V

SSLC MARK 2012- CHENNAI GRAPHIX

mba.basheer

Welcome to my website. join with us

quick search

Friday, June 13, 2014

இன்டர்வியூவில் கேட்கப்படும் பொதுவான கேள்விகள்

இன்டர்வியூவில் கேட்கப்படும் பொதுவான கேள்விகள்

வேலை நிமித்தமா ஏதாவது இ ன்டர்வியூவுக்குப் போகும்போது, வழக்கமா நம்மளோட  Resume  கொண்டு போவோம். அதை மட் டும் பார்த்துட்டு நமக்கு யாரும் வேலை தரப்போறது கிடையாது. அதையும் தாண்டி பல கேள்விக ள் நம்மகிட்ட கேட்பாங்க. அதுக் கு நாம எப்படி பதில் சொல்றோம் குறத பொறுத்து, நம்மளோட திறமை, மன உறுதினு பல விசய ங்கள தீர்மானிப் பாங்க. வழவழ “னு பதில் சொல்லாம, சுருக்கமாவும் தீர்க்கமாவும் நம்ம ளோட பதில் இருக்கணும்னு அவங்க எதிர் பார்ப்பாங்க.
அப்படி இன்டர்வியூ போகும்போது என்ன மாதிரியான கேள்வி கள் பொதுவா கேட்கப்படும்னு அலசலா ம் வாங்க..
1. உங்களைப் பற்றிய விபரம்கூறுங்கள்?
இந்தக் கேள்வி, உங்களைப் பற்றிய சுய விபரம் சம்பந்தப்பட்டதா இருக்கும். அதா வது உங்களோட பேரு, இடம், கல்வித் தகுதி, தொழில்நுட்பத் தகுதி பற்றி நீங்களே தொகுத்து சொல்லணு ம். (அதுக்காக உங்க வரலாறு முழுக்க சொல்லி போர் அடிச்சி டாதீங்க..)
2. உங்களைப் பற்றி சிறு விளக்கம் கூறுங்கள்?
இதுவும் முதல் கேள்வியும் ஒரே மாதிரியா தோணலாம். ஆனா இது உங்க சுயவிபரம் பற்றி அல் ல, உங்கள் குணநலன் பற்றியது. அதாவது நீங்க எப்படிப்பட்டவர் னு சுருக்கமா சொல்லணும். (எதுக்கும், போறதுக்கு முன்னாடி உங்க நண்பர்கள்கிட்ட கேட்டுத் தெரிஞ்சு வச்சு க்கங்க..)
3. இதற்கு முன் பணிபுரிந்த அனுபவம் பற்றி கூறுங்கள்?
அனுபவம்ங்குறது பெரும் பாலான நிறுவனங்கள்ல அவசி யமானதா மாறிடுச் சு. இதைப் பொறுத்து வே லை வாய்ப்புகள் அமையு ம் சூழ லும் உருவாகிடுச்சு. (இஷ்டத்துக்கு அள்ளி விட க் கூடாது.. அதுக்கான சா ன்றி தழும் இருக்கணும்..)
4. பொழுதுபோக்கு அம்சங்கள் என்ன?
தூங்குவேன், டிவி பாப்பேன்“னு கேனத்தனமா பதில் சொல்லாம, அவங்களை கவர்ற மாதிரியான, உறுப்படியான பொழுதுபோக்கு அம்சங்கள சொல்லனும். அதுக்காக நமக்குத் தெரியாத விசயங்களப் பத்தி பந்தாவா சொல்லிட்டு முழிக்க்க்கூடா து. ஏன்னா கேள்விகள் அதப் பத்தியும் வரக் கூடும்.
5. ஏற்கனவே பணி செய்த நிறுவனத்தி லிருந்து விலகக் காரணம்?
“அதிகமா லீவு போட்டேன், அதுனால அவங்களே தொரத்திட்டாங்க“னு ரொ ம்ம் ம்ம்ப நேர்மையா பதில் சொல்ல க்கூடாது. உங்கள ரொம்ம்ம்ப நல்ல்ல் ல்லவர்னு நெனைக்கிற மாதிரி யான காரணத்தை சொல்லணும்.
6. இந்த நிறுவனத்தில் உங்களது பங்களிப்பு என்னவாக இருக்கும்?
இது உங்களோட உழைப்பு பற்றிய கேள்வி. நீங்க இதுக்குக் கொ டுக்கும் பதில் அவங்களுக்கு உங்க மேல நல்ல அபிப்ராயத்தை ஏற் படுத்தணும். (அதுக்காக ஓவர் ஆக்டிங் குடுக்கக்கூடாது.. அடக்கிவாசிங்க..)
7. என்ன சம்பளம் எதிர் பார்க்குறீர்கள்?
இதுரொம்பவே முக்கிய மானகேள்வி. கூடுமான வரை நாம வாய திறக் காம இருக்குறதே நல்ல து. ஏன்னா நாம குறிப் பிடும் தொகை, ஒரு வே ளை அவங்க நிர்ணயி ச்சு வச்சிருக்குறத விட குறைவானதா இருக்க லாம். (பெர்ஃபார்மன்ஸப் பொறுத்து சம்பளம் குடுங்க“னு சொல் லிட்டு பம்மிடலாம்..)
8. உங்கள் பலம், பலவீனமாக எதனைக் கருதுகிறீர்கள்?
இது உங்கள நீங்க எந்த அளவுக்குப் புரிஞ்சு வச்சி ருக்கீங்கங்குறத காட்ட உதவும். அது மட்டுமில்லா ம, உங்களோட நடத்தை யை எடை போட உதவும்.. ஜாஆ ஆஆ ஆக்கிரதை. அதுக்காக தம் அடிக்கிற பழக்கம் பத்தியெல்லாம் ஓப்பனாசொல்லப்படாது..)
9. இந்த நிறுவனம் பற்றி உங்களுக்குத் தெரிந்த தகவல்கள் என்ன?
இது ரொம்பவே முக்கியமான கே ள்வி. குறிப்பிட்ட வேலைக்கு வி ண்ணப்பிக்கும் போது, அந்த நிறுவ னம் பத்தியும், அந்த வேலை பத்தி யும் தெளிவா தெரிஞ்சுவச்சுக்குற து அவசியமானது. (ஜஸ்ட்.. விளம் பரம் பாத்தேன், அப்ளை பண்ணே ன், தட்ஸ் ஆல்“னு தெனா வெட்டா பதில்சொல்லி ஆப்பு வாங்காதீங் க..)
10. பணிநிமித்தம் பயணம் செய்ய சம்மதிப்பீர்களா?
வேலை காரணமா, சில நாள் வெளி யூர் செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற் படலாம். அதுக்கு நீங்க தயாராஇருக் கிங்களானு முன்னாடியே தீர்மானிச் சு வச்சுக்குறதுஅவசியம்.(கூடவே லை பாக்குற பொண்ணை துணைக் கு அனுப்புவீங்களானுகேட்றாதீங்க .)
11. முந்தைய நிறுவனத்தில் ஏதேனும் இக்கட்டான சூழ்நலையை கையாண்ட அனுபவம் உண்டா?
வேற நிறுவனத்துல வேலை பார்த்த அனுபவம் இருந்துச் சுனா, இந்தக் கேள்விக்கான பதில், நம்ம ளோட திறமை யை யூகிக் கச் செய்யும். (ஆபீ சுக்கு லீவு போட்டுட்டு, பாட்டி செத்துப்போய்ட்டாங்கனு ச மாளிச்ச அனுபவத்த சொல் லி வச் சுடாதீங்க..)
12. தனித்து செயல்பட விருப்பமா ? அல்லது குழுவாக செயல்பட விருப்பமா?
இது அவங்கவங்க, தன்மேல வச் சிருக்குற நம்பிக்கையப் பொறுத் து பதி லளிக்கணும். (நா தனியா தான் வருவேன்.. ஆனா தனியாள் இல்லேனு பன்ச் அடிச்சுடாதீங்க ..)
13. இங்கு வேலை கிடைக்காத பட்சத்தில் உங்களுடைய பிரதி பலிப்பு என்னவாக இருக்கும்?
மனசுக்குள்ள கெட்ட வார்த்தைல திட்டுவேன்“னு சொல்லத் தோ ணும். ஆனா சொல் லிடாதீங்க.. இது உங்க விடா முயற்சி, நம்பிக் கை பத்தின கேள்வியா இருக்கும். இந்த பதிலை வச்சுக்கூட வேலை கிடைக்கலாம்.
14. எவ்வளவு காலம் இங்கே பணி செய்யத் தயாராக இருக்கி றீர்கள்?
“ஃப்ரெண்ட் கம்பெனில அப்ளை பண் ணிருக்கேன். கிடைச்சதும் ஓடிடு வேன்“னு அதிமேதாவித்தனமா பதில் சொல்லக் கூடாது. இதுக்கு குறிப்பிட்ட காலவரையறை எ துவும் சொல்லாம, கடைசிவரைக்கும் இருப்பேன்னு சொல்ல ணும். தொடர்ந்து வே லைசெய்ய முன்வரும் பட்சத்துல வாய் ப்புகள் தர ப்படலாம்.
15. உங்களுக்கு, எங்க ளிடத்தில் கேட்கவேண் டிய கேள்விகள் ஏதாவ து இருக் கின்றனவா?
இது, நிறுவனம் அல்லது பணி பற்றி, நமக்கு ஏதாவது சந்தேகங்கள் இருக் காங்குற நோக்கத்துல கேட்கப்படுது. திறம்பட கேட்டுத் தெளிவுபடுத்திக் கொ ள்ளலாம். இந்தக் கேள்வியில இருந்து ம் நம்மளோட, தெரிந்துகொள்ளும் ஆர் வம் ஆராயப்படும். (இங்க எத்தன பொ ண்ணுங்க வேலை பாக்குறாங்க“னு கேட்டுறாதீங்க…)
*
நிறுவனங்களப் பொறுத்து, இன்னும் பல கேள்விகள் கேட்கப்படலாம். கே ள்விகள் எதுவாகயிருந்தாலும் தைரி யமா, தடுமாற்றமில்லாமல நாம கூறு ம் பதில்கள் ரொம்பவே அவசியம். நம் மகிட்டயிருந்து வெளிப்படும் பதில் கள், சம்பந்தப்பட்டவர்க்கு திருப்தியளி க்கும் பட்சத்துல, அதற்கான பலன் நிச்சயம் பாசிடிவ்வாக அமையும்.
வாழ்த்துக்கள்

