V

SSLC MARK 2012- CHENNAI GRAPHIX

mba.basheer

Welcome to my website. join with us

quick search

Monday, March 3, 2014

ரூபாய் நோட்டில் மாற்றம்...!

ரூபாய் நோட்டில் மாற்றம்...!



கடந்த 2005ம் ஆண்டுக்கு முந்தைய ரூபாய் நோட்டுக்களை திரும்பப்பெற இந்திய ரிசர்வ் வங்கி முடிவு செய்து தற்போது புழக்கத்தில் உள்ள இந்த நோட்டுக்கள் ஏப்ரல் 1ம் தேதி முதல் ஜூன் இறுதி வரை வங்கிகளுக்கு சென்று மாற்றிக் கொள்ளலாம்என்று அறிவித்த நிலையில்,

2005ஆம் ஆண்டுக்கு முந்தைய ரூபாய் நோட்டை அடுத்தாண்டு ஜன.1 வரை மாற்றிக்கொள்ளலாம் என கால அவகாசம் அளித்து ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது..

நமது இந்திய ரூபாய் நோட்டுக்கள் அவசரத்திற்கும், ஆடம்பரத்திற்கும் உதவும் பேப்பராக பயன்படுத்தப்படுகின்றன.

பெரும் பாலும் படித்தவர்கள் மட்டுமல்ல, படிக்காதவர்களும் நம் ரூபாய் நோட்டுக்களை மதிப்பதே இல்லை.

அவரசத் தேவைக்கு அதில் தொலைபேசி எண்களை எழுதுவதற்கும், குறிப்புகளை எழுதுவதற்கும், ஒரு கட்டில் எத்தனை நோட்டுகள் இருக்கின்றன என்று எழுதுவதற்கும் ரூபாய் நோட்டுக்களைப் பயன்படுத்துகின்றனர்.

அதோடு மட்டுமல்லாமல் அரசியல் தலைவர்களுக்கும் கோயில்களில் கடவுளுக்கும், ரூபாய் நோட்டு மாலைகளை அணிவிக்கின்றனர். ரூபாய் நோட்டுக்கான மதிப்பு என்ன என்பதை அறிந்திருந்தும் அதனை கண்டு கொள்வதில்லை.

இதில் மிகவும் மோசமானது என்னவெனில் சிலர் தங்களுடைய பெயர்களை அதில் எழுதுகின்றனர்.

இதையடுத்து ரூபாய் நோட்டுகளில் எழுதினால் அந்த நோட்டு செல்லாது என்று ஏற்கெனவே ரிசர்வ் வங்கி அறிவித்திருந்த போதிலும் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் ரூபாய் நோட்டுகளில் எழுதுகிறவர்கள் எழுதிக் கொண்டு தான் இருக்கிறார்கள்.

இது ஒருபுறம் இருந்தாலும், வெளிநாடுகளின் சதியாலும், தீவிரவாதிகளாலும் இந்தியாவில் கள்ள நோட்டுகள் புழக்கத்தில் விடப்படுகின்றன. கள்ள நோட்டு புழக்கத்தால் இந்தியப் பொருளாதாரம் சீர்குலையும். பல்வேறு தீய சக்திகளால் நம் நாடு பல வழிகளிலும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்படுகின்றது.

 இவ்வாறான நிலையில்அண்மையில் ரிசர்வ் வங்க வெளியிட்ட ஒரு அறிக்கையில் “2005ம் ஆண்டுக்கு முன்பு வெளியிடப்பட்ட ரூபாய் நோட்டுக்களின் பின்புறம், அந்த நோட்டு எந்த ஆண்டு அச்சிடப்பட்டது என்ற விவரம் இருக்காது.

இதை வைத்து பொதுமக்கள் எளிதாக அதை அடையாளம் கண்டு கொள்ளலாம். இவ்வாறு ஆண்டு குறிப்பிடப்படாத ரூபாய் நோட்டுக்கள் வைத்திருக்கும் பொதுமக்கள், ஏப்ரல் 1ம் தேதி முதல் ஜூன் இறுதி வரை வங்கிகளுக்கு சென்று மாற்றிக்கொள்ளலாம். இந்த காலகட்டத்தில் நோட்டுக்களை மாற்ற எந்த ஆவணமும் தேவையில்லை.

வங்கி வாடிக்கையாளர்களும், வாடிக்கையாளர் அல்லாதவர்களும் இவ்வாறு ரூபாய் நோட்டுக்களை மாற்றிக்கொள்ளலாம்.

வரும் ஜூலை 1ம் தேதிக்கு பிறகு 10க்கும் அதிகமான ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்களை மாற்றுபவர்கள், தங்களது அடை யாள சான்று, இருப்பிடச்சான்றுடன், உரிய ஆவணங்கள் சமர்ப்பித்து மாற்றிக்கொள்ளலாம். இந்த அறிவிப்பு குறித்து மக்கள் பீதியடைய வேண்டாம்.

ரூபாய் நோட்டுக்களை மாற்றுவதற்கு அவர்கள் ஒத்துழைப்பு தரவேண்டும் என்று அறிவித்த நிலையில் தற்போது இத்தகைய முந்தைய ரூபாய் நோட்டை அடுத்தாண்டு ஜன.1 வரை மாற்றிக்கொள்ளலாம் என கால அவகாசம் அளித்து, ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

messages & practical website