V

SSLC MARK 2012- CHENNAI GRAPHIX

mba.basheer

Welcome to my website. join with us

quick search

Saturday, March 22, 2014

SUGER COMPLIANT AVOID THE 10 FRUITS LIST

சர்க்கரை நோய் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய 10 பழங்கள்


சீரான உணவுத் திட்டத்தை பின்பற்றும் போது உடலில் பல அற்புதங்களும் ஆரோக்கியமும் ஏற்படுகின்றது.
பழங்களை உணவு திட்டத்தில் சேர்க்கும் போது, அது நமக்கு தேவையான ஊட்டச்சத்துக்களாகிய முக்கிய வைட்டமின்களாகவும், கார்போஹைட்ரேட்டுகளாகவும் மற்றும் கனிமங்களாகவும் உடலுக்கு உறுதியைத் தருகின்றன. சர்க்கரை நோய் உள்ளவர்கள் தாங்கள் தேர்ந்தெடுத்து உட்கொள்ளும் பழங்களில் சிறிது கவனத்துடன் இருத்தல் நலம். ஏனெனில் பழங்கள் உடலுக்கு நலமாயினும் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு அது சில சமயம் எதிர்மறையாகி விடுகின்றது.


பழங்கள் நல்ல ஊட்டச்சத்து மற்றும் சக்தி தருவனவாகும். இவற்றில் நல்லவை தீயவை என்று பிரிக்க முடியாது. ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் ஊட்டச்சத்து அளவில் தான் ஒவ்வொரு பழமும் வேறுடுகின்றது. இது ஒவ்வொருவரின் உடல் தேவைகேற்ப பலனை தருகின்றது. சர்க்கரை நோயாளிகளை பொறுத்தவரை, ஒவ்வொரு பழமும் அவர்களின் இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவை மாற்றும் திறன் கொண்டவை. பாதுகாப்பின் அடிப்படையில் ஒரு சில பழங்களை உண்ணாமல் இருப்பது நல்லது ஏனெனில் இரத்தத்தின் சர்க்கரை அளவை அது மோசமான அளவிற்கு உயர்த்தக்கூடும்.

பெரும்பான்மையான பழங்கள் அவைகளின் சர்க்கரை அளவின் படி தான் பிரிக்கப்பட்டுள்ளது. சர்க்கரை நோய் உள்ளவர்கள் பழத்தை உண்ணும் முன் அதன் GI குறியீட்டு எண்ணை (Glycemic Index) கண்டறிந்த பின் உண்ண வேண்டும். GI குறியீடு என்பது கிளைசீமிக் குறியீட்டைக் குறிக்கும். சர்க்கரை நோய் உள்ளவர்கள் 55 அல்லது அதற்கும் குறைவான அளவுள்ள குறியீட்டை கொண்ட பழங்களை உண்பது நல்லது. ஸ்ட்ராபெர்ரி, பேரிக்காய், ஆப்பிள் ஆகியவைகளில் கார்போஹைட்ரேட் அளவு குறைவாக உள்ளதால் சர்க்கரை நோய் உள்ளவர்கள் இந்த பழங்களை தாராளமாக உட்கொள்ளலாம்.

மாம்பழம்

பழங்களின் ராஜா என்று கூறப்படும் மாம்பழம் உலகிலேயே அதிக சுவை மிகுந்த ஒரு பழமாக விளங்குகிறது. ஆனால் அப்பழத்தில் மிகுந்த சர்க்கரை இருப்பதால் இப்பழத்தை தவிர்ப்பது நல்லது. தொடர்ந்து இதை உட்கொண்டால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாகிவிடும்.

சப்போட்டா

இந்த பழத்தில் GI குறியீட்டு எண் 55 க்கு மேலுள்ளதால் இது சாப்பிடுவதற்கு உகந்தது அல்ல. இப்பழத்தில் சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரேட் அதிக அளவில் உள்ளது.

திராட்சை

நார்ச்சத்து, வைட்டமின் மற்றும் பல ஊட்டச்சத்துகள் நிறைந்த திராட்சையில் அதிக அளவு சர்க்கரையும் உள்ளது. இதை சர்க்கரை நோய் உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது. 3 அவுன்ஸ் கொண்ட திராட்சையில் 15 கிராம் கார்போஹைட்ரேட் உள்ளது.