Monday, June 2, 2014

கியாஸ் கசிவு ஏற்பட்டால் புகார் செய்ய இலவச தொலைபேசி வசதி..!

கியாஸ் கசிவு ஏற்பட்டால் புகார் செய்ய 24 மணி நேர இலவச தொலைபேசி வசதி - ஐ.ஓ.சி அறிமுகம் இந்தியன் ஆயில் நிறுவனம் இன்டேன் கியாஸ் வாடிக்கையாளர்களுக்காக புதிய இலவச தொலைபேசி வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது.


அந்த எண் 1800-425-247-247.


தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள இன்டேன் வாடிக்கையாளர்களுக்கு உதவுவதற்காக இந்த

வசதி தொடங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் 80 லட்சம் கியாஸ் இணைப்புகள் உள்ளன.


475 ஏஜென்சிகளின் கீழ் இந்த வாடிக்கையாளர்கள் உள்ளார்கள். தற்போது அவசர தேவைக்கு 3 செல்போன் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அதை டிஸ்ட்ரிபியூட்டர்கள் கையாளுகிறார்கள். அலுவலக நேரம் தவிர, மற்ற நேரங்களில் அவசர உதவிக்கு புகார் செய்ய முடியாத நிலை இருந்தது. எனவே இந்தியன் ஆயில் நிறுவனம் இந்த புதிய சேவை வசதியை ஏற்படுத்தி உள்ளது.


இந்த தொலைபேசி மாலை 5 மணி முதல் மறுநாள் காலை 9 மணி வரை செயல்படும். சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களில் 24 மணிநேரமும் இயங்கும். கியாஸ் கசிவு பற்றி இரவு நேரத்தில் புகார் செய்தாலும் உடனடியாக சம்பந்தப்பட்ட பகுதி மெக்கானிக்கு உடனடியாக தகவல் கொடுக்கப்படும்.


உடனடியாக அவர் கியாஸ் கசிவை பார்த்து விட்டு கால்சென்டருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

மருத்துவக் காப்பீட்டுக்கு விண்ணப்பிப்பது எப்படி?

முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்துக்கு விண்ணப்பிப்பதற்கான நடைமுறைகள் என்னென்ன?





‘மருத்துவச் செலவு என்பது திடீரென வரக் கூடியது. ஆதலால் மருத்துவக் காப்பீட்டு எடுத்து வைத்துக் கொள்வது மிக நல்லது. தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் நம்மிடம் பிரீமியத் தொகை பெற்றுக்கொண்டு காப்பீடு அளிக்கின்றன. அதுவும் சில நோய்களுக்கும், அவசர சிகிச்சை மற்றும் அறுவைச் சிகிச்சைகளுக்கு மட்டுமே. அதுபோல பொருளாதார வசதி இல்லாத ஏழைகளுக்காகக் கொண்டுவரப்பட்டது முதலமைச்சரின் மருத்துவக் காப்பீடுத் திட்டம். இத்திட்டத்தின் பயனைப் பெற விண்ணப்பிப்பது எப்படி? அதற்கான தகுதிகள் என்ன? ஆகியவற்றைத் தெரிந்துகொள்ளலாம்.


மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் என்பது என்ன?

நமக்கு ஏற்படும் சில மருத்துவ உதவிகளுக்குத் தேவையான பணத்தை அரசே செலுத்துவதுதான் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்.


தகுதிகள்:

இத்திட்டத்தின் பயனைப் பெற ஒரு குடும்பத்தின் ஆண்டு வருமானம் 72,000 ரூபாய்க்குக் கீழே இருக்க வேண்டும்.


தேவையான ஆவணங்கள்:

கிராமப் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனில் கிராம நிர்வாக அலுவலரிடமும், நகர்ப்புறத்தைச் சேர்ந்தவர்கள் எனில்தாசில்தாரிடமும் வருமானச் சான்றிதழ் வாங்கிக் கொடுக்க வேண்டும்.


