V

SSLC MARK 2012- CHENNAI GRAPHIX

mba.basheer

Welcome to my website. join with us

quick search

Thursday, March 13, 2014

உங்கள் தொழில் வெற்றி பெற

உங்கள் தொழில் வெற்றி பெற

இது,ஏதேனும் தொழில் துவங்கலாம் என எண்ணுவோருக்கும்,ஆரம்பநிலை பட்டதாரிகளுக்கும்,முறையாக தொழில் நடத்தாமல் சறுக்கல் கண்டு குழம்புவோருக்குமான பதிவு...
கோடிக்கணக்கில் கறுப்பு பணத்தை வெளிநாடுகளில் பதுக்கி வைத்திருக்கும் பல தொழிலதிபர்களையும் சேர்த்து பிசினஸில் வெற்றி பெற்ற பலரது வாழ்க்கையையும் (கூர்ந்து) ஒப்பிட்டு பார்த்தால் அவற்றில் ஒரு ஒற்றுமை தெரியும்... நிச்சயமாக அவர்கள் அதிர்ஷ்டத்தால் முன்னேறியவர்களாக இருக்கமாட்டார்கள்.
சமீபத்தில் மேலாண்மைத் துறையை சார்ந்த மாணவர்களுக்கான ஒரு கருத்தரங்கில் கலந்துக் கொண்டபோது அங்கு விரிவாக விவாதிக்கப்பட்டதை,மிக சுருக்கமாக தருகிறேன்...
1.
நீங்கள் விரும்புகிற தொழில் என ஒன்று இருக்கும்,ஆனால் நடைமுறை வாழ்க்கைக்கு வரும்போது அந்த குறிப்பிட்ட தொழில்,மக்களுக்கு எந்தளவுக்கு தேவையாய் இருக்கிறது மற்றும் பொருளாதார அடிப்படையில் அந்த தொழில் சிறந்து இருக்கிறதா என கள ஆய்வு செய்வது அவசியம்.அதை ஆராயும் போதே,உங்களுக்கு மற்ற தொழில்கள் பற்றிய விளக்கங்களும் கிடைத்துவிடும்,கிடைக்கவில்லையென்றால் அவற்றையும் அலசி ஆராயுங்கள். அதனைப் பற்றிய முழு விபரங்களையும் சேகரியுங்கள்.
குறைந்த பட்சம்,3 ஆண்டுகளுக்காவது உங்களது தொலைநோக்குப் பார்வை இருப்பது நல்லது.
இதுதான் நாம் துவங்கப் போகும் தொழில் என்பதில் உறுதி கொள்வதுதான் முதல் படி...
2.
அனுபவத்தை விட சிறந்த ஆசிரியர் வேறேதும் இல்லை...ஆகவே,நீங்கள் வடிவமைத்துக் கொண்ட தொழில் பற்றிய விபரங்களுடன்,உங்களது சொந்த ஐடியாக்களையும் கலந்து,நீங்கள் உலகில் இல்லாத ஒன்றை செய்ய போகிறீர்கள் என மற்றவர்கள் எண்ணும் அளவுக்கு ஒரு தோற்றத்தை கொண்டு வாருங்கள்.
ஏற்கனவே அதே தொழிலில் இருக்கும் அனுபவசாலிகளிடமும்,துறை சார்ந்த வல்லுனர்களிடமும்- கௌரவம் பார்க்காமல்,எவ்வித ஈகோவுமின்றி விளக்கம் கேளுங்கள்.அவர்களிடம் விவாதம் செய்யாதீர்கள்.தொழில் கைக்கூடும் வரை நீங்கள் உங்களை அப்பாவியாக (சிலசமயம் முட்டாளாக) காட்டிக் கொள்ள தயங்கவேண்டாம்.
நீங்கள் தெளிவு பெற்ற அனைத்தையும் பட்டியலிட்டுக் கொள்ளுங்கள்.
இனி அந்த பாதையில் நடக்கவேண்டியதுதான்...
3.
அடுத்து உங்களுக்குக்கான வாய்ப்புகள் எங்கேல்லாம் இருக்கிறதென தேடுங்கள்.அங்கெல்லாம் உங்களுக்கு உதவ மற்றும் தகவல் தருவதற்கு ஆட்களை உருவாக்கிக் கொள்ளுங்கள்.உங்களுக்கு உதவுவதால் அவர்களுக்கு என்ன லாபம் என்பதையும் சூசகமாகவோ நேரடியாகவோ தெரிவியுங்கள்.லாபம் இல்லாமல் யாரும் நூறு சதவீதம் உதவமாட்டார்கள்.
பெரும்பாலும்,ஏற்கனவே இருக்கும் வாய்ப்புகளை தேடி கூட்டத்தோடு போட்டி போடாமல்- உங்களுக்கான வாய்ப்புகளை நீங்களே வடிவமைத்துக் கொள்ளுங்கள்.
முக்கியமாய்,அதில் பிற்காலத்தில் வரக்கூடிய அபாயங்களையும் யூகித்துக் கொள்ளுங்கள்.
4.
திட்டங்கள் போட்டாயிற்று...அதை நிறைவேற்ற பணம்?
நீங்கள் எத்தனை பெரிய பணக்காரராக இருந்தாலும்,முழுக்க முழுக்க உங்களது பணத்தை மட்டுமே முதலீடாக கொள்வது அத்தனை உசிதமான செயல் அல்ல..உங்களை புரிந்துக் கொள்ளும் உங்களுக்கு பிரச்சனைகள் தராதவர்களை கூட்டு சேர்த்துக் கொள்வது நல்லது.
தனிப்பட்ட நபர்களின் முதலீடு / வங்கிக் கடன் / தனிநபர் கடன் / உங்கள் தரப்பு ன - முதலீடுக்கான ஆதாரங்களை தீர்க்கமாய் தயார் செய்துக் கொள்ளுங்கள்.
முதல்ல ஆரம்பிக்கலாம்,அப்பறம் பார்த்துக்கலாம் என அலட்சியமாக விட்டால்,அதுவே முக்கியமான நேரத்தில் துயரமாகி விடும்.
5.
தொழில் என வந்துவிட்டால் போட்டி இல்லாமல் இருக்குமா?
உங்கள் வாடிக்கையாளர்கள் யார் என்பதை அடையாளம் கண்டுக் கொள்வது போல்,உங்களது போட்டியாளர்கள் யார் என்பதையும் அறிந்துக் கொள்வது அவசியம்.
நல்ல தயாரிப்பு மற்றும் விநியோகத்தில் கவனம் செலுத்துவதை போல்,சலுகைகள்,விலைநிர்ணயம்,நேரடி தொடர்புகள் ஆகியவற்றிலும் கண்காணிப்பு அவசியம்.உங்கள் தொழில் எப்போதும் பேசப்பட என்ன செய்யலாம் என்பதை முன்கூட்டியே தீர்மானிக்கவேண்டும்.அதேசமயம் மற்றவர்களிடமிருந்து மாறுபாடாய் இருக்கவும் வேண்டும்.

No comments:

Post a Comment

messages & practical website