தித்திக்கும் தீபாவளி
குட்டீஸ்களை பொறுத்தவரையில் தீபாவளி என்றாலே பட்டாசுதான். கலர் கலர் மத்தாப்பு, புஸ்வானம், நட்சத்திரங்களின் அழகை மிஞ்சம் பேன்ஷி
ராக்கெட்டுகள், சரவெடி, காதை பஞ்சராக்கும் அணுகுண்டு உள்ளிட்ட வெடிகளை வெடிப்பதில்தான் அலாதி ஆனந்தம்.
தீபாவளியை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் அதே சமயத்தில் பாதுகாப்பாகவும் இருக்க
வேண்டுமென்றுதான் பெரும்பாலான டாக்டர்கள் அட்வைஸ் சொல்கிறார்கள்.
ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைகள் வெடி வெடிக்கும் போது கவனமாக பார்த்துக் கொள்வது அவசியம். வெடி வெடிக்கும் போது அருகில்
ஒரு பக்கெட்டில் தண்ணீரை வைத்துக் கொள்ளுங்கள்.
உடையில் தீ பட்டாலோ, தீக்காயம் பட்டாலோ உடனடியாக தண்ணீரை ஊற்றி அணைக்கலாம்.
மத்தாப்பு உள்ளிட்ட பட்டாசுகளை வெடித்த பின் அவற்றை தெருவில் வீசி எறியாமல்
தண்ணீரில் அணைத்தபிறகு குப்பை தொட்டியில் போடுங்கள்’ என்கின்றனர்
டாக்டர்கள்.
அதே சமயத்தில் அதிக ஒலியுடைய பட்டாசுகளை தவிர்ப்பது நல்லது. உச்ச நீதிமன்ற
உத்தரவுப்படி, அதிக ஒலியுடைய பட்டாசுகளை இரவு 10 வரை மட்டுமே வெடிக்க
வேண்டும்.
இரவு 10 மணிக்கு பிறகு அதிக ஒலி ஏற்படுத்தும் சரவெடி, அணுகுண்டு, லட்சுமி,
குருவி வெடி போன்ற பட்டாசுகளை வெடிப்பது சட்டப்படி தவறாகும்.
அந்த நேரத்தில் ராக்கெட், சங்குசக்கரம், புஸ்வானம், மத்தாப்பு போன்ற
பட்டாசுகளை வெடிக்கலாம்.இதை மீறினால் போலீசாரால் நடவடிக்கை எடுக்கப்படும்.
‘இரவு 10 மணிக்கு பிறகு அதிக ஒலி கொண்ட பட்டாசுகளை வெடிப்பவர்கள்
பிடிக்கப்பட்டு காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். அடுத்த
நாள் காலை வரை காவல் நிலையத்திலேயே இருக்க வேண்டும்.
அபராதமும் விதிக்கப்படும்.
இதுவே தண்டனை’ என்கின்றனர் போலீஸ் உயர் அதிகாரிகள். எனவே, இந்தாண்டு தீபாவளியை ஹேப்பியாகவும், பாதுகாக்கவும் கொண்டாடுங்கள்.
ஹேப்பி தீபாவளி!ஹேப்பி தீபாவளி!
 |
| (வீர சாகசம் வேணாம்) |
veera saagasam veyndaam...(nanbargaley)