குடும்ப அட்டை இருக்க வேண்டும். குடும்ப அட்டையில் பெயர் உள்ளவர்கள் மட்டுமே இத்திட்டத்தின் பயனைப் பெற முடியும்.


எங்கே விண்ணப்பிப்பது?

ஒவ்வொரு மாவட்ட அலுவலகத்திலும் காப்பீட்டுத் திட்ட மையம் இயங்கி வருகிறது. அந்த மையத்திற்குச் சென்று விண்ணப்பத்தைப் பெற்று பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களைக் கொடுக்கவும். பின்னர் அவர்கள் சொல்லும் தேதியில் குடும்பத்துடன் சென்று புகைப்படம் எடுத்துக் கொள்ளவும். புகைப்படம் எடுக்கப்பட்டதும் ஓரிரு நாட்களில் மருத்துவக் காப்பீட்டு அட்டைவழங்கப்படும். 


பயனை எப்படிப் பெறுவது?

இத்திட்டத்தின் மூலம் அரசு மற்றும் பதிவு பெற்ற தனயார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம். சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பயன்பெற முடியும். இதன் மூலம் கீழ்க்கண்ட சிகிச்சைகளைப் பெற முடியும்.


இதயம் மற்றும் இதய நெஞ்சக அறுவைச் / cardiology and cardiothoracic surgery

புற்றுநோய் மருத்துவம் /ˆOncology

சிறுநீரக நோய்கள் /‡Nephrology / urology

மூளை மற்றும் நரம்பு மண்டலம் /neurology and neuro surgery

கண் நோய் சிகிச்சை/opthalmology

இரைப்பை (ம) குடல் நோய்கள் /Gastroenterology

ஒட்டுறுப்பு (பிளாஸ்டிக்) அறுவைச் சிகிச்சைகள் /Plastic Surgery

காது, மூக்கு மற்றும் தொண்டை நோய்கள்/E.N.T

கருப்பை நோய்கள்/Gynaecology

ரத்த நோய்கள் / Haematology



மருத்துவமனை செல்லும்போது கவனிக்க வேண்டியவை:

சிகிச்சைக்கு அனுமதிக்கப்படும் முதல் நாள் முதல் சிகிச்சை முடிந்து வீட்டுக்கு அனுப்பப்படும் நாளிலிருந்து ஐந்து நாட்களுக்கு செய்யப்படும் பரிசோதனைகளுக்கான கட்டணம் மற்றும் இதர செலவினங்களுக்கான தொகையும் இத்திட்டத்தில் வழங்கப்படும்.


இலவச சிகிச்சைக்காக மருத்துவ மனையில் அனுமதிக்கப்படும் முன் அந்த மருத்துவமனையில் காப்பீடுத் திட்ட அலுவலரைச் சந்தித்து மேலும் விவரங்களைத் தெரிந்துகொள்ள வேண்டும். ஏனெனில் ஒரே சிகிச்சை வெவ்வேறு மருத்துவமனைகளில் வெவ்வேறு கட்டணங்கள் பெறப்படுவதுண்டு.


ஆன்லைனில் தெரிந்துகொள்ள:-

உறுப்பினர் விண்ணப்பப் படிவத்தைப் பெற இந்த இணைப்பில் செல்லவும். https://docs.google.com/file/d/1VpMQHGnbQywYPlAxYoW8AFec27t6s6sUNMjAIJdGJUtzluRhC2G9KqJl5aMS/edit



மேலும் விவரங்களுக்கு:

இத்திட்டத்தில் பதிவு செய்து கொள்வதற்கும், மேற்கொண்டு விவரங்களைப் பெறவும் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தைத் தொடர்புகொள்ளலாம்.
http://www.cmchistn.com/  இத்தளத்திற்குச் செல்லலாம்.

1800 425 3993 என்ற எண்ணிலும் தொடர்புகொள்ளலாம்.

Tuesday, May 6, 2014

உலகையே பதறச்செய்த‌ சிறுவன் கூறிய வார்த்தையும்! அச்சிறுவனது புகைப்படமும்!

உலகையே பதறச்செய்த‌ சிறுவன் கூறிய வார்த்தையும்! அச்சிறுவனது புகைப்படமும்!

உலகையே பதறச்செய்த‌ சிறுவன் கூறிய வார்த்தையும்! அச்சிறுவனது புகைப் படமும்! சிரியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இதில் லட்சக்கணக்கான மக்கள் பலியானதுடன், மில்லியன்  கணக் கானவர்கள் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர். இந்நிலையில் தற்போது 3வயது சிறுவன் ஒருவனின் புகைப்படம் அனைவரின்  மனதையும் உருக வைத்துள்ளது. இச்சிறுவனின் உடல் முழுவதும் காயங்கள் உள்ளது.

ரணவேதனையில் அச்சிறுவன் கூறிய வார்த்தை…

   “நான் கடவுளிடம் சென்று எல்லாவற்றையும் சொல்லப்போகிறேன்” என்றுகூறியது அனைவரின் மனதையு ம் பதற வைத்துள்ளது. அச்சிறுவனது புகைப்படத்தைக் கீழே காணலாம். அந்நாட்டு  அநியயகரர்கள் மீது எவ்வளவு கோபம் இருந்தால் அச்சிறுவன் இந்த வார்த்தையை கூறி இருப்பான் சற்று .சிந்தியுங்கள்..


உங்கள் லேப்டாப்பை பாதுகாக்க‌ சில யோசனைகள்

உங்கள் லேப்டாப்பை பாதுகாக்க‌ சில யோசனைகள்

உங்கள் லேப்டாப்பை பாதுகாக்க‌ சில யோசனைகள்
இன்றைய யுகத்தில் கம்ப்யூட்டர், லேப் டாப் ஆகியவற்றைப் பய ன்படுத்துவது அவசியம். அதிலும் லேப்டாப், டேப் லட்கள் ஆகிய வற்றின் பயன்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண் டே வருகின்றன.லேப்டாப் பாதுகாப்பு க்கான சில யோசனைகள் இங்கே..
லேப்டாப்பின் திரை மிக முக்கியம். திரையை துடைக்கும்போது
சரியான பொருட்களை பயன்ப டுத்த வேண்டும். திரை மிக அழுத் தினால் சேதமடையவும் வாய்ப்பு கள் உண்டு. பயணம் செய்யும் போது லேப்டாப்பை பத்திரமாக வைத்திருக்க வேண்டும். முக்கிய மாக தூசி மற்றும் ஈரப்பதத்தில் இருந்து விலக்கி வைக்க வேண் டும்.
லேப்டாப்பை தூக்கிச்செல்ல மு துகில் மாட்டும் பேக்கை பயன் படுத்துங்கள். உணவு நேரம் அல் லது தொலைபேசியில் பேசுவதற்கு செல்லும் நேரம் ஆகிய நேர ங்களில் லேப்டாப்பை ஹைபர்னேட் நிலையிலோ வைத்திருங்க ள். இது மின்சார பயன்பாட்டை குறைப்பதுடன் லேப்டாப்பிற்கு அதிக ஆயுளை தரும்.
தொடர்ச்சியாக 8 மணி நேரத்தி ற்கு மேல் லேப்டாப்பை பயன்ப டுத்தாமல் இருப்பது நல்லது. தொடர்ச்சியாக இயக்கத்தில் இ ருந்தால் , லேப்டாப்பை அதிக சூ டாகும். சில மணி நேரத்தில் அணைக்கவி ல்லை என்றால், அதன் செயல்பாட்டின் வேகமும் குறைந்து விடு ம்.
லேப்டாப் வாங்கும் போ தே ஃபயர்வால் நிறுவப்பட் டிருக்கும். அது இல்லை யென்றால் உங்கள் லேப் டாப்பை பாதுகாக்க ஃபயர் வலை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய் தோ அல்லது புதிதாக வாங்கியோ நிறுவுங்கள்.அசல் உரிமத்துட ன் கூடிய ஆண்டி-வைரஸ் சாப்ட்வேர்களை நிறுவியிருப்பது நல்லது.
லேப்டாப்பை வருடத்திற்கு ஒரு முறையாவது பரிசோ திக்க வேண்டும். எப்போதும் லேப்டாப்பை ஒரு தட்டையா ன பரப்பில் வைத் திருந்தால் அது சேதமடையாமல் பாது காக்கும்.
லேப்டாப்பிற்கான குளிர்ச்சியை ஏற்ப டுத்தும் விசிறி சந்தையில் கிடைக்கிற து. அதில் ஒன்றை வாங்கி பயன்படுத் துங்கள். இது லேப்டாப் அதிக சூடாக்கு வதை தடுக்கும். நம் வீட்டில் இருக்கும் குழந்தைகள் லேப்டாப்பை பயன்படுத் தும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம்.                                                                                       நன்றி :.அன்பைத்தேடி