அன்னாசி

இப்பழத்தில் அதிக அளவு கிளைசீமிக் குறியீடு இருப்பதால் இப்பழத்தை அறவே தவிர்க்க வேண்டும். ஒரு சிறிய கோப்பை அன்னாசிப் பழத்தில் 20 கிராம் அல்லது அதற்கு மேற்பட்ட அளவு கார்போஹைட்ரேட் உள்ளது.

சீத்தாப்பழம்

வைட்டமின் சி, கால்சியம், இரும்பு மற்றும் நார்ச்சத்துக்கள் நிரம்பிய இப்பழத்தில் சர்க்கரை அதிகமாக இருப்பதால் இதையும் தவிர்க்க வேண்டும். 100 கிராம் சீத்தாப்பழத்தில் 23 கிராம் அல்லது அதற்கும் மேற்பட்ட அளவு கார்போஹைட்ரேட் உள்ளது.

ஆப்ரிக்காட்

இப்பழத்தின் கிளைசீமிக் குறியீட்டு அளவு 57 ஆக உள்ளது. சர்க்கரை நோய் உள்ளவர்கள் இந்த பழத்தையும் தவிர்க்க வேண்டும். அரை கப் ஆப்ரிக்காட் பழத்தில் 8 கிராம் கார்போஹைட்ரேட் உள்ளது.

வாழைப்பழம்

அரை கப் வாழைப்பழத்தில் 15 கிராம் கார்போஹைட்ரேட் உள்ளது. அதன் GI 46 முதல் 70 வரை உள்ளது. முழுவதும் பழுத்த வாழைப்பழங்களை சர்க்கரை நோயாளிகள் தவிர்க்க வேண்டும்.

தர்பூசணி

குறைந்த நார்ச்சத்து மற்றும் குறைந்த கலோரி உடைய தர்பூசணி பழத்தில் சர்க்கரை மட்டும் 72 GI அளவிற்கு உள்ளது. இப்பழத்தில் வைட்டமின் ஏ மற்றும் சி ஆகியவையும் அதிகமாக உள்ளன. அரை கப் தர்பூசணியில் 5 கிராம் கார்போஹைட்ரேட் உள்ளது.

பப்பாளி

59 GI உடைய இப்பழத்தில் கார்போஹைட்ரேட் மற்றும் கலோரிகள் அதிகம் உள்ளது. இதை சர்க்கரை நோயாளிகள் தங்கள் சர்க்கரை அளவு ஏறாத வன்னம் உண்ணுதல் உகந்தது.

கொடிமுந்திரி

சர்க்கரை நோயாளிகள் இப்பழத்தை அறவே தவிர்க்க வேண்டும். 103 GI மதிப்பு கொண்ட இப்பழத்தில் கால் பங்கு அளவிலேயே 24 கிராம் கார்போஹைட்ரேட் உள்ளது.


நன்றி:http://www.seithy.com

USE ATM CARD??? NO LOSS YOUR MONEY :-USEFUL TIPS

ஏ.டி.எம். கார்ட் பயன்படுத்தறீங்களா? உங்கள் பணம் பறிபோகாமல் இருக்க பயனுள்ள குறிப்புகள்..!

ஒரே நிமிடத்தில் பண பரிவர்த்தனை நடைபெறும் ஓர் அற்புதமான நுட்பத்தைக் கொண்டுள்ளது. ஏ.டி.எம். மெஷின்.

ATM CARD இருந்தால் எங்கு வேண்டுமானாலும் செல்லாம்.  பணம் தேவைப்படும்பொழுது அங்கிருக்கும் ஏதாவது ஒரு அங்கீகரிக்கப்பட்ட ATM சென்டரில் சென்று வங்கிக்க கணக்கில் உள்ளப் பணத்தைப் பெற்றுக்கொள்ளலாம்.

