V

SSLC MARK 2012- CHENNAI GRAPHIX

mba.basheer

Welcome to my website. join with us

quick search

Thursday, March 13, 2014

வெற்றியாளர்களின் 7 ரகசியங்கள்..

.


வெற்றியாளர் என்பவர் யார்?
நிறைய பணம் வைத்திருப்பவரா?
ஊரை அடைத்து நிலம் வாங்கி ஏகபோகத்தில் திளைப்பவரா?
அல்லது,உயர்பதவியில் அமர்ந்து உலகத்தை சொந்தம் கொண்டாடுபவரா?...இவர்கள் இல்லை;
நிறைவான மனதுடன் காலையில் எழுந்து, குறைகள் ஏதுமின்றி
நிம்மதியாக இரவு உறங்குபவரே உண்மையான வெற்றியாளர்...
இவர்கள் இந்த வாழ்க்கையை பெறுவதற்கு காரணமான 7 ரகசியங்கள் எவை என்பதை சமூகவியலாளர்கள் கீழ்க்கண்டவாறு கூறுகின்றனர்...இவற்றை எடுத்த எடுப்பில் ஏற்றுகொள்ள தயக்கம் இருந்தாலும், இவைகளே நடைமுறை...
கடந்த காலத்தை தூய்மையாக வைத்து கொள்வது, நிகழ்காலத்தை சந்தோஷமாக வைத்திருக்கும்...
தற்போதைக்கு பிரச்சனை தீர்ந்தால் போதும் என்று அந்த நேரத்திற்கு என்ன பேச தோன்றுகிறதோ, செய்ய தோன்றுகிறதோ, சமாளிக்க முடிகிறதோ, அதை ஆராயாமல் செய்துவிட்டு, அதன் விளைவுகளை பிறகொரு நாள் சந்தித்து, வாழ்வில் வருத்தப்படுகிறவர்களே அதிகம்..
மற்றவர்களின் விமர்சனம் நம்மை தடம் புரளாமல் நாம் பார்த்துக் கொள்ள வேண்டும்...
ஒவ்வொருவரை பற்றியும் அவர்களது ஒவ்வொரு செயல்களை குறித்தும் எப்போதுமே மற்றவர்களிடமிருந்து விமர்சனங்கள் கிடைக்கும்...ஆனால் நம்மை பற்றியோ, நாம் செய்த செயல்கள் பற்றியோ, அதன் பலன்களை பற்றியோ - நமக்கு மட்டுமே நன்றாக தெரியும்... மற்றவர்கள் நம்மை பற்றி எண்ணுவதை நாம் தடுக்கமுடியாது, ஆனால் நாம் அதற்கு முக்கியத்துவம் தருவதை நம்மால் தடுக்கமுடியும்..
காலம் மட்டுமே சிறந்த மருந்து..
நாம் செய்த தவறுகள் எதுவாயினும், அதை பற்றி அதிகமாய் சிந்தித்து, அதை சரி செய்கிறேன் பேர்வழி என்று நமது ஆற்றலை வீணாக்க தேவையில்லை...நமக்கான வேலையை நாம் தொடர்ந்து செய்துவந்தாலே போதும், காலம் தானாகவே எல்லாவற்றையும் சரி செய்யும்.


நம்மை மற்றவர்களோடு ஒப்பிடுவதை தவிர்க்க வேண்டும்...
இங்கே ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பயணம், பாதை, இலக்கு
ஆகியன் உள்ளன..அவர்களது வெற்றியை பார்த்து நாம் பின்தொடர்வது அல்லது ஒப்பிட்டு கொள்வது நமக்கு போராட்டங்களையே அதிகமாக்கும்..
அவர்களை மதிப்பிட்டு கொண்டே இருந்தால் அவர்கள் மீது நம்மால் அன்பு செலுத்த முடியாது ; அவர்களாலும் நம்மீது அன்பு வைக்க முடியாது.
பிரச்சனைகளை பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்கவேண்டாம்...
உணர்ச்சிவசப்பட்ட நேரத்தில் எடுக்கும் முடிவுகள், தவறான விளைவுகளையே தரும்.. பிரச்சனைகளை பற்றியே சிந்திப்பது நமக்கான நல்ல முடிவுகளை தராது..
உங்களால் முடியாத எதுவுமே மற்றவர்களாலும் முடியாது என்று திடமாக எண்ணுங்கள்...நாம் எதிர்பாராத நேரத்தில் நமக்கான நல்ல பதில்கள் கிடைக்கும்.   

நமது மகிழ்ச்சியான தருணங்கள் நமது கையில் மட்டுமே...
யாரும் உங்களது வாழ்வை மாற்றிட இயலாது, நீங்கள் அனுமதித்தால் மட்டுமே உங்களது வாழ்வு மாறும்...ஆக, தீது நன்றும் பிறர்தர வாரா... மகிழ்ச்சி மட்டுமே உங்களது நிலையான தேல என்றால், அது மட்டுமே நம்மை நாடி வந்துக் கொண்டேயிருக்கும்.
புன்னகை புரியுங்கள்...
உலகத்தில் உள்ள பிரச்சனைகள் எல்லாமே உங்களுக்காக உருவாக்கப்பட வில்லை.. நமக்கான குறுகிய வாழ்வில் புன்னகைப்பது மட்டுமே நமது ஆரோக்கிய வாழ்வை நீட்டிக்கும்...
      
             (Thanks to : http://www.tamilsindru.blogspot.in)

No comments:

Post a Comment

messages & practical website