மன அழுத்தம் போக்க சில மாற்று யோசனைகள்….

மன அழுத்தம் போக்க சில மாற்று யோசனைகள்….

மன அழுத்தம் போக்க சில மாற்று யோசனைகள்….
இந்த நூற்றாண்டு மனிதர்களிடம் உள்ள மிக முக்கியமான நோய், மன அழுத்தம். ரத்த கொதி ப்பு, சர்க்கரை வியாதிக்கு அடு த்த இடத்தை மன அழுத்தம் பிடித்துள்ளது. இயல்பு வாழ்க்கையை பாதிப்பதோடு நிம்மதி இல்லாத சூழ்நிலையை யும் பல்வேறு நோய்களையும் தரும் இந்த மன அழுத்த நோயினால் உலகின் 69 சதவீத மக்கள் பாதிப்படைந்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கி ன்றன. மன அழுத்தம் இரு வகைகளில் ஏற்படுகி றது. ஒன்று நம்மை சார்ந்த சமூகத்தின் செயல்பாடுகளாலும்,
மற்றொன்று நமது வாழ்க்கையில் நிக ழும் சிந்தனைகள், ஏமாற்றம், பயம், நிராகரிப்பு, எரிச்சல், வேலைப்பளு, அ திக சிரமத்தை சும த்தல், குழப்பம், சுற் றுச்சூழல் மாசடைதல், எதிர்மறை சிந்த னைகள் நடைமுறை மாற்றங்கள் போ ன்றவற்றாலும் ஏற்படுகிறது.
இது தவிர, பிறப்பு (பெண் குழந்தை, குறைபாடுடைய குழந்தை), இறப்பு, திருமணங்கள், விவா கரத்து, தொழில் பாதிப்பு, எதிலு ம் போட்டி சூழல், பதவி இழத் தல், நல்ல பெயருக்கு ஏற்படும் பாதிப்பு, கடன் தொல்லை, தீரா த நோய், வறுமை, தேர்வு பயம், போக்குவரத்து நெரிசல், கோப ம், உறவு விரிசல், விரும்பத்த காத மாற்றங் கள் என நம்மைச் சுற்றி நிகழும் எல்லாவிதமான காரணிகளும் மனஅழுத்தத்திற்கு நம்மை இட்டுச் செல்கின்ற ன.புகை பிடித்தல், முறையற்ற உணவுப் பழக்கம், போதை மருந் து, மது, தூக்கமின்மை என நா மாக தேடிச் சென்று மன அழுத் தத்தை விலைகொடுத்து வாங் கும் செயல்களும் உண்டு.
புகை பிடிக்கும் போது அதிலுள் ள நிக்கோடினுக்கு மன அழுத்த த்தை அதிகரிக்கும் திறன் அதிக ளவில் இருப்பதாக பல்வேறு ஆ ராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. மன அழுத்தத்தால் ஒற்றை தலைவலி, ஸ்ட்ரோக், அஜீரண கோ ளாறு, இதய நோய், உயர் ரத்த அழுத்தம், சீரற்ற இதய துடிப்பு, உட ல் எடை அதிகரித்தல் என எண் ணற்ற நோய்கள் ஏற்படுகின்ற ன. மன அழுத்தத்தை குறைப்பத ற்கு அதி காலையில் சீக்கிரம் எழுந்து ஒவ்வொரு செயலையு ம் திட்டமிட்டு செய்யுங்கள். செ ய்ய வேண்டிய பணிகளை தாம தம் செய்யாமல் முன் கூட்டியே திட்டமிடுவது நல்லது.
கடைசி நேரம் வரை தள்ளிப் போடாமல் சரியான நேரத்தை கடை பிடிக்க வேண்டும். அனைத் துக்குமே மாற்று யோசனை ஏதாவது ஒன்றை கைவசம் வைத்திருப்பது கடைசி நேர நெருக்கடியால் நிகழும் மன அழுத்தத்தை தீர்க்கும். சில தோல்விகள் ஏற்படும் போது , அத்தோடு எல்லாம் முடிந்து விட்டதாக நினைக்காமல் அடுத்த கட்ட முயற்சி மேற் கொள்ளுங்கள். தவறாக நட ந்த விஷயத்தை பற்றியே எந்நேரமும் சிந்திக்காமல் நல்ல விஷ யங்களை நினைத்து மகி ழுங்கள். உடல் மற்றும் உ ள்ளத்திற்கு போதுமான ஓய்வை அளியுங்கள்.
எளிமையான வாழ்க்கை முறையை பின்பற்றுங்க ள். கருத்து ஒற்றுமையு டைய நண்பர்களுடன் அதி க நேரம் செலவிடுங்கள். நன்றாக அயர்ந்து தூங்குங்கள். யோகாசனம், பிராணாயமம், தி யானம், போன்ற பயிற்சிக ளை தினசரி உற்சாகத்துட ன் செய்யுங்கள். குழப்பம், கவலைகளை மனதுக்குள் புதைத்து புழுங்காமல் நம் பிக்கையான நண்பர்களுட ன் பகிர்ந்து கொள்ளுங்கள் . முடிந்த அளவுக்கு சமூக பங்களிப்பை செய்து மகிழு ங்கள். உங்கள் உடை, நடை, பாவனைகளில் தன்னம்பிக்கை மிளிரட்டும்.
ஒவ்வொரு வேலைக்கும் சரியான இடைவெளி விடுங்கள். வார இறுதி நாட்கள்,விடுமுறை நாட்களை குடும்பத்துடன் மகிழ்ச்சியாக செலவழியுங்கள். மன்னிக்கும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுங்கள். அடுத்தவர்களை புண்படுத்தா மல் இருங்கள். பேச்சில் இனி மை காட்டுங்கள். யாரோடும், எதற்காகவும் ஒப்பீடு செய்யா தீர்கள். நடப்பவை எல்லாம் நன்மைக்கே என்ற எண்ணத் தை ஊன்றினால், வாழ்க்கை பிரகாசமாக இருக்கும். மன அழுத் தம் அண்டாது.
                                                                                                                                          - தினகரன்