இத்தகைய வசதிகொண்ட இதில் சில தீமைகளும் இருக்கத்தான் செய்கின்றன. எச்சரிக்கையுடன் ATM CARD - ஐ பயன்படுத்தவில்லை என்றால் உங்களது பணத்தை அபகரித்துவிடுவார்கள்.
atm-useful-tips

புதியதாக நீங்கள் ATM CARD பயன்படுத்துபவர்கள் என்றால் உங்கள் நம்பிக்கையான குடும்ப நபர் ஒருவரை உடன் அழைத்துச் சென்று  பணம் எடுக்கச் சொல்லலாம். பாதுகாப்பிற்கு பாதுகாப்பும் கிடைக்கும். உங்கள் ATM குறித்த தகவல் மூன்றாம் நபருக்கும் தெரியாமல் இருக்கும்.

ATM சென்டரில் உள்ள காப்பாளரை உதவிக்கு அழைத்துக்கொள்ளலாம். மூன்றாம் நபர் எவரையேனும் நம்பி உங்களது பின் நம்பரையோ, பணத்தை எடுப்பதற்கோ உதவுமாறு கேட்டால், நிச்சயம் பாதுகாப்பில்லாம் போகும்.

இப்படிதான் நண்பர் ஒரு புதியதாக ATM CARD வாங்கியவுடன் தன் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை முதல் முறை எடுக்கு ஏ.எடி.எம் சென்றார். அங்குள்ள ஒரு இளைஞனை உதவிக்கு அழைத்து, பின் நம்பரையும் குறிப்பிட்டு உதவ சொல்லியிருக்கிறார்.

இளைஞனும் இரண்டு மூன்று முறை ATM போடுவதைப் போன்று போட்டு எடுத்துவிட்டு, உங்கள் ATM - வேலை செய்யவில்லை. பணம் இருக்கிறதா என தெரியவில்லை என சொல்லிவிட்டு, அவரை வெளியே அனுப்பிவிட்டான்.

நண்பரும் தனது சம்பளத்தை வங்கி கணக்கில் நிறுவனம் சேர்க்கவில்லை என நினைத்து வெளியேறிவிட்டார்.

உள்ளே இருந்த இளைஞன் அவரது ATM செருகுவது போல் பாவ்லா செய்துவிட்டு, அவரது பின் நம்பரை உள்ளிட்டு அவருடைய மொத்த சம்பளத்தையும் எடுத்துவிட்டான். பதினைந்தாயிரம் சம்பளத்தையும் எடுத்துக்கொண்டுவிட்டான் அந்த இளைஞர்.

நண்பர் பஸ்டாண்டிற்கு நடந்து கொண்டிருக்கும்போது, அவருடைய மொபைலுக்கு மெசேஜ் வர, அதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துவிட்டார். பதினைந்தாயிரம் பணம் வித்டிராவல் ஆகிவிட்டதாக அந்த SMS - ல் இருந்தது.

உடனே திரும்பி அந்த ATM -க்கு ஓடிப் பார்த்தால் அந்த இளைஞன் சிட்டாக பறந்திருந்தான். ஐயோ பணம் போச்சே என்ற ஏக்கத்துடன் அவர் வீடு திரும்பிவிட்டார். பிறகு வங்கிக்கு புகார் அளித்தும் கூட அந்த பணத்தை திரும்ப பெற முடியவில்லை. காரணம் அவரது கணக்கிலிருந்து, அவருடைய ATM பயன்படுத்தி பணம் எடுக்கப்பட்டிருந்தது உறுதியாகி இருந்தது.

நண்பரின் பணத்திற்கு வங்கியும் பொறுப்பேற்கவில்லை. உங்களுடைய பணத்தை இதுபோல மூன்றாம் நண்பர்களிடம் ATM தகவல்களைச் சொல்லி தயவு செய்து ஏமாற வேண்டாம்.

ஜவுளி கடைகள், பெட்ரோல் பங்குகள், மற்றும் சூப்பர் மார்கெட்கள் என இப்பொழுது எங்கு பார்த்தாலும் ATM பயன்படுத்தி பில் செலுத்தும் வசதி வந்துவிட்டது.

இத்தகைய கடைகளில் சில ஏமாற்றுக் கடைகளும், நிறுவனங்களும் உள்ளது. இவர்கள் உங்களிடம் கட்டணத்தைப்பெற ஒன்றுக்கும் மேற்பட்ட மெஷின்களில் உரைத்துவிட்டு, உங்களது பொருட்களுக்கான பில்லை எடுத்துக்கொள்வார்கள்.

