டணம் செலுத்திப் பெறும் புரோகிராம்களும் கிடைக்கின்றன. இவற்றில் எதனைத் தேர்ந்தெடுத்து தொடர்ந்து இயக்கி வந்தாலும், அவற்றை அவ்வப்போது இணைய இணைப்பு கொடுத்து அப்டேட் செய்திட வேண்டும். இல்லையேல் பயன் இருக்காது.




4. சாப்ட்வேர் அப்டேட்: 

சாப்ட்வேர் என்பது சாக்லேட் பால் மாதிரி. முதலில் அதனை மிக மிக விரும்புவீர்கள். அடிக்கடி பயன்படுத்துவீர்கள். நாள் ஆக ஆக, அதன் தன்மை மாறும். நம்பகத்தன்மை குறையும். பாதுகாப்பு கிடைக்காது. 

எனவே எந்த ஒரு பயன்பாட்டு சாப்ட்வேர் புரோகிராமினையும், அப்டேட் செய்திட வேண்டும். நீங்கள் என்ன செய்திட வேண்டும் என அந்த சாப்ட்வேர் தொகுப்பினை உருவாக்கி, அப்டேட் தரும் நிறுவனம் கற்றுக் கொடுக்கும். எனக்குப் பழையதே போதும் என ஒருநாளும் இருக்க வேண்டாம்.

உங்கள் கலர் போட்டோவை பென்சில் வரைவாக மாற்ற எழிய மென்பொருள்