கைபேசி (செல்போன்) பற்றிய அரிய தகவல்கள்

இன்று பெரும் தொழிலதிபர்கள் முதல் பூக்காரப் பெண்மணி வரை அனை வர் கையிலும் செல்போன் புழங்கு கிறது. எல்லோருமே அதில் டாக் டர் பட்டம் பெறுமளவுக்கு எந்நேர மும் குடைந்துகொண்டே இருக்கி றார்கள்.
தொலைத்தொடர்பு மட்டுமின்றி, மியூசிக் பிளேயர், காமிரா, டார்ச், கால ண்டர் என்று ஒரு கையடக்கத் தோழனாக செல்போன் உதவுகிறது. செல் போன் இன்றி இனி எவராலும் இயங்க முடியாது. அதன் பல்வேறு அம்சங்கள், பயன்பாடுகள் பற்றி அனைவரும் அறிந்தும் இருக்கிறார்கள். ஆனால் அறிய வேண்டிய அத்தியாவசிய அம்சங் களை அறிந்திருக்கிறார்களா என்பது கேள்விக் குறி. அவை பற்றி…
உயிர்காப்பான்
முதலாவதாக, அவசரநிலைகளில் செல்போன் ஓர் உயிர்காப்பானாகப் பயன்படும் என்பது பலருக்குத் தெரியாது.
அதாவது, செல்போன்களுக்கு என்று உலகளாவிய ஒரு அவசரநிலை எண் இருக்கிறது. அது, 112.
இக்கட்டான நிலையில், உங்களுக்குச் சேவை யை வழங்கும் நிறு வனத்தின் `நெட் ஒர்க்’ கிடைக்காத இடத்தில் நீங்கள் இருந்தால் உங் களால் வெளியிடங்களுக்குத் தொடர்பு கொ ள்ள முடியாது. ஆனால் இந்த அவசர நிலை எண்களை அழுத்தும்போது, வேறு ஏதாவது செல்போன் சேவை நிறுவத்தின் `நெட் ஒர்க்’ இருந்தாலும் அதைத் தேடிக் கண் டு பிடிக்கும். அதன்மூலம் வெளியே `எமர் ஜென்சி’ தகவ லை அனுப்பும். `கீ பேட்’ லாக் செய்யப்பட்டிரு ந்தாலும் இந்த எண்ணை அழுத்த முடியும் என்பது ஆச்சரியமான விஷயம்.
`ரிசர்வ் சார்ஜ்’
இன்று பெரும்பாலானவர்கள், பல்வேறு நவீன வசதிகளைக் கொண்ட `ஸ்மார்ட் போன்களை’ பயன்படுத்து கிறார்கள். கூடுதல் வசதிகளைப் பய ன் படுத்துவதன் காரணமாகவே இத் தகைய செல்போன்களில் சீக்கிரமே `சார்ஜ்’ தீர்ந்துவிடுகிறது. செல்போ ன்களில் `ரிசர்வ் சார்ஜ்’ என்ற ஒன்று இருப்பது நிறையப் பேருக்குத் தெரி யாது. அது, பேட்டரியின் உண்மை யான மின் சேமிப்புத் திறனில் 50 சத வீதமாகும்.
இந்த `ரிசர்வ் சார்ஜை’ பயன்படுத்துவதற்கு நாம், *3370# என்ற `கீ’க்களை அழுத்த வேண்டும். இந்த வகையில் அழுத்தியவுடனே, `சார்ஜ்’ இன்றி முடங்கிய செல்போன் உயிர்ப்பெறும். 50 சதவீத பேட்டரி சார்ஜை காட் டும். அடுத்த முறை நீங்கள் செல் போனை `சார்ஜ்’ செய்யும் போது இந்த `ரிசர்வ்’ இருப்பு, சார்ஜ் ஆகிக் கொள்ளும்.
தொலைந்துபோனால்…
செல்போன் தொலைந்து போனா லோ, திருட்டுப்போனாலோ அ தை முறைப்படி `பிளாக்’ செய்ய வோ, மீட்கவோ வழியிருக்கிறது. இது பற்றிச் சிலர் அறிந்திருப்பார்கள் என்றாலும், முழுமையாகப் பார்க்கலாம்-
ஒவ்வொரு செல்போனுக்கு ஒரு வரிசை எண் உள்ளது. ஐ.எம்.ஈ.ஐ. எண் என்ற அது, ஒவ்வொரு செல்போனுக்கும் தனித்தன்மை யானது ஆகும்.
உங்கள் செல்போனின் ஐ.எம்.ஈ.ஐ. எண்ணை அறிய, *#06# என்ற `கீ’க்களை அழுத்துங்கள். உடனே செல்போன் திரையில் ஒரு 15 இலக்க எண் தோன்றும். இந்த ஐ.எம்.ஈ.ஐ. எண் , ஒவ்வொரு செல்போனுக்கும் வேறு படும். இந்த எண்ணைக் குறித்துவைத்துக் கொள்ளுங்கள்.
உங்கள் செல்போன் தொலைந்து போனா லோ, திருட்டுப்போனாலோ உங்களுக்கு செல்போன் சேவையை அளி க்கும் நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு இந்த எண்ணைக் கொடுங்கள். அவர்கள் உடனே குறிப்பிட்ட செல் போனை `பிளாக்’ செய்வார்கள். செல் போனை யாராவது திருடி அதன் `சிம்கார்டை’ மாற்றினாலும் அவர்களா ல் முற்றிலுமாக செல்போ னை பயன்படுத்த முடியாமல் போகும்.
இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும்

சென்னை கிராபிக்ஸ்  வரவேற்கிறது.

 

 

 

                                                                                                          நன்றி :விதைவிருட்சம் 

கம்ப்யூட்டர் கீ போர்டில் இல்லாத குறியீடுகள் – அறிய வேண்டிய அரிய தகவல்

கம்ப்யூட்டர் கீ போர்டில் இல்லாத குறியீடுகள் - அறிய வேண்டிய அரிய தகவல்

கம்ப்யூட்டர் கீ போர்டில் இல்லாத குறியீ
டுகள் - அறிய வேண்டிய அரிய தகவல்

Alt + 0153….. ™… trademark symbol
Alt + 0169…. ©…. copyright symbol
Alt + 0174….. ®….registered trademark symbol
Alt + 0176 …°……degree symbol
Alt + 0177 …±….plus-or -minus sign
Alt + 0182 …¶…..paragraph mark
Alt + 0190 …¾….fraction, three-fourths
Alt + 0215 ….×…..multiplication sign
Alt + 0162…¢….the cent sign
Alt + 0161…..¡….. .upside down exclamation point
Alt + 0191…..¿….. upside down question mark
Alt + 1………..smiley face
Alt + 2 ……☻…..black smiley face
Alt + 15…..☼…..sun
Alt + 12……♀…..female sign
Alt + 11…..♂……male sign
Alt + 6…………spade
Alt + 5…………. Club
Alt + 3…………. Heart
Alt + 4…………. Diamond
Alt + 13……♪…..eighth note
Alt + 14……♫…… beamed eighth note
Alt + 8721…. ∑…. Nary summation (auto sum)
Alt + 251…..√…..square root check mark
Alt + 8236…..∞….. infinity
Alt + 24…….↑….. up arrow
Alt + 25……↓…… down arrow
Alt + 26…..→…..right arrow
Alt + 27……←…..left arrow
Alt + 18…..↕……up/down arrow
Alt + 29……↔…left right arrow
 thanks to vidhai2virutcham