இரண்டாவதாக ஏ.எடி.எம் கார்த்தை உறைத்த மெஷின் போலியானதாக இருக்கும். இந்த மிஷின் என்ன செய்யுமென்றால், உங்களது ஏ.டி.எம். தகவல்களை அப்படியே முழுமையாக சேமித்துக்கொள்ளும். அதிக வருமானம் உள்ளவர்களாக இருந்தால், உங்களை அறியாமலேயே உங்கள் வங்கிக் கணக்கில் பணம் குறைந்திருப்பதை நீங்கள் உணர நீண்ட காலமாகும்.

நீங்கள் உஷாராகி முடிப்பதற்குள், ஒரு கணிசமான தொகை, அவர்களால் உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து களவாடப்பட்டிருக்கும். எனவே, எந்த இடத்தில் ATM பயன்படுத்தினாலும் உஷாராக இருந்து, ஒரு முறைதான் அது பயன்படுத்தப்படுகிறதா? என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள். அப்பொழுதுதான் உங்களது பணம் பாதுகாப்பாக, உங்கள் வங்கிக் கணக்கிலேயே இருக்கும்.

அதேபோல் நீங்கள் எந்த வங்கியில் கணக்கு வைத்திருக்கிறீர்களோ, அந்த வங்கியின் ATM சென்டரிலேயே பணம் எடுப்பதை வழக்கமாக்கிக்கொள்ளுங்கள். ஒருவேளை பணம் வராமல், உங்கள் கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டுவிட்டது, என்று தவறான தகவல் வந்தாலோ, பணம் வெளியா வராமல் இருந்தாலோ, உடனடியாக வங்கியில் புகார் செய்ய இந்த முறைப் பயன்படும்.