Saturday, March 22, 2014

SUGER COMPLIANT AVOID THE 10 FRUITS LIST

சர்க்கரை நோய் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய 10 பழங்கள்


சீரான உணவுத் திட்டத்தை பின்பற்றும் போது உடலில் பல அற்புதங்களும் ஆரோக்கியமும் ஏற்படுகின்றது.
பழங்களை உணவு திட்டத்தில் சேர்க்கும் போது, அது நமக்கு தேவையான ஊட்டச்சத்துக்களாகிய முக்கிய வைட்டமின்களாகவும், கார்போஹைட்ரேட்டுகளாகவும் மற்றும் கனிமங்களாகவும் உடலுக்கு உறுதியைத் தருகின்றன. சர்க்கரை நோய் உள்ளவர்கள் தாங்கள் தேர்ந்தெடுத்து உட்கொள்ளும் பழங்களில் சிறிது கவனத்துடன் இருத்தல் நலம். ஏனெனில் பழங்கள் உடலுக்கு நலமாயினும் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு அது சில சமயம் எதிர்மறையாகி விடுகின்றது.


பழங்கள் நல்ல ஊட்டச்சத்து மற்றும் சக்தி தருவனவாகும். இவற்றில் நல்லவை தீயவை என்று பிரிக்க முடியாது. ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் ஊட்டச்சத்து அளவில் தான் ஒவ்வொரு பழமும் வேறுடுகின்றது. இது ஒவ்வொருவரின் உடல் தேவைகேற்ப பலனை தருகின்றது. சர்க்கரை நோயாளிகளை பொறுத்தவரை, ஒவ்வொரு பழமும் அவர்களின் இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவை மாற்றும் திறன் கொண்டவை. பாதுகாப்பின் அடிப்படையில் ஒரு சில பழங்களை உண்ணாமல் இருப்பது நல்லது ஏனெனில் இரத்தத்தின் சர்க்கரை அளவை அது மோசமான அளவிற்கு உயர்த்தக்கூடும்.

பெரும்பான்மையான பழங்கள் அவைகளின் சர்க்கரை அளவின் படி தான் பிரிக்கப்பட்டுள்ளது. சர்க்கரை நோய் உள்ளவர்கள் பழத்தை உண்ணும் முன் அதன் GI குறியீட்டு எண்ணை (Glycemic Index) கண்டறிந்த பின் உண்ண வேண்டும். GI குறியீடு என்பது கிளைசீமிக் குறியீட்டைக் குறிக்கும். சர்க்கரை நோய் உள்ளவர்கள் 55 அல்லது அதற்கும் குறைவான அளவுள்ள குறியீட்டை கொண்ட பழங்களை உண்பது நல்லது. ஸ்ட்ராபெர்ரி, பேரிக்காய், ஆப்பிள் ஆகியவைகளில் கார்போஹைட்ரேட் அளவு குறைவாக உள்ளதால் சர்க்கரை நோய் உள்ளவர்கள் இந்த பழங்களை தாராளமாக உட்கொள்ளலாம்.

மாம்பழம்

பழங்களின் ராஜா என்று கூறப்படும் மாம்பழம் உலகிலேயே அதிக சுவை மிகுந்த ஒரு பழமாக விளங்குகிறது. ஆனால் அப்பழத்தில் மிகுந்த சர்க்கரை இருப்பதால் இப்பழத்தை தவிர்ப்பது நல்லது. தொடர்ந்து இதை உட்கொண்டால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாகிவிடும்.

சப்போட்டா

இந்த பழத்தில் GI குறியீட்டு எண் 55 க்கு மேலுள்ளதால் இது சாப்பிடுவதற்கு உகந்தது அல்ல. இப்பழத்தில் சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரேட் அதிக அளவில் உள்ளது.

திராட்சை

நார்ச்சத்து, வைட்டமின் மற்றும் பல ஊட்டச்சத்துகள் நிறைந்த திராட்சையில் அதிக அளவு சர்க்கரையும் உள்ளது. இதை சர்க்கரை நோய் உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது. 3 அவுன்ஸ் கொண்ட திராட்சையில் 15 கிராம் கார்போஹைட்ரேட் உள்ளது.

அன்னாசி

இப்பழத்தில் அதிக அளவு கிளைசீமிக் குறியீடு இருப்பதால் இப்பழத்தை அறவே தவிர்க்க வேண்டும். ஒரு சிறிய கோப்பை அன்னாசிப் பழத்தில் 20 கிராம் அல்லது அதற்கு மேற்பட்ட அளவு கார்போஹைட்ரேட் உள்ளது.

சீத்தாப்பழம்

வைட்டமின் சி, கால்சியம், இரும்பு மற்றும் நார்ச்சத்துக்கள் நிரம்பிய இப்பழத்தில் சர்க்கரை அதிகமாக இருப்பதால் இதையும் தவிர்க்க வேண்டும். 100 கிராம் சீத்தாப்பழத்தில் 23 கிராம் அல்லது அதற்கும் மேற்பட்ட அளவு கார்போஹைட்ரேட் உள்ளது.

ஆப்ரிக்காட்

இப்பழத்தின் கிளைசீமிக் குறியீட்டு அளவு 57 ஆக உள்ளது. சர்க்கரை நோய் உள்ளவர்கள் இந்த பழத்தையும் தவிர்க்க வேண்டும். அரை கப் ஆப்ரிக்காட் பழத்தில் 8 கிராம் கார்போஹைட்ரேட் உள்ளது.

வாழைப்பழம்

அரை கப் வாழைப்பழத்தில் 15 கிராம் கார்போஹைட்ரேட் உள்ளது. அதன் GI 46 முதல் 70 வரை உள்ளது. முழுவதும் பழுத்த வாழைப்பழங்களை சர்க்கரை நோயாளிகள் தவிர்க்க வேண்டும்.

தர்பூசணி

குறைந்த நார்ச்சத்து மற்றும் குறைந்த கலோரி உடைய தர்பூசணி பழத்தில் சர்க்கரை மட்டும் 72 GI அளவிற்கு உள்ளது. இப்பழத்தில் வைட்டமின் ஏ மற்றும் சி ஆகியவையும் அதிகமாக உள்ளன. அரை கப் தர்பூசணியில் 5 கிராம் கார்போஹைட்ரேட் உள்ளது.

பப்பாளி

59 GI உடைய இப்பழத்தில் கார்போஹைட்ரேட் மற்றும் கலோரிகள் அதிகம் உள்ளது. இதை சர்க்கரை நோயாளிகள் தங்கள் சர்க்கரை அளவு ஏறாத வன்னம் உண்ணுதல் உகந்தது.