Thursday, March 13, 2014

உங்கள் தொழில் வெற்றி பெற

உங்கள் தொழில் வெற்றி பெற

இது,ஏதேனும் தொழில் துவங்கலாம் என எண்ணுவோருக்கும்,ஆரம்பநிலை பட்டதாரிகளுக்கும்,முறையாக தொழில் நடத்தாமல் சறுக்கல் கண்டு குழம்புவோருக்குமான பதிவு...
கோடிக்கணக்கில் கறுப்பு பணத்தை வெளிநாடுகளில் பதுக்கி வைத்திருக்கும் பல தொழிலதிபர்களையும் சேர்த்து பிசினஸில் வெற்றி பெற்ற பலரது வாழ்க்கையையும் (கூர்ந்து) ஒப்பிட்டு பார்த்தால் அவற்றில் ஒரு ஒற்றுமை தெரியும்... நிச்சயமாக அவர்கள் அதிர்ஷ்டத்தால் முன்னேறியவர்களாக இருக்கமாட்டார்கள்.
சமீபத்தில் மேலாண்மைத் துறையை சார்ந்த மாணவர்களுக்கான ஒரு கருத்தரங்கில் கலந்துக் கொண்டபோது அங்கு விரிவாக விவாதிக்கப்பட்டதை,மிக சுருக்கமாக தருகிறேன்...
1.
நீங்கள் விரும்புகிற தொழில் என ஒன்று இருக்கும்,ஆனால் நடைமுறை வாழ்க்கைக்கு வரும்போது அந்த குறிப்பிட்ட தொழில்,மக்களுக்கு எந்தளவுக்கு தேவையாய் இருக்கிறது மற்றும் பொருளாதார அடிப்படையில் அந்த தொழில் சிறந்து இருக்கிறதா என கள ஆய்வு செய்வது அவசியம்.அதை ஆராயும் போதே,உங்களுக்கு மற்ற தொழில்கள் பற்றிய விளக்கங்களும் கிடைத்துவிடும்,கிடைக்கவில்லையென்றால் அவற்றையும் அலசி ஆராயுங்கள். அதனைப் பற்றிய முழு விபரங்களையும் சேகரியுங்கள்.
குறைந்த பட்சம்,3 ஆண்டுகளுக்காவது உங்களது தொலைநோக்குப் பார்வை இருப்பது நல்லது.
இதுதான் நாம் துவங்கப் போகும் தொழில் என்பதில் உறுதி கொள்வதுதான் முதல் படி...
2.
அனுபவத்தை விட சிறந்த ஆசிரியர் வேறேதும் இல்லை...ஆகவே,நீங்கள் வடிவமைத்துக் கொண்ட தொழில் பற்றிய விபரங்களுடன்,உங்களது சொந்த ஐடியாக்களையும் கலந்து,நீங்கள் உலகில் இல்லாத ஒன்றை செய்ய போகிறீர்கள் என மற்றவர்கள் எண்ணும் அளவுக்கு ஒரு தோற்றத்தை கொண்டு வாருங்கள்.
ஏற்கனவே அதே தொழிலில் இருக்கும் அனுபவசாலிகளிடமும்,துறை சார்ந்த வல்லுனர்களிடமும்- கௌரவம் பார்க்காமல்,எவ்வித ஈகோவுமின்றி விளக்கம் கேளுங்கள்.அவர்களிடம் விவாதம் செய்யாதீர்கள்.தொழில் கைக்கூடும் வரை நீங்கள் உங்களை அப்பாவியாக (சிலசமயம் முட்டாளாக) காட்டிக் கொள்ள தயங்கவேண்டாம்.
நீங்கள் தெளிவு பெற்ற அனைத்தையும் பட்டியலிட்டுக் கொள்ளுங்கள்.
இனி அந்த பாதையில் நடக்கவேண்டியதுதான்...
3.
அடுத்து உங்களுக்குக்கான வாய்ப்புகள் எங்கேல்லாம் இருக்கிறதென தேடுங்கள்.அங்கெல்லாம் உங்களுக்கு உதவ மற்றும் தகவல் தருவதற்கு ஆட்களை உருவாக்கிக் கொள்ளுங்கள்.உங்களுக்கு உதவுவதால் அவர்களுக்கு என்ன லாபம் என்பதையும் சூசகமாகவோ நேரடியாகவோ தெரிவியுங்கள்.லாபம் இல்லாமல் யாரும் நூறு சதவீதம் உதவமாட்டார்கள்.
பெரும்பாலும்,ஏற்கனவே இருக்கும் வாய்ப்புகளை தேடி கூட்டத்தோடு போட்டி போடாமல்- உங்களுக்கான வாய்ப்புகளை நீங்களே வடிவமைத்துக் கொள்ளுங்கள்.
முக்கியமாய்,அதில் பிற்காலத்தில் வரக்கூடிய அபாயங்களையும் யூகித்துக் கொள்ளுங்கள்.
4.
திட்டங்கள் போட்டாயிற்று...அதை நிறைவேற்ற பணம்?
நீங்கள் எத்தனை பெரிய பணக்காரராக இருந்தாலும்,முழுக்க முழுக்க உங்களது பணத்தை மட்டுமே முதலீடாக கொள்வது அத்தனை உசிதமான செயல் அல்ல..உங்களை புரிந்துக் கொள்ளும் உங்களுக்கு பிரச்சனைகள் தராதவர்களை கூட்டு சேர்த்துக் கொள்வது நல்லது.
தனிப்பட்ட நபர்களின் முதலீடு / வங்கிக் கடன் / தனிநபர் கடன் / உங்கள் தரப்பு ன - முதலீடுக்கான ஆதாரங்களை தீர்க்கமாய் தயார் செய்துக் கொள்ளுங்கள்.
முதல்ல ஆரம்பிக்கலாம்,அப்பறம் பார்த்துக்கலாம் என அலட்சியமாக விட்டால்,அதுவே முக்கியமான நேரத்தில் துயரமாகி விடும்.
5.
தொழில் என வந்துவிட்டால் போட்டி இல்லாமல் இருக்குமா?
உங்கள் வாடிக்கையாளர்கள் யார் என்பதை அடையாளம் கண்டுக் கொள்வது போல்,உங்களது போட்டியாளர்கள் யார் என்பதையும் அறிந்துக் கொள்வது அவசியம்.
நல்ல தயாரிப்பு மற்றும் விநியோகத்தில் கவனம் செலுத்துவதை போல்,சலுகைகள்,விலைநிர்ணயம்,நேரடி தொடர்புகள் ஆகியவற்றிலும் கண்காணிப்பு அவசியம்.உங்கள் தொழில் எப்போதும் பேசப்பட என்ன செய்யலாம் என்பதை முன்கூட்டியே தீர்மானிக்கவேண்டும்.அதேசமயம் மற்றவர்களிடமிருந்து மாறுபாடாய் இருக்கவும் வேண்டும்.