கொடிமுந்திரி

சர்க்கரை நோயாளிகள் இப்பழத்தை அறவே தவிர்க்க வேண்டும். 103 GI மதிப்பு கொண்ட இப்பழத்தில் கால் பங்கு அளவிலேயே 24 கிராம் கார்போஹைட்ரேட் உள்ளது.


நன்றி:http://www.seithy.com

USE ATM CARD??? NO LOSS YOUR MONEY :-USEFUL TIPS

ஏ.டி.எம். கார்ட் பயன்படுத்தறீங்களா? உங்கள் பணம் பறிபோகாமல் இருக்க பயனுள்ள குறிப்புகள்..!

ஒரே நிமிடத்தில் பண பரிவர்த்தனை நடைபெறும் ஓர் அற்புதமான நுட்பத்தைக் கொண்டுள்ளது. ஏ.டி.எம். மெஷின்.

ATM CARD இருந்தால் எங்கு வேண்டுமானாலும் செல்லாம்.  பணம் தேவைப்படும்பொழுது அங்கிருக்கும் ஏதாவது ஒரு அங்கீகரிக்கப்பட்ட ATM சென்டரில் சென்று வங்கிக்க கணக்கில் உள்ளப் பணத்தைப் பெற்றுக்கொள்ளலாம்.

இத்தகைய வசதிகொண்ட இதில் சில தீமைகளும் இருக்கத்தான் செய்கின்றன. எச்சரிக்கையுடன் ATM CARD - ஐ பயன்படுத்தவில்லை என்றால் உங்களது பணத்தை அபகரித்துவிடுவார்கள்.
atm-useful-tips

புதியதாக நீங்கள் ATM CARD பயன்படுத்துபவர்கள் என்றால் உங்கள் நம்பிக்கையான குடும்ப நபர் ஒருவரை உடன் அழைத்துச் சென்று  பணம் எடுக்கச் சொல்லலாம். பாதுகாப்பிற்கு பாதுகாப்பும் கிடைக்கும். உங்கள் ATM குறித்த தகவல் மூன்றாம் நபருக்கும் தெரியாமல் இருக்கும்.

ATM சென்டரில் உள்ள காப்பாளரை உதவிக்கு அழைத்துக்கொள்ளலாம். மூன்றாம் நபர் எவரையேனும் நம்பி உங்களது பின் நம்பரையோ, பணத்தை எடுப்பதற்கோ உதவுமாறு கேட்டால், நிச்சயம் பாதுகாப்பில்லாம் போகும்.

இப்படிதான் நண்பர் ஒரு புதியதாக ATM CARD வாங்கியவுடன் தன் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை முதல் முறை எடுக்கு ஏ.எடி.எம் சென்றார். அங்குள்ள ஒரு இளைஞனை உதவிக்கு அழைத்து, பின் நம்பரையும் குறிப்பிட்டு உதவ சொல்லியிருக்கிறார்.

இளைஞனும் இரண்டு மூன்று முறை ATM போடுவதைப் போன்று போட்டு எடுத்துவிட்டு, உங்கள் ATM - வேலை செய்யவில்லை. பணம் இருக்கிறதா என தெரியவில்லை என சொல்லிவிட்டு, அவரை வெளியே அனுப்பிவிட்டான்.

நண்பரும் தனது சம்பளத்தை வங்கி கணக்கில் நிறுவனம் சேர்க்கவில்லை என நினைத்து வெளியேறிவிட்டார்.

உள்ளே இருந்த இளைஞன் அவரது ATM செருகுவது போல் பாவ்லா செய்துவிட்டு, அவரது பின் நம்பரை உள்ளிட்டு அவருடைய மொத்த சம்பளத்தையும் எடுத்துவிட்டான். பதினைந்தாயிரம் சம்பளத்தையும் எடுத்துக்கொண்டுவிட்டான் அந்த இளைஞர்.

நண்பர் பஸ்டாண்டிற்கு நடந்து கொண்டிருக்கும்போது, அவருடைய மொபைலுக்கு மெசேஜ் வர, அதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துவிட்டார். பதினைந்தாயிரம் பணம் வித்டிராவல் ஆகிவிட்டதாக அந்த SMS - ல் இருந்தது.

உடனே திரும்பி அந்த ATM -க்கு ஓடிப் பார்த்தால் அந்த இளைஞன் சிட்டாக பறந்திருந்தான். ஐயோ பணம் போச்சே என்ற ஏக்கத்துடன் அவர் வீடு திரும்பிவிட்டார். பிறகு வங்கிக்கு புகார் அளித்தும் கூட அந்த பணத்தை திரும்ப பெற முடியவில்லை. காரணம் அவரது கணக்கிலிருந்து, அவருடைய ATM பயன்படுத்தி பணம் எடுக்கப்பட்டிருந்தது உறுதியாகி இருந்தது.

நண்பரின் பணத்திற்கு வங்கியும் பொறுப்பேற்கவில்லை. உங்களுடைய பணத்தை இதுபோல மூன்றாம் நண்பர்களிடம் ATM தகவல்களைச் சொல்லி தயவு செய்து ஏமாற வேண்டாம்.

ஜவுளி கடைகள், பெட்ரோல் பங்குகள், மற்றும் சூப்பர் மார்கெட்கள் என இப்பொழுது எங்கு பார்த்தாலும் ATM பயன்படுத்தி பில் செலுத்தும் வசதி வந்துவிட்டது.

இத்தகைய கடைகளில் சில ஏமாற்றுக் கடைகளும், நிறுவனங்களும் உள்ளது. இவர்கள் உங்களிடம் கட்டணத்தைப்பெற ஒன்றுக்கும் மேற்பட்ட மெஷின்களில் உரைத்துவிட்டு, உங்களது பொருட்களுக்கான பில்லை எடுத்துக்கொள்வார்கள்.

இரண்டாவதாக ஏ.எடி.எம் கார்த்தை உறைத்த மெஷின் போலியானதாக இருக்கும். இந்த மிஷின் என்ன செய்யுமென்றால், உங்களது ஏ.டி.எம். தகவல்களை அப்படியே முழுமையாக சேமித்துக்கொள்ளும். அதிக வருமானம் உள்ளவர்களாக இருந்தால், உங்களை அறியாமலேயே உங்கள் வங்கிக் கணக்கில் பணம் குறைந்திருப்பதை நீங்கள் உணர நீண்ட காலமாகும்.

நீங்கள் உஷாராகி முடிப்பதற்குள், ஒரு கணிசமான தொகை, அவர்களால் உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து களவாடப்பட்டிருக்கும். எனவே, எந்த இடத்தில் ATM பயன்படுத்தினாலும் உஷாராக இருந்து, ஒரு முறைதான் அது பயன்படுத்தப்படுகிறதா? என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள். அப்பொழுதுதான் உங்களது பணம் பாதுகாப்பாக, உங்கள் வங்கிக் கணக்கிலேயே இருக்கும்.