வெற்றியாளர்களின் 7 ரகசியங்கள்..

.


வெற்றியாளர் என்பவர் யார்?
நிறைய பணம் வைத்திருப்பவரா?
ஊரை அடைத்து நிலம் வாங்கி ஏகபோகத்தில் திளைப்பவரா?
அல்லது,உயர்பதவியில் அமர்ந்து உலகத்தை சொந்தம் கொண்டாடுபவரா?...இவர்கள் இல்லை;
நிறைவான மனதுடன் காலையில் எழுந்து, குறைகள் ஏதுமின்றி
நிம்மதியாக இரவு உறங்குபவரே உண்மையான வெற்றியாளர்...
இவர்கள் இந்த வாழ்க்கையை பெறுவதற்கு காரணமான 7 ரகசியங்கள் எவை என்பதை சமூகவியலாளர்கள் கீழ்க்கண்டவாறு கூறுகின்றனர்...இவற்றை எடுத்த எடுப்பில் ஏற்றுகொள்ள தயக்கம் இருந்தாலும், இவைகளே நடைமுறை...
கடந்த காலத்தை தூய்மையாக வைத்து கொள்வது, நிகழ்காலத்தை சந்தோஷமாக வைத்திருக்கும்...
தற்போதைக்கு பிரச்சனை தீர்ந்தால் போதும் என்று அந்த நேரத்திற்கு என்ன பேச தோன்றுகிறதோ, செய்ய தோன்றுகிறதோ, சமாளிக்க முடிகிறதோ, அதை ஆராயாமல் செய்துவிட்டு, அதன் விளைவுகளை பிறகொரு நாள் சந்தித்து, வாழ்வில் வருத்தப்படுகிறவர்களே அதிகம்..
மற்றவர்களின் விமர்சனம் நம்மை தடம் புரளாமல் நாம் பார்த்துக் கொள்ள வேண்டும்...
ஒவ்வொருவரை பற்றியும் அவர்களது ஒவ்வொரு செயல்களை குறித்தும் எப்போதுமே மற்றவர்களிடமிருந்து விமர்சனங்கள் கிடைக்கும்...ஆனால் நம்மை பற்றியோ, நாம் செய்த செயல்கள் பற்றியோ, அதன் பலன்களை பற்றியோ - நமக்கு மட்டுமே நன்றாக தெரியும்... மற்றவர்கள் நம்மை பற்றி எண்ணுவதை நாம் தடுக்கமுடியாது, ஆனால் நாம் அதற்கு முக்கியத்துவம் தருவதை நம்மால் தடுக்கமுடியும்..
காலம் மட்டுமே சிறந்த மருந்து..
நாம் செய்த தவறுகள் எதுவாயினும், அதை பற்றி அதிகமாய் சிந்தித்து, அதை சரி செய்கிறேன் பேர்வழி என்று நமது ஆற்றலை வீணாக்க தேவையில்லை...நமக்கான வேலையை நாம் தொடர்ந்து செய்துவந்தாலே போதும், காலம் தானாகவே எல்லாவற்றையும் சரி செய்யும்.


நம்மை மற்றவர்களோடு ஒப்பிடுவதை தவிர்க்க வேண்டும்...
இங்கே ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பயணம், பாதை, இலக்கு
ஆகியன் உள்ளன..அவர்களது வெற்றியை பார்த்து நாம் பின்தொடர்வது அல்லது ஒப்பிட்டு கொள்வது நமக்கு போராட்டங்களையே அதிகமாக்கும்..
அவர்களை மதிப்பிட்டு கொண்டே இருந்தால் அவர்கள் மீது நம்மால் அன்பு செலுத்த முடியாது ; அவர்களாலும் நம்மீது அன்பு வைக்க முடியாது.
பிரச்சனைகளை பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்கவேண்டாம்...
உணர்ச்சிவசப்பட்ட நேரத்தில் எடுக்கும் முடிவுகள், தவறான விளைவுகளையே தரும்.. பிரச்சனைகளை பற்றியே சிந்திப்பது நமக்கான நல்ல முடிவுகளை தராது..
உங்களால் முடியாத எதுவுமே மற்றவர்களாலும் முடியாது என்று திடமாக எண்ணுங்கள்...நாம் எதிர்பாராத நேரத்தில் நமக்கான நல்ல பதில்கள் கிடைக்கும்.   

நமது மகிழ்ச்சியான தருணங்கள் நமது கையில் மட்டுமே...
யாரும் உங்களது வாழ்வை மாற்றிட இயலாது, நீங்கள் அனுமதித்தால் மட்டுமே உங்களது வாழ்வு மாறும்...ஆக, தீது நன்றும் பிறர்தர வாரா... மகிழ்ச்சி மட்டுமே உங்களது நிலையான தேல என்றால், அது மட்டுமே நம்மை நாடி வந்துக் கொண்டேயிருக்கும்.
புன்னகை புரியுங்கள்...
உலகத்தில் உள்ள பிரச்சனைகள் எல்லாமே உங்களுக்காக உருவாக்கப்பட வில்லை.. நமக்கான குறுகிய வாழ்வில் புன்னகைப்பது மட்டுமே நமது ஆரோக்கிய வாழ்வை நீட்டிக்கும்...
      
             (Thanks to : http://www.tamilsindru.blogspot.in)

Monday, March 3, 2014

நமது வலைதள அன்பர்களுக்கு ஓர் வேண்டுகோள் / ஓர் வாய்ப்பு

நமது  வலைதள  அன்பர்களுக்கு  ஓர் வேண்டுகோள்  /  ஓர் வாய்ப்பு

http://cdn.vectorstock.com/i/composite/51,93/yellow-pencil-and-globe-publish-icon-vector-1815193.jpg
நமது வலைதளத்தில் பல நல்ல நல்ல செய்திகள் / அறிவியல் செய்திகள் / ஜோக்குகள் / வேலைவாய்ப்பு செய்திகள் / ஓவியங்கள்  / கவிதைகள் / சில பொது தகவல்கள்  /  அறிய செய்திகள்  இடம் பெறுவது வழக்கமான  ஒன்றாகும்.

 சில நாட்களாக நேரமின்மை காரணமாக  மேலே  குறிபிட்டவை  எல்லாம்  பெறுவது அரிதாகி  உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே .

எனவே  தாங்கள்  பார்த்த /  கேட்ட / படித்த / தங்களுக்கு உரிய  பதிவுகள்  என எதுவாயினும்  அதை  பின்வரும் மின்னஞ்சல் க்கு  அனுப்பினால்  அதை   தங்களின் பெயரோடு மற்ற நண்பர்களுக்கும், முகநூல்   அன்பர்களுக்கும், இதர  சமூக வலைதளத்திலும்  வெளியிட்டு  அனைவரும் பயன்பெற  வழிவகுக்கும் வழிவகுக்கும்  என்பதை  மறவாதீர் ...

மின்னஞ்சல்  : presschennaigraphix@gmail.com  (or)   mba.basheer@yahoo.com

ரூபாய் நோட்டில் மாற்றம்...!

ரூபாய் நோட்டில் மாற்றம்...!



கடந்த 2005ம் ஆண்டுக்கு முந்தைய ரூபாய் நோட்டுக்களை திரும்பப்பெற இந்திய ரிசர்வ் வங்கி முடிவு செய்து தற்போது புழக்கத்தில் உள்ள இந்த நோட்டுக்கள் ஏப்ரல் 1ம் தேதி முதல் ஜூன் இறுதி வரை வங்கிகளுக்கு சென்று மாற்றிக் கொள்ளலாம்என்று அறிவித்த நிலையில்,

2005ஆம் ஆண்டுக்கு முந்தைய ரூபாய் நோட்டை அடுத்தாண்டு ஜன.1 வரை மாற்றிக்கொள்ளலாம் என கால அவகாசம் அளித்து ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது..

நமது இந்திய ரூபாய் நோட்டுக்கள் அவசரத்திற்கும், ஆடம்பரத்திற்கும் உதவும் பேப்பராக பயன்படுத்தப்படுகின்றன.