அதேபோல் நீங்கள் எந்த வங்கியில் கணக்கு வைத்திருக்கிறீர்களோ, அந்த வங்கியின் ATM சென்டரிலேயே பணம் எடுப்பதை வழக்கமாக்கிக்கொள்ளுங்கள். ஒருவேளை பணம் வராமல், உங்கள் கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டுவிட்டது, என்று தவறான தகவல் வந்தாலோ, பணம் வெளியா வராமல் இருந்தாலோ, உடனடியாக வங்கியில் புகார் செய்ய இந்த முறைப் பயன்படும்.

Thursday, March 13, 2014

உங்கள் தொழில் வெற்றி பெற

உங்கள் தொழில் வெற்றி பெற

இது,ஏதேனும் தொழில் துவங்கலாம் என எண்ணுவோருக்கும்,ஆரம்பநிலை பட்டதாரிகளுக்கும்,முறையாக தொழில் நடத்தாமல் சறுக்கல் கண்டு குழம்புவோருக்குமான பதிவு...
கோடிக்கணக்கில் கறுப்பு பணத்தை வெளிநாடுகளில் பதுக்கி வைத்திருக்கும் பல தொழிலதிபர்களையும் சேர்த்து பிசினஸில் வெற்றி பெற்ற பலரது வாழ்க்கையையும் (கூர்ந்து) ஒப்பிட்டு பார்த்தால் அவற்றில் ஒரு ஒற்றுமை தெரியும்... நிச்சயமாக அவர்கள் அதிர்ஷ்டத்தால் முன்னேறியவர்களாக இருக்கமாட்டார்கள்.
சமீபத்தில் மேலாண்மைத் துறையை சார்ந்த மாணவர்களுக்கான ஒரு கருத்தரங்கில் கலந்துக் கொண்டபோது அங்கு விரிவாக விவாதிக்கப்பட்டதை,மிக சுருக்கமாக தருகிறேன்...
1.
நீங்கள் விரும்புகிற தொழில் என ஒன்று இருக்கும்,ஆனால் நடைமுறை வாழ்க்கைக்கு வரும்போது அந்த குறிப்பிட்ட தொழில்,மக்களுக்கு எந்தளவுக்கு தேவையாய் இருக்கிறது மற்றும் பொருளாதார அடிப்படையில் அந்த தொழில் சிறந்து இருக்கிறதா என கள ஆய்வு செய்வது அவசியம்.அதை ஆராயும் போதே,உங்களுக்கு மற்ற தொழில்கள் பற்றிய விளக்கங்களும் கிடைத்துவிடும்,கிடைக்கவில்லையென்றால் அவற்றையும் அலசி ஆராயுங்கள். அதனைப் பற்றிய முழு விபரங்களையும் சேகரியுங்கள்.
குறைந்த பட்சம்,3 ஆண்டுகளுக்காவது உங்களது தொலைநோக்குப் பார்வை இருப்பது நல்லது.
இதுதான் நாம் துவங்கப் போகும் தொழில் என்பதில் உறுதி கொள்வதுதான் முதல் படி...
2.
அனுபவத்தை விட சிறந்த ஆசிரியர் வேறேதும் இல்லை...ஆகவே,நீங்கள் வடிவமைத்துக் கொண்ட தொழில் பற்றிய விபரங்களுடன்,உங்களது சொந்த ஐடியாக்களையும் கலந்து,நீங்கள் உலகில் இல்லாத ஒன்றை செய்ய போகிறீர்கள் என மற்றவர்கள் எண்ணும் அளவுக்கு ஒரு தோற்றத்தை கொண்டு வாருங்கள்.
ஏற்கனவே அதே தொழிலில் இருக்கும் அனுபவசாலிகளிடமும்,துறை சார்ந்த வல்லுனர்களிடமும்- கௌரவம் பார்க்காமல்,எவ்வித ஈகோவுமின்றி விளக்கம் கேளுங்கள்.அவர்களிடம் விவாதம் செய்யாதீர்கள்.தொழில் கைக்கூடும் வரை நீங்கள் உங்களை அப்பாவியாக (சிலசமயம் முட்டாளாக) காட்டிக் கொள்ள தயங்கவேண்டாம்.
நீங்கள் தெளிவு பெற்ற அனைத்தையும் பட்டியலிட்டுக் கொள்ளுங்கள்.
இனி அந்த பாதையில் நடக்கவேண்டியதுதான்...
3.
அடுத்து உங்களுக்குக்கான வாய்ப்புகள் எங்கேல்லாம் இருக்கிறதென தேடுங்கள்.அங்கெல்லாம் உங்களுக்கு உதவ மற்றும் தகவல் தருவதற்கு ஆட்களை உருவாக்கிக் கொள்ளுங்கள்.உங்களுக்கு உதவுவதால் அவர்களுக்கு என்ன லாபம் என்பதையும் சூசகமாகவோ நேரடியாகவோ தெரிவியுங்கள்.லாபம் இல்லாமல் யாரும் நூறு சதவீதம் உதவமாட்டார்கள்.
பெரும்பாலும்,ஏற்கனவே இருக்கும் வாய்ப்புகளை தேடி கூட்டத்தோடு போட்டி போடாமல்- உங்களுக்கான வாய்ப்புகளை நீங்களே வடிவமைத்துக் கொள்ளுங்கள்.
முக்கியமாய்,அதில் பிற்காலத்தில் வரக்கூடிய அபாயங்களையும் யூகித்துக் கொள்ளுங்கள்.
4.
திட்டங்கள் போட்டாயிற்று...அதை நிறைவேற்ற பணம்?
நீங்கள் எத்தனை பெரிய பணக்காரராக இருந்தாலும்,முழுக்க முழுக்க உங்களது பணத்தை மட்டுமே முதலீடாக கொள்வது அத்தனை உசிதமான செயல் அல்ல..உங்களை புரிந்துக் கொள்ளும் உங்களுக்கு பிரச்சனைகள் தராதவர்களை கூட்டு சேர்த்துக் கொள்வது நல்லது.
தனிப்பட்ட நபர்களின் முதலீடு / வங்கிக் கடன் / தனிநபர் கடன் / உங்கள் தரப்பு ன - முதலீடுக்கான ஆதாரங்களை தீர்க்கமாய் தயார் செய்துக் கொள்ளுங்கள்.
முதல்ல ஆரம்பிக்கலாம்,அப்பறம் பார்த்துக்கலாம் என அலட்சியமாக விட்டால்,அதுவே முக்கியமான நேரத்தில் துயரமாகி விடும்.
5.
தொழில் என வந்துவிட்டால் போட்டி இல்லாமல் இருக்குமா?
உங்கள் வாடிக்கையாளர்கள் யார் என்பதை அடையாளம் கண்டுக் கொள்வது போல்,உங்களது போட்டியாளர்கள் யார் என்பதையும் அறிந்துக் கொள்வது அவசியம்.
நல்ல தயாரிப்பு மற்றும் விநியோகத்தில் கவனம் செலுத்துவதை போல்,சலுகைகள்,விலைநிர்ணயம்,நேரடி தொடர்புகள் ஆகியவற்றிலும் கண்காணிப்பு அவசியம்.உங்கள் தொழில் எப்போதும் பேசப்பட என்ன செய்யலாம் என்பதை முன்கூட்டியே தீர்மானிக்கவேண்டும்.அதேசமயம் மற்றவர்களிடமிருந்து மாறுபாடாய் இருக்கவும் வேண்டும்.