பெரும் பாலும் படித்தவர்கள் மட்டுமல்ல, படிக்காதவர்களும் நம் ரூபாய் நோட்டுக்களை மதிப்பதே இல்லை.

அவரசத் தேவைக்கு அதில் தொலைபேசி எண்களை எழுதுவதற்கும், குறிப்புகளை எழுதுவதற்கும், ஒரு கட்டில் எத்தனை நோட்டுகள் இருக்கின்றன என்று எழுதுவதற்கும் ரூபாய் நோட்டுக்களைப் பயன்படுத்துகின்றனர்.

அதோடு மட்டுமல்லாமல் அரசியல் தலைவர்களுக்கும் கோயில்களில் கடவுளுக்கும், ரூபாய் நோட்டு மாலைகளை அணிவிக்கின்றனர். ரூபாய் நோட்டுக்கான மதிப்பு என்ன என்பதை அறிந்திருந்தும் அதனை கண்டு கொள்வதில்லை.

இதில் மிகவும் மோசமானது என்னவெனில் சிலர் தங்களுடைய பெயர்களை அதில் எழுதுகின்றனர்.

இதையடுத்து ரூபாய் நோட்டுகளில் எழுதினால் அந்த நோட்டு செல்லாது என்று ஏற்கெனவே ரிசர்வ் வங்கி அறிவித்திருந்த போதிலும் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் ரூபாய் நோட்டுகளில் எழுதுகிறவர்கள் எழுதிக் கொண்டு தான் இருக்கிறார்கள்.

இது ஒருபுறம் இருந்தாலும், வெளிநாடுகளின் சதியாலும், தீவிரவாதிகளாலும் இந்தியாவில் கள்ள நோட்டுகள் புழக்கத்தில் விடப்படுகின்றன. கள்ள நோட்டு புழக்கத்தால் இந்தியப் பொருளாதாரம் சீர்குலையும். பல்வேறு தீய சக்திகளால் நம் நாடு பல வழிகளிலும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்படுகின்றது.

 இவ்வாறான நிலையில்அண்மையில் ரிசர்வ் வங்க வெளியிட்ட ஒரு அறிக்கையில் “2005ம் ஆண்டுக்கு முன்பு வெளியிடப்பட்ட ரூபாய் நோட்டுக்களின் பின்புறம், அந்த நோட்டு எந்த ஆண்டு அச்சிடப்பட்டது என்ற விவரம் இருக்காது.

இதை வைத்து பொதுமக்கள் எளிதாக அதை அடையாளம் கண்டு கொள்ளலாம். இவ்வாறு ஆண்டு குறிப்பிடப்படாத ரூபாய் நோட்டுக்கள் வைத்திருக்கும் பொதுமக்கள், ஏப்ரல் 1ம் தேதி முதல் ஜூன் இறுதி வரை வங்கிகளுக்கு சென்று மாற்றிக்கொள்ளலாம். இந்த காலகட்டத்தில் நோட்டுக்களை மாற்ற எந்த ஆவணமும் தேவையில்லை.

வங்கி வாடிக்கையாளர்களும், வாடிக்கையாளர் அல்லாதவர்களும் இவ்வாறு ரூபாய் நோட்டுக்களை மாற்றிக்கொள்ளலாம்.

வரும் ஜூலை 1ம் தேதிக்கு பிறகு 10க்கும் அதிகமான ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்களை மாற்றுபவர்கள், தங்களது அடை யாள சான்று, இருப்பிடச்சான்றுடன், உரிய ஆவணங்கள் சமர்ப்பித்து மாற்றிக்கொள்ளலாம். இந்த அறிவிப்பு குறித்து மக்கள் பீதியடைய வேண்டாம்.

ரூபாய் நோட்டுக்களை மாற்றுவதற்கு அவர்கள் ஒத்துழைப்பு தரவேண்டும் என்று அறிவித்த நிலையில் தற்போது இத்தகைய முந்தைய ரூபாய் நோட்டை அடுத்தாண்டு ஜன.1 வரை மாற்றிக்கொள்ளலாம் என கால அவகாசம் அளித்து